AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திரையுலகில் 50 ஆண்டுகள்… நான் இல்லாத போது கூட – இளையராஜா பகிர்ந்த தகவல்

அன்னக்கிளி படம் வெளியாகி மே 14, 2026 தேதியுடன் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. அதாவது இசையமைப்பாளராக இளையராஜா திரையுலகில் அடியெடுத்து வைத்து 50 ஆண்டுகளாகிறது. இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், வருடங்கள் தான் போய்க்கொண்டிருக்கிறதே தவிர நான் அப்படியே தான் இருக்கேன் என்றார்.

திரையுலகில் 50 ஆண்டுகள்… நான் இல்லாத போது கூட – இளையராஜா பகிர்ந்த தகவல்
இளையராஜா
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 14 May 2026 21:46 PM IST

கடந்த மே 14, 1976 ஆம் ஆண்டு வெளியான படம் அன்னக்கிளி. இந்தப் படம் வெளியாகி இன்றுடன் 50 ஆண்டுகளாகிறது. அதாவது இந்தப் படத்தின் இசையமைப்பாளராக அறிமுகமான இசைஞானி இளையராஜா அறிமுகமாகி 50 ஆண்டுகளாகிறது. இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.  இசையமைப்பாளராக தமிழ் சினிமாவின் பல வழக்கங்களை உடைத்தவர் இளையராஜா. குறிப்பாக நாட்டுப்புற இசையையும் மேற்கத்திய இசையையும் இணைத்து புதிய வடிவில் தருவதில் அவர் வல்லவர். மேலும் நாட்டுப்புற இசை, கர்நாடக இசை,  ஹிந்துஸ்தானி, மேற்கத்திய இசை  பல்வேறு வகைகளில் இசையமைப்பதில் வல்லவர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, மராத்தி, ஆங்கிலம் என 1400க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்திருக்கிறார். இன்றும் ஒரு புதிய இசையமைப்பாளர் போல படங்களுக்கு பரபரப்பாக இசையமத்து வருகிறார்.

இதையும் படிக்க : ஜனநாயகனை போல கருப்பு படமும் ஆன்லைனில் லீக்? தயாரிப்பாளர்கள் பரபரப்பு தகவல்

இந்த 2026 ஆம் ஆண்டு மைலாஞ்சி, ஆண்டனி, லெனின் பாண்டியன் என இளையராஜா இசையமைப்பில் படங்கள் வெளியாகியிருக்கிறது. தற்போது தியாகராஜன் குமாரராஜாவின் இயக்கத்தில் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிக்கும் பாக்கெட் நாவல், பிரபல ஹிந்தி இயக்குநர் பால்கியின் தமிழ் படம் ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இளையராஜாவின் 50 வருட கொண்டாட்டம்

 

தமிழக அரசு சார்பில் அவரது சிறப்பை கொண்டாடும் வகையில் பாராட்டு விழா நடைபெற்றது. அதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் கலந்துகொண்டு இளையராஜாவை வாழ்த்தினர். இந்த நிலையில் திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இளையராஜா மே 14, 2026 அன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், உங்களுக்கு தான் 50 வருஷம்.. எனக்கு வருடங்களே கிடையாது. வருடங்கள் தான் போய்க்கொண்டிருக்கிறதே தவிர நான் அப்படியே தான் இருக்கேன் என்றார்.

இதையும் படிக்க : கருப்பு படத்தின் ரிலீஸில் ஏற்பட்ட சிக்கல்… எமோஷ்னலான வீடியோவை வெளியிட்ட ஆர்.ஜே.பாலாஜி

இப்போது கூட பால்கியின் தமிழ் படத்துக்கு இசையமைத்து வருகிறேன். நான் எங்கிருந்து எப்படி வந்தேனோ இப்போது வரை அப்படியே இருக்கிறேன். அதைத் தவிர எனக்கு ஒன்றும் தெரியாது. என் மனது சுத்தமாக இருக்கிறது. இசையமைக்கும்போது எந்த நினைப்பும் இருக்காது. நான் பாட்டை உருவாக்குவதற்கு முன் அது எங்கிருந்தது? மக்கள் என்னைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். என்னை எல்லோரும் கொண்டாடுகிறார்கள். நான் இல்லாத போதும் கூட அந்த கொண்டாட்டம் தொடர்ந்து கொண்டிருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும் என்றார்.

Follow Us