இதன் தொடர்ச்சியாக மார்ச் 3, 2026 அன்று ஒரே நாளில் தங்க விலை இருமுறை குறைந்தது. அதனைத் தொடர்ந்து இன்று மார்ச் 5, 2026 அன்று தங்கம் விலை சரிவை சந்தித்துல்ளது. அந்த வகையில் இன்றைய நிலவரப்படி 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.15, 120 ஆக விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.640 குறைந்து ரூ.1, 20, 960க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க : 2026-ல் இபிஎஃப்ஓ வட்டி விகிதம் 8.25% ஆகவே தொடரும்.. காரணம் இதுதான்!




இதற்கிடையில் வெள்ளி விலையில் மாற்றமும் இல்லை. அதன் படி வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.295 ஆகவும், கிலோவுக்கு ரூ.2,95,000 ஆகவும் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்கிறது. சர்வதேச சந்தை நிலவரம், மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் போர் பதற்றம் மற்றும் முதலீட்டாளர்களின் சந்தை அணுகுமுறை ஆகிய காரணங்களால் தங்க விலையில் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தங்கம் விலை சரிவின் பின்னணி
அணு ஆயுதம் தயாரிப்பது தொடர்பாக ஈரானை, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தொடர்ந்து எச்சரித்து வந்தது. இது தொடர்பான ஈரானுடன், அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாமல் இருந்தது. இதற்கிடையே தான் பிப்ரவரி 28, 2026 அன்று இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரானை தாக்கியது. இதன் காரணமாக ஈரான் மிக கடுமையான சேதங்களை சந்தித்தது. இந்த நிலையில், ஈரான் பதில் தாக்குதல் நடத்த தொடங்கிய நிலையில், 5வது நாளாக இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் இடியே போர் நீடித்து வருகிறது.
இதையும் படிக்க : SIP-ல் மாதம் ரூ.5,000 முதலீடு செய்தால் எத்தனை ஆண்டுகளில் ரூ.1 கோடி சேர்க்கலாம்.. தெரிந்துக்கொள்ளுங்கள்!
இதுபோன்ற சூழ்நிலைகளில் தங்கம் பாதுகாப்பான முதலீடாக கருதப்பட்டாலும், தற்போதைய சூழலில் முதலீட்டாளர்கள் டாலர் மற்றும் மற்ற முதலீடுகளுக்கு நோக்கி திரும்பியுள்ளனர். இதன் காரணமாக தங்கம் விலை 5 நாளாக சரிவை சந்தித்து வருகிறது.