வதந்தி சீசன் 2 வெப் சீரிஸில் ஹீரோவாக களமிறங்கும் சசிகுமார்.. வெளியான அறிவிப்பு!
Sasikumar New Web Series Announcement : தமிழ் சினிமாவில் இயக்குநராக நுழைந்து, தற்போது ஹீரோவாகவே படங்களில் நடித்துவருபவர் சசிகுமார். இவரின் நடிப்பில் இறுதியாக மை லார்ட் என்ற படமானது வெளியான நிலையில், அதையடுத்து அவர் நடிக்கவுள்ள புது வெப் தொடரின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோலிவுட் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இயக்குநராக நுழைந்தவர் சசிகுமார் (Sasikumar). இவர் இயக்குநராக மொத்தம் 2 படங்கள் மட்டுமே இயக்கியுள்ளார். இவர் இயக்கியிருந்த இரு படங்களிலும் இவர் நடித்து பிரபலமான நிலையில், நடிகராக தொடர்ந்து படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். இவர் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் முதல் முத்தையா உள்ளிட்ட பல்வேறு இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியாகியிருந்த திரைப்படம்தான் மை லார்ட் (My Lord). இந்த படத்தை இயக்குநர் ராஜு முருகன் (Raju Murugan) இயக்க, கடந்த 2026ம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியானது.
சிறப்பான கதைக்களத்தில் வெளியாகியிருந்த இப்படம் திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இப்படத்திற்கு பின் சசிகுமார் பிரீடம், யாத்திசை இயக்குநருடன் புது படம் மற்றும் நந்தன் பட இயக்குநருடன் புது படங்களில் ஒப்பந்தமாகியிருந்தார். இந்நிலையில், அவர் நடித்துவரும் புது வெப் சீரிஸ் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.




இதையும் படிங்க: துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டேவின் ஸ்ரீ ஸ்ரீ பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ!
நடிகர் சசிகுமார் நடிக்கும் புது வெப் சீரிஸ் குறித்து வெளியான அறிவிப்பு:
#Vadhandhi is back with second season. This time, it’s going to be headlined by @SasikumarDir, who will play a cop and the investigating officer.
First look on July 27 @ 4 PM #Vadhandhi2 pic.twitter.com/WOVHKNS2cd
— Haricharan Pudipeddi (@pudiharicharan) July 26, 2026
நடிகர் சசிகுமார் தற்போது வெப் சீரிஸில் நடிகராக நடிக்கவுள்ளார். இயக்குநர் ஆண்ட்ரு லூயிஸ் இயக்கத்தில் உருவாகிவரும் வதந்தி சீசன் 2 வெப் தொடரில் அவர் நடித்துவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெப் தொடரின் முதல் பார்வை வரும் 2026 ஜூலை 27ம் தேதியில் மாலை 4 மணியளவில் வெளியாகவுள்ளதாம். இந்த வெப் டதொடரானது கடந்த 2022ம் ஆண்டில் எஸ்.ஜே.சூர்யா நடித்த வெப் தொடரின் தொடர்ச்சியாக அல்லாமல், புது கதையில் உருவாகியுள்ளதாம்.
சசிகுமாரின் நடிப்பில் வெளியாகாத படம்:
நடிகர் சசிகுமாரின் நடிப்பில் மை லார்ட் படம் இறுதியாக வெளியானது. இப்படத்திற்கு முன்னே இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் இவர் நடித்துவந்த படம்தான் ப்ரீடம். இப்படமானது இலங்கை அகதிகள் மற்றும் போலீசின் கொடுமைகள் பற்றிய கதைக்களத்தில் உருவாக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: பீச் வியூவில்.. ரூ 45 கோடி மதிப்புள்ள நடிகை பூஜா ஹெக்டேவின் வீடு.. அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?
இதில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிகை லிஜோமோல் ஜோஸ் நாயகியாக நடித்துள்ள நிலையில், இதில் ஆக்ஷன் வேடத்தில் சசிகுமார் நடித்திருந்தார். இப்படம் கடந்த 2025ம் ஆண்டில் ஜூலை மாதம் வெளியாகுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பின் தேதிகள் அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இன்றுவரையில் இப்படத்தின் ரிலீஸ் எப்போது என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் நடித்துவரும் புது படத்தின் அறிவிப்பு வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.