AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

16 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இயக்குநராக சசிகுமார்? – வைரலாகும் தகவல்!

Sasikumar Directs New Web Series: கோலிவுட் சினிமாவில் பிரபலமான இயக்குநரும், நடிகருமாக இருந்துவருபவர் சசிகுமார். இவர் இயக்குநராக சினிமாவில் நுழைந்த நிலையில், தற்போது நடிகராகவே படங்களில் பணியாற்றுகிறார். அந்த வகையில் இவர் புதிதாக வேவ் சீரிஸ் ஒன்றில் இயக்கி நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

16 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இயக்குநராக சசிகுமார்? – வைரலாகும் தகவல்!
சசிகுமார்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 06 Jul 2026 17:35 PM IST

இயக்குநராக சினிமாவில், அறிமுகமாகி தற்போது சிறப்பான நடிகராக இருந்துவருபவர் சசிகுமார் (Sasikumar). இவரின் நடிப்பில் தமிழில் தொடர்ந்து புது புது படங்கள் வெளியாகிவருகிறது. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியாகிய படம் மை லார்ட் (My Lord). கடந்த 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியான இப்படம் ஓரளவு நல்ல வரவேற்பை கொடுத்தது. இந்த படத்திற்கு பின் இவரின் நடிப்பில் கிட்டத்தட்ட 2 படங்கள் உருவாகியுள்ள நிலையில், இன்னும் வெளியாகாமல் உள்ளது. அதிலும் ப்ரீடம் (Freedom) என்ற படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் ட்ரெய்லர் வெளியாகியுள்ள படத்தை இன்னும் படக்குழு வெளியிடவில்லை. இப்பட தயாரிப்பு நிறுவனத்தின் பக்கம் எதுவும் கடன் பிரச்சனையாக இருக்கலாம் என கூறப்படுகிறது. தற்போது புது படத்தில் இயக்குநரும், நடிகருமான சசிகுமார் இணைந்து நடித்துவருகிறார்.

இவர் புதிதாக வெப் தொடர் (Web Series) ஒன்றை இயக்கி, அதில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சசிகுமார் இறுதியாக கிட்டத்தட்ட 16 வருடங்களுக்கு முன் ஈசன் (Easan) என்ற படத்தை இயக்கியிருந்தார். அதற்கு பின் புதிதாக வெப் தொடரை இயக்குவதாக தகவல்கள் வெளியாகிவருகிறது.

இதையும் படிங்க: காட் ஆப் வார் படம் குறித்து எதுவும் தெரியாது – தயாரிப்பாளர் நாக வம்சி ஓபன் டாக்!

வெப் சீரிஸ் இயக்கும் சசிகுமார்:

இயக்குநர் சசிகுமார் இறுதியாக 2010ம் ஆண்டில் வெளியான ஈசன் என்ற படத்தை இயக்கியிருந்தார். இதற்கு பின் எந்த படங்களை இவர் இயக்கவில்லை. தொடர்ந்து ஹீரோவாகவே படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார். கடந்த சில மாதங்களுக்கு முன் புது படம் ஒன்றை இயக்குவதாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்தார். ஆனால அது குறித்து எந்தவித தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.

இதையும் படிங்க: சூர்யா 47 படம் எப்படி இருக்கும்? இணையத்தில் வைரலாகும் தகவல்

தற்போது ஒரு புத்தக கதையை வெப் தொடராக இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் நடிகரும், எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி எழுதிய குற்றப் பரம்பரை என்ற புத்தகத்தை வெப் தொடராக இயக்க சசிகுமார் திட்டமிட்டுள்ளாராம். இதில் அவரே லீட் ஹீரோவாக நடிக்க, சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகிறது.

சசிகுமார் வெப் தொடர் இயக்குவது குறித்து வைரலாகும் எக்ஸ் பதிவு:

சசிகுமார் தற்போது புதிதாக படம் ஒன்றில் நாயகனாக நடித்துவருகிறார். அந்த படத்தின் ஷூட்டிங்கை முடித்தபிறகே, இந்த வெப் சீரிஸை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Follow Us