ராமாயணா படம் குறித்து மனம் திறந்த நடிகை காஜல் அகர்வால்
Actress Kajal Aggarwal Talks About Ramayana Movie | பான் இந்திய மொழிகளில் பிரபல நடிகையாக உள்ள நடிகை காஜல் அகவர்வால் ராமாயணா படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசியது தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
தெலுங்கு சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி தற்போது தமிழ், இந்தி என பான் இந்திய மொழிகளில் நாயகியக நடித்து வருகிறார் நடிகை காஜல் அகர்வால். இவர் இந்தி சினிமாவில் சிறிய வேடத்தில் முன்னதாக நடித்து இருந்தாலும் தெலுங்கு சினிமாவில் தான் நாயகியாக் நடிக்கத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் பான் இந்திய மொழிகளில் முன்னணி நடிகர்கள் பலருக்கு ஜோடியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடித்து வந்த நடிகை காஜல் அகர்வால் தற்போது தொடர்ந்து அதிக அளவில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார். மேலும் முன்னணி நடிகர்களின் படங்களில் இரண்டாம் நாயகியாக தற்போது நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அடுத்ததாக அவர் நடித்து வரும் ராமாயணா படத்தில் நடித்து வருகிறார்.
இந்தி மொழியில் உருவாகும் இந்தப் படத்தில் நடிகர் ரன்பீர் கபூர் ராமராக நடித்து வரும் நிலையில் சாய் பல்லவி சீதா வேடத்தில் நடித்து வருகிறார். தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த சாய் பல்லவி தற்போது இந்தி மொழிகளிலும் அடுத்தடுத்தப் படங்களில் நடித்து வருகிறார். மேலும் இந்தப் படத்தில் நடிகை காஜல் அகர்வால் முக்கிய வேடத்தில் நடித்து வரும் நிலையில் படம் குறித்து அவர் பேட்டி ஒன்றில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




ராமாயணா படம் குறித்து மனம் திறந்த நடிகை காஜல் அகர்வால்:
ராமாயணம் படம் சார்ந்த அனுபவம் மிகவும் வித்தியாசமானதாக இருந்தது. ஏனெனில், தொழில்நுட்ப ரீதியாக இது ஒரு மிகச்சிறந்த படைப்பு. இந்தியா இதுவரை கண்டிராத ஒரு விஷயம் இது. நடிகர்களாகிய நாங்கள் இது போன்ற ஒரு முயற்சியில் ஈடுபடுவது இதுவே முதல் முறை. இது இயல்பாகவே ஒரு இந்தியக் கதை என்பதோடு, எங்கள் இதயங்களுக்கு மிகவும் நெருக்கமானதும் கூட என்று அவர் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Ramayana experience was so different because it’s technically a superior production. It’s just something India has never witnessed before, and as actors, it’s pretty much the 1st time that we’re doing something like this. It’s an intrinsically Indian story, and it’s so close to… pic.twitter.com/UEkURBMLRM
— Movies Singapore (@MoviesSingapore) June 7, 2026
Also Read… நோ ஷாருக்கான்… நோ ஹ்ரித்திக் ரோஷன்… கேமியோவில் புது முடிவு எடுத்த ஜெயிலர் 2 படக்குழு!