AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Gold Price : உயர்ந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

Gold Price Hiked and Silver Price Remain Same | ஈரான் போருக்கு மத்தியில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், இன்று சற்று உயர்வை சந்தித்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Gold Price : உயர்ந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 07 Mar 2026 10:44 AM IST

சென்னை, மார்ச் 07 : ஈரான் போருக்கு (Iran War) மத்தியில் தங்கம் (Gold) மற்றும் வெள்ளி விலை (Silver Price) குறைந்து வந்த நிலையில், இன்று (மார்ச் 07, 2026) சற்று உயர்வை சந்தித்துள்ளது. அதாவது சென்னையில் இன்று கிராமுக்கு ரூ.90 உயர்வை சந்தித்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

தொடர் சரிவுக்கு பிறகு உயர்ந்த தங்கம் விலை

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் தொடுத்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக தங்கம் தொடர் சரிவை சந்தித்து வந்தது. ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடுவதாக அறிவித்த நிலையில், எண்ணெய் பற்றாக்குறை ஏற்பட்டு பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும் நிலை உருவாகும் என்ற அபாயம் நிலவியது. இந்த நிலையில், உலக அளவில் எண்ணெய்க்கான தேவை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்த நிலையில், தங்கம் விலை சரிய தொடங்கியது.  இந்த நிலையில் தான் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது.

இதையும் படிங்கா : உங்களிடம் ரூ.2000 நோட்டுகள் இருக்கா? ஈஸியா மாத்தலாம் – ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு

கடந்த 10 நாட்களுக்கான தங்கம் விலை நிலவரம்

தேதி  ஒரு கிராம் ஒரு சவரன் 
26 பிப்ரவரி 2026 ரூ.14,920 ரூ.1,19,360
27 பிப்ரவரி 2026 ரூ.14,900 ரூ.1,19,200
28 பிப்ரவரி 2026 ரூ.15,550 ரூ.1,24,400
01 மார்ச் 2026 ரூ.15,775 ரூ.1,126,200
02 மார்ச் 2026 ரூ.15,660 ரூ.1,25,280
03 மார்ச் 2026 ரூ.15,465 ரூ.1,23,720
04 மார்ச் 2026 ரூ.15,200 ரூ.1,21,600
05 மார்ச் 2026 ரூ.15,120 ரூ.1,20,960
06 மார்ச் 2026 ரூ.14,960 ரூ.1,19,680
07 மார்ச் 2026 ரூ.15,050 ரூ.1,20,400

இதையும் படிங்க : 2026-ல் இபிஎஃப்ஓ வட்டி விகிதம் 8.25% ஆகவே தொடரும்.. காரணம் இதுதான்!

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.90 குறைந்து ஒரு கிராம் ரூ.15,050-க்கும், சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,20,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலையில் வெள்ளி விலையில் எந்த வித மாற்றமுமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு கிராம் ரூ.290-க்கும், ஒரு சவரன் ரூ.2,90,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Follow Us