Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Ilaiyaraaja: டியூட் படத்திலிருந்து இளையராஜாவின் பாடலை நீக்கவேண்டும்.. உயர் நீதிமன்றம் அதிரடி!

Ilaiyaraaja Dude Movie Song Copyright Case: தமிழ் சினிமாவில் கடந்த 2025 அக்டோபர் 17ம் தேதியில் தீபாவளியை முன்னிட்டு வெளியான படம்தான் டியூட். இந்த படத்தில் இளையராஜாவின் சில பாடல்கள் இடம்பெற்றிருந்த நிலையில், அதற்கு எதிராக அவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அந்த பாடல்களை படத்திலிருந்து நீக்க உத்தரவிட்டுள்ளது.

Ilaiyaraaja: டியூட் படத்திலிருந்து இளையராஜாவின் பாடலை நீக்கவேண்டும்.. உயர் நீதிமன்றம் அதிரடி!
இளையராஜா டியூட் பட பாடல் காப்புரிமை வழக்குImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 28 Nov 2025 15:03 PM IST

நடிகர் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan) நடிக்க, அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் (Keerthiswaran) இயக்கத்தில் கடந்த 2025 அக்டோபர் 17ம் தேதியில் வெளியான திரைப்படம்தான் டியூட் (Dude). இந்த திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்க, நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படமானது வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று சுமார் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. இந்த படத்தில் இளையராஜாவின் (Ilaiyaraaja) 2 பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருந்த நிலையில், சோனி நிறுவனத்துக்கு எதிராக இளையராஜா உயர்நீதி மன்றத்தில் (High Court) வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த டியூட் படத்தில் இளையராஜாவின் இசையமைப்பில் வெளியான புது நெல் புது நாத்து படத்திலிருந்து வெளியான “கருத்த மச்சான்” (karutha machan) மற்றும் பணக்காரன் படத்திலிருந்து வெளியான “நுறு வருஷம்” போன்ற பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருந்தது.

இந்த பாடல்கள் அனுமதியின்றி பயன்படுத்தியதாக கூறி இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த பாடல்களை அந்த படத்திலிருந்து நீக்கவேண்டும் என அவர் கோரிக்கை வைத்த நிலையில், வழக்கு விசாரிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு… சர்வதேச திரைப்பட விழாவில் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ பெரும் ரஜினிகாந்த்!

இளையராஜா வழக்கு தொடர்பாக வைரலாகும் பதிவு :

இளையராஜா டியூட் பட பாடல் வழக்கு விசாரணை :

இந்த வழக்கினை நீதிபதி என்.செந்தில்குமார் விசாரித்துள்ளார். இதில் இளையராஜாவின் தரப்பில் தங்களின் பாடல்கள் அனுமதியில்லாமல் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதற்கு தடை விதிக்க வேண்டும் என வாதிடப்பட்டுள்ளது. மேலும் இதற்கு எதிராக டியூட் பட நிறுவனம், இந்த பாடல்களின் உரிமையை எக்கோ நிறுவனத்தின் மூலம் சோனி நிறுவனத்திடம் பெற்றிருந்ததாக்வும், அதற்கு பிறகுதான் படத்தில் இந்த பாடலை பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கோமாளி படத்தின் கதையை இப்படித்தான் எழுதினேன்… – பிரதீப் ரங்கநாதன் பகிர்ந்த விஷயம்!

இருதரப்பு விவாதத்தையும் கேட்ட நீதிபதி, இளையராஜாவின் பாடல்களின் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கூறி, டியூட் படத்திலிருந்து இளையராஜாவின் இரு பாடல்களை நீக்கவேண்டும் என இடைக்கால தடையை விதித்துள்ளது. மேலும் இந்த வழக்கிற்கு உரிய பதிலை கொடுக்கும் வேண்டும் என மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த அடுத்த விசாரணை 2026ம் ஆண்டில்தான் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.