Keneeshaa: ரவி மோகன் – ஆர்த்தி ரவியின் விவகாரம்.. வெளிப்படையாக அதிரடி பதில் கொடுத்த பாடகி கெனிஷா!
Keneeshaa Francis Emotional Video: ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தி ரவியை விவகாரத்து செய்வதாக கடந்த 2024ம் ஆண்டு இறுதியிலே அறிவித்திருந்தார். அந்த வகையில் தற்போது இவர் பாடகி கெனிஷாவுடன் பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சுற்றிவரும் நிலையில், விமர்சனங்கள் எழுகிறது. தற்போது அதற்கு விளக்கம் கொடுத்து விதத்தில் கெனிஷா வீடியோவை வெளியிட்டுள்ளார்.
நடிகர் ரவி மோகன் (Ravi Mohan) தமிழ் சினிமாவில் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக தமிழில் வெளியாகிய திரைப்படம் பராசக்தி (Parasakthi). இந்த படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்திருந்தார். இப்படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியிருந்த நிலையில், சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தை முடித்த கையேடு கராத்தே பாபு (Karathey Babu) என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட வேலைகளில் இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் கேரளாவில் நடந்த விருது வழங்கும் விழாவில் ரவி மோகனுக்கு சிறப்பு விருதும் கிடைத்திருந்தது. இந்த நிகழ்ச்சியில் பாடகியும், தோழியுமான கெனிஷா பிரான்சிஸுடன் (Keneeshaa Francis) கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியின்போது கெனிஷா, ரவி மோகனின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டுமேடையில் பட்டு பாடியிருந்தார்.
இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகிவந்தது. ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ரவி (Arthi ravi) குறித்து ஊடகங்களின் அவதூறாக கெனிஷா பேசுவதாக கூறப்பட்ட நிலையில், அவர்களை பற்றி தவறாக பதிவிடக்கூடாது என நீதிமன்றம் கெனிஷாவிற்கு தடை வித்திருந்தது. இந்நிலையில் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ரவி விவகாரம் குறித்து வீடியோ ஒன்றை கெனிஷா வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கருப்பு பட முதல் காட்சி.. ரசிகர்களுடன் திரையரங்கில் பார்வையிட்ட படக்குழு!
ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ரவியின் விவகாரம் குறித்து பாடகி கெனிஷா வெளியிட்ட வீடியோ பதிவு:
View this post on Instagram
அந்த வீடியோவில் பேசிய பாடகி கெனிஷா, “என்னை விமர்சிப்பதற்கு முன் என்னை யார் என தெரிந்துகொண்டு விமர்சியுங்கள்” என அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளார். மேலும் அதில், “நான் சிறுவயதிலே அம்மா அப்பாவை இழந்தேன், உறவினர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன். பின்னர் நடந்த திருமண வாழ்க்கையில் நடந்த வன்முறையால், எனது கருவில் இருந்த குழந்தையையும் இழந்தேன். இந்த துயரத்தில் இருந்து மீள்வதற்காக பல போராட்டங்களை சந்தித்தேன்.
இதையும் படிங்க: ஆக்ஷன் கிங் அர்ஜுனின் பிளாஸ்ட் படத்தின் ரிலீஸ் தேதியை லாக் செய்தது படக்குழு
எனது அப்பா, அம்மா மற்றும் குழந்தை என அனைத்தையும் இழந்த நான், ரவி மோகனின் குடும்பத்தை கெடுப்பதற்கு நினைப்பேனா?, ரவி மோகன் ஒன்றும் குழந்தை கிடையாது. அவரது வாழ்க்கையில் என்ன செய்யவேண்டும் என்பதை முடிவெடுக்க கூடியவர் அவர்தான். அவ்வாறு இருக்கும்போது என்னை ஏன் இந்த பிரச்சனையில் இழுக்கிறீர்கள். சமூகத்தில் மக்களின் உண்மையான பிரச்சனைகள் ஏராளமாக உள்ளது அவற்றை பற்றி பேசுங்கள்” என அந்த வீடியோவில் அவர் தெரிவித்துள்ளார். தற்போது இது குறித்த தகவல் இணையத்தில் வைரலாகிவருகிறது.



