வடகொரியாவிலிருந்து தப்பித்து உயிர் பிழைத்த ஒரு குடும்பத்தின் அதிரடியான கதை உலகம் முழுவதும் கவனம் ஈர்த்துள்ளது. இந்த குடும்பம், சுமார் 10 ஆண்டுகள் திட்டமிட்டு, வெறும் 2 மணி நேரத்தில் கடலைக் கடந்து தென் கொரியாவை அடைந்தது என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2023 மே 6ஆம் தேதி இரவு, ஒன்பது பேர் கொண்ட குடும்பம் வடகொரிய கடற்கரையிலிருந்து ஒரு சிறிய மீன்பிடி படகில் பயணம் தொடங்கியது. அவர்கள் Yellow Sea வழியாக சென்று, வட மற்றும் தென் கொரியா எல்லையான வடக்கு எல்லைக்கோட்டை கடந்தனர். வெறும் 2 மணி நேரத்தில் அவர்கள் பாதுகாப்பான தென் கொரியாவை அடைந்தனர். குடும்பத்தின் தந்தை 10 ஆண்டுகளுக்கு முன் இந்த திட்டத்தை தொடங்கினார்