AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நானி – வெங்கி அட்லூரி படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது? வைரலாகும் தகவல்

Actor Nani and Director Venky Atluri movie update | தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் நடிகர் நானி மற்றும் முன்னணி இயக்குநராக வலம் வரும் இயக்குநர் வெங்கி அட்லூரி இணையும் படம் தொடர்பான அப்டேட் வைரலாகி வருகின்றது.

நானி – வெங்கி அட்லூரி படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது? வைரலாகும் தகவல்
நானி - வெங்கி அட்லூரிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 06 Jul 2026 18:25 PM IST

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் வெங்கி அட்லூரி. இவரது இயக்கத்தில் தெலுங்கு சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து தெலுங்கு மொழியில் மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி தெலுங்கு சினிமாவில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியானது தொலி பிரேமா. இந்தப் படத்தின் மூலமாக சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் இயக்குநர் வெங்கி அட்லூரி. படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இயக்குநர் வெங்கி அட்லூரி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தார். இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியான படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் இதுவரை மொத்தம் 5 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

அதில் இறுதியாக நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவான லக்கி பாஸ்கர் படம் வெளியானது. இந்தப் படம் பான் இந்திய அளவில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் அடுத்ததாக நடிகர் சூர்யா நடிப்பில் உருவான விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில் பிசியான இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் இயக்குநர் வெங்கி அட்லூரி அடுத்ததாக இயக்க உள்ள படம் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நானி – வெங்கி அட்லூரி படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது?

வெங்கி அட்லூரி கூறிய கதையின் க்ளைமேக்ஸ் காட்சியால் ஈர்க்கப்பட்ட நடிகர் நானி, அவருடனான படத்தின் கூட்டணிக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளதாகத் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்று கூறப்படுகின்றது. இப்படத்தின் படப்பிடிப்பு அட்டவணை நானியின் பிற படங்களுக்கான பணிகளைப் பொறுத்து அமையும் என்றாலும், தி பாரடைஸ் மற்றும் பிளடி ரோமியோஆகிய படங்களுக்குப் பிறகு இது தொடங்கப்படும் என்று தற்போது எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read… Kajal Aggarwal: விஜய் அதற்காகவே பிறந்தவர்.. காஜல் அகர்வால் ஓபன் டாக்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… சிறுத்தை படத்தில் நடித்த சிறுமியா இது.. இப்போ ஆளே மாறிட்டாங்க பாருங்களே!

Follow Us