AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கல்யாண கோலம் மாறுவதற்குள் பரபரப்பு.. மாமனார் வீட்டில் இறக்கிவிடப்பட்ட மனைவி.. காதலியுடன் எஸ்கேப்- ஆன புதுமாப்பிள்ளை!

Theni Newlywed Man Missing: தேனி மாவட்டத்தில் திருமணம் ஆன 9 நாளில் தனது மனைவியை மாமனார் வீட்டில் இறக்கி விட்டு காதலியுடன் ஓடிச் சென்ற புது மாப்பிள்ளையை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கல்யாண கோலம் மாறுவதற்குள் பரபரப்பு.. மாமனார் வீட்டில் இறக்கிவிடப்பட்ட மனைவி.. காதலியுடன் எஸ்கேப்- ஆன புதுமாப்பிள்ளை!
கோப்புப்படம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 06 Jul 2026 18:28 PM IST

தேனி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 21 வயது இளைஞர். இவருக்கும், தேனி பகுதியை சேர்ந்த 19 வயது இளம் பெண்ணுக்கும் கடந்த ஜூன் 26- ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், அந்த இளைஞர் தனது மனைவியுடன் கடந்த ஜூலை 3- ஆம் தேதி தனது மாமனார் வீட்டுக்கு சென்றிருந்தார். அங்கு, தனது மனைவியை விட்டுவிட்டு வெளியே சென்ற இளைஞர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட மனைவி ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். இதனால், அந்த இளைஞரின் குடும்பத்தினர் மற்றும் அவரது மாமனார் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் அந்த இளைஞர் கிடைக்கவில்லை. இதுகுறித்து, அந்த பெண் தேனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

திருப்பூர் பகுதியில் பதுங்கி இருந்த இளைஞர்

இதில், அந்த இளைஞர் திருப்பூர் பகுதியில் இருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, அந்த இளைஞரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளிவந்தது. அந்த இளைஞர் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், இந்த காதலுக்கு அந்த இளைஞரின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்காமல் வேறொரு பெண்ணுடன் திருமணம் நடத்தி வைப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், அதிருப்தி அடைந்த தனது மனைவியை அவரது தந்தை வீட்டில் மாயமாகி உள்ளார்.

மேலும் படிக்க: பெற்றோர் திட்டியதால் கோபித்து கொண்டு ஓட்டம்.. சென்னையில் மாயமான சிறுவர்களை தேடும் காவல்துறை!

மனைவியை தவிக்க விட்டு காதலியுடன் சென்றார்

அத்துடன், தான் ஏற்கனவே காதலித்து வந்த பெண்ணை அழைத்துக் கொண்டு திருப்பூரில் தனியாக வீடு எடுத்து தங்கி குடும்பம் நடத்தி வந்ததும் தெரிய வந்தது. மேலும், அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, அந்த இளைஞரின் பெற்றோர் அவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.

திருமணமான 9 நாளில் புதுமாப்பிள்ளை ஓட்டம்

இதனை ஏற்றுக் கொள்ளாத அந்த இளைஞர் கட்டாய திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால், திருமணம் நடைபெற்ற 9 நாட்களில் புதுமணப் பெண்ணை தனது மாமனார் வீட்டில் விட்டுவிட்டு புது மாப்பிள்ளை தனது காதலியுடன் மாயமான சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக, போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: வாட்ஸ் ஆப் DP-யை மாற்றி வலை.. நடிகர் கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் மோசடி முயற்சி!

Follow Us