ஜெர்மனியில் 6 தன்னார்வலர்கள் 100 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட சூழலில் வாழும் பரிசோதனையைத் தொடங்கியுள்ளனர். “SOLIS100” எனப்படும் இந்த ஆய்வு, European Space Agency முன்னிலையில், German Aerospace Centerஇன் கொலோன் ஆய்வு மையத்தில் நடைபெறுகிறது. Envihab வசதியில் அமைக்கப்பட்ட மூடப்பட்ட வாழ்விடத்தில், பங்கேற்பாளர்கள் மூன்று மாதங்கள் தங்கி, நிலா மற்றும் செவ்வாய் பயணங்களில் எதிர்பார்க்கப்படும் தனிமை, கட்டுப்பாடு மற்றும் மன அழுத்த சூழல்களை அனுபவிக்கின்றனர்.