Ravi Mohan: நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதாக ஆர்த்தி ரவி வழக்கு.. பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ரவி மோகன்!
Ravi Mohan Apologizes for Divorce Comments; புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் ரவி மோகன். இவர் தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்த நிலையில், அதுகுறித்து பொது இடங்களில் பேசக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது. சமீபத்தில் அதை கண்டுகொள்ளாமல் ரவி மோகன் பேசிய நிலையில், அதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
தென்னிந்திய மக்கள் மத்தியில் பிரபலமான நடிகராக இருந்துவருபவர் ரவி மோகன் (Ravi Mohan). இவர் சினிமாவில் படங்களை இயக்குவதை தொடர்ந்து, திரைப்படங்களை தயாரிக்கவும் ஆரம்பித்துவிட்டார். ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற நிறுவனத்தின் கீழ், தனது இயக்கத்தில் யோகி பாபு (Yogi Babu) நடிக்கும் “அன் ஆர்டினரி மேன்” என்ற படத்தை உருவாக்கிவருகிறார். மேலும் ரவி மோகன் கடந்த 2024ம் ஆண்டு இறுதியிலிருந்து விவகாரத்து தொடர்பாக பல சிக்கல்களை சந்தித்துவருகிறார். இவர் அவரின் மனைவி ஆர்த்தி ரவியை (Aarthi Ravi) விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்த நிலையில், இவர்கள் இருவரின் வழக்கானது சென்னை உயர்நீதிமன்றத்தில் (Chennai High Court) இன்னும் நடந்துவருகிறது. இன்னும் இவர்களுக்கு விகாரகத்து கிடைக்காத நிலையில், தங்களின் விவாகரத்து குறித்து பொது இடங்களிலோ அல்லது மீடியாக்களிலோ பேசக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சமீபத்தில் செய்தியாளர்களை அழைத்து நேரில் பேசிய ரவி மோகன், தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். மேலும் ஆர்த்தி மற்றும் தனது விவாகரத்து குறித்து அதில் பேசியிருந்தார். இதனால் நீதிமன்றத்தில் உத்தரவை மீறியதாக ஆர்த்தி ரவி வலக்கை தொடர்ந்த நிலையில், ரவி மோகன் மன்னிப்பு கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஜன நாயகன் ரிலீஸாகுதுனா நூறு சாமி ஒத்திவைக்க தயார் – விஜய் ஆண்டனி ஓபன் டாக்
நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதற்கு மன்னிப்பு கேட்ட ரவி மோகன் :
ரவி மோகன், நீதிமன்றம் அளித்த உத்தரவை மீறிய நிலையில், அவரின் மனைவி ஆர்த்தி ரவி வழக்கு தொடர்ந்துள்ளார். இதனால், “ஊடகங்களில் விவாகரத்து பற்றி பேசியது தவறுதான் என ரவி மோகன் பகிரங்கமாக மன்னிப்பு கூறியுள்ளாராம். அவரின் கருத்தால் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் வருத்தத்தையும், மன்னிப்பையும் கேட்டுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்”. தற்போது இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது.
இதையும் படிங்க: அட்லீயின் படத்தில் ஹீரோவாக நடிக்கும் பிரதீப் ரங்கநாதன்? – வைரலாகும் செய்தி!
பென்ஸ் படத்தில் இணைந்தது பற்றி ரவி மோகன் வெளியிட்ட பதிவு:
Thank you dear brother 😊 https://t.co/1sFajKuoaG
— Ravi Mohan (@iam_RaviMohan) June 1, 2026
மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கிய ரவி மோகன்:
ரவி மோகன் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில், தனக்கு விவாகரத்து கிடைக்கும் வரையில் நடிக்கப்போவதில்லை என தெரிவித்திருந்தார். இதற்கு பிறகு, நடிகர் கார்த்தி அவரை நேரில் சந்தித்து பேசியதாகவும், இதனால் மனம் திருந்தி மீண்டும் நடிக்கவந்ததாக கூறப்படுகிறது. இவர் தற்போது ராகவா லாரன்ஸ் மற்றும் லோகேஷின் பென்ஸ் படத்தில் முக்கிய வேடத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



