Kajal Aggarwal: விஜய் அதற்காகவே பிறந்தவர்.. காஜல் அகர்வால் ஓபன் டாக்!
Kajal Aggarwal Heartfelt Words About CM Vijay: சினிமாவில் கிட்டத்தட்ட 19 ஆண்டுகளுக்கும் மேலாக கதாநாயகியாக நடித்து அசத்திவருபவர் காஜல் அகர்வா. இவரின் நடிப்பில் தொடர்ந்து புது படங்கள் உருவாகிவருகிறது. அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், முதல்வர் விஜய் குறித்து நெகிழ்ச்சியாக பேசியிருக்கிறார்.
நடிகை காஜல் அகர்வால் (Kajal Aggarwal) தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நாயகியாக இருந்துவருகிறார். கடந்த 2007ம் ஆண்டில் தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி, தற்போது தமிழ், இந்தி போன்ற மொழி படங்களிலும் நாயகியாக நடித்துவருகிறார். இவர் நாயகியாக கிட்டத்தட்ட 19 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் நடித்துவருகிறார். இவர் தமிழில் தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் சூர்யா (Suriya) உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்திருகிறார். அந்த வகையில்,2026ம் ஆண்டில் இவரின் நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராகியுள்ள படம்தான் தி இந்தியா ஸ்டோரி (The India Story). இப்படத்தை இயக்குநர் சேட்டன் டிகே (Cheytan Dk) இயக்க, காஜல் அகர்வால் மற்றும் அஷ்வின் பாண்டே இணைந்து நடித்துள்ளனர்.
விவசாயத்தில் நடக்கும் ஊழல் குறித்த கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ள நிலையில், 2026ம் ஆண்டு ஜூலை 24ம் தேதியில் வெளியாகிறது. அந்த வகையில் இப்படத்தின் புரோமோஷன் தொடர்பாக நேர்காணல் ஒன்றில் காஜல் அகர்வால் கலந்துகொண்டிருந்தனர். அதில் தமிழக முதல்வர் குறித்து தனது நெகிழ்ச்சியான கருத்தை தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க: ரொமாண்டிக் காமெடி பாணியில் வெளியானது இதயம் முரளிப் படத்தின் ட்ரெய்லர்
முதல்வர் விஜய் குறித்து நடிகை காஜல் அகர்வால் பகிர்ந்த விஷயம்:
காஜல் அகர்வாலை கலந்துகொண்ட பேட்டியில் அவரிடம் தொகுப்பாளர், “விஜய் குறித்து சொல்லுங்கள்” என கேட்டிருந்தார். அதற்கு உடனே பதிலளித்த காஜல் அகர்வால்,”அவர் இன்னும் அதிகம் சாதிப்பதற்காகவே பிறந்தவர். மேலும் அவர் பலவிதமான பொறுப்புகளை கொண்டவர்” என அதில் அவர், தமிழக முதல்வர் விஜய் குறித்து பேசியிருக்கிறார்.
முதலமைச்சர் விஜய் குறித்து நடிகை காஜல் அகர்வால் பேசியது தொடர்பான வீடியோ பதிவு:
About #NTR 😍
His Energy, His Enthusiasm, and his zest for life 🔥#TheIndiaStory #KajalAggarwal pic.twitter.com/1TnYGfW0cD
— 𝐊α𝗃αᥣ𝗂α𐓣 👻 (@Ayesha_kajalfan) July 4, 2026
தளபதி விஜய் மற்றும் காஜல் அகர்வால் கூட்டணி படங்கள் :
தமிழில் தளபதி விஜய் மற்றும் காஜல் அகர்வாலின் கூட்டணி படங்கள் மக்கள் மத்தியில் சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. இவர்கள் கூட்டணியில் இதுவரை மொத்தம் 3 படங்கள் வெளியாகியிருக்கிறது. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான துப்பாக்கி (2012) படத்தின் மூலம் முதல் முதலில் இணைந்திருந்தது.
இதையும் படிங்க: அவரு இனிமே தளபதி இல்ல.. CM- சார்… முதல்வர் விஜய் குறித்து பேசிய கீர்த்தி சுரேஷ்!
இந்த அதையடுத்து 2014ம் ஆண்டில் இயக்குநர் ஆர். டி. நீசன் இயக்கத்தில் ஜில்லா படத்தில் இணைந்திருந்தது. இதையடுத்து இறுதியாக இயக்குநர் அட்லீ இயக்கத்தில் வெளியான மெர்சல் படத்திலும் விஜய் நடித்த வெற்றி என்ற கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.