உலகளவில் காலநிலை மாற்றம் தீவிரமடைந்து, இயற்கை பேரழிவுகள் அதிகரித்து வருகின்றன. வெப்பமயமாதல் மற்றும் வானிலை மாற்றங்களால் வெள்ளம், புயல், வெப்ப அலை, நிலநடுக்கம், வறட்சி, நிலச்சரிவு போன்றவை தொடர்ந்து ஏற்படுகின்றன. புவியியல் காரணங்களால் இந்தியா இவ்விபத்துகளால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக உள்ளது. Germanwatch வெளியிட்ட ‘Climate Risk Index 2026’ அறிக்கையின்படி, 1995 முதல் 2024 காலத்தில் உலகம் முழுவதும் 9,700 இயற்கை பேரழிவுகள் நிகழ்ந்து, 8.32 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா 9வது இடத்தில் உள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் 430-க்கும் மேற்பட்ட பேரழிவுகள் பதிவாகியுள்ளன.