AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Trisha Krishnan: பிரீத்தியாக திரிஷா கிருஷ்ணன்.. கேரக்டர் அறிவிப்பு வீடியோவை வெளியிட்ட கருப்பு படக்குழு!

Trisha Krishnan As Preethi In Karuppu: நடிகர் சூர்யாவின் நடிப்பில் 45வது திரைப்படமாக தயாராகியிருப்பதுதான் கருப்பு. இந்த படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்திருக்கும் நிலையில், அவரின் கதாபாத்திர அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் நடிகை திரிஷா கிருஷ்ணன், ப்ரீத்தி என்ற வேடத்தில் நடித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Trisha Krishnan: பிரீத்தியாக திரிஷா கிருஷ்ணன்.. கேரக்டர் அறிவிப்பு வீடியோவை வெளியிட்ட கருப்பு படக்குழு!
திரிஷா Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 30 Apr 2026 20:53 PM IST

இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி (RJ Balaji) இயக்கத்தில் 3வது தயாராகியுள்ள திரைப்படம்தான் கருப்பு (Karuppu). இந்த படத்தில் சூர்யா (Suriya) லீட் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா கிருண்ணன் (Trisha Krishnan) நடித்துள்ளார். இவர்கள் இருவரின் ஜோடி கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும்பின் மீண்டும், இந்த கருப்பு திரைப்படத்தில் இணைந்துள்ளது. அந்த வகையில் இந்த படத்தின் மீது ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் சூர்யா வழக்கறிஞர் “சரவணன்” என்ற வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் சாய் அபயங்கர் (Sai Abhyankkar) இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் கிட்டத்தட்ட 7 பாடல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா மதுரையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றிருந்தது.

இதில் திரிஷா இதில் கலந்துகொள்ளவில்லை. அந்த வகையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி கிட்ட நெருங்கிய நிலையில், தற்போது படக்குழு கேரக்டர் அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட தொடங்கியுள்ளது. இந்நிலையில் நடிகை திரிஷா கிருஷ்ணனின் கதாபாத்திர அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் திரிஷா “ப்ரீத்தி” (Preethi) என்ற வேடத்தில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: அரசனும், அன்பும் சந்திப்பார்களா? வெற்றிமாறன் கொடுத்த சுவாரஸ்ய பதில்!

கருப்பு படத்தின் திரிஷாவின் கதாபாத்திர அறிமுக வீடியோவை வெளியிட்ட படக்குழு:

இந்த படமானது கருப்பசாமியை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர் சூர்யா சரவணன் என்ற வேடத்திலும், கருப்பசாமியாகவும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த 2026ம் ஆண்டில் திரிஷாவின் நடிப்பில் வெளியாகும் பிரம்மாண்ட தமிழ் படமாக கருப்பு அமைந்துள்ளது. இப்படத்தில் நடிகர் சூர்யா மற்றும் திரிஷாவுடன், நடிகர்கள் யோகி பாபு, ஷிவதா, ஸ்வாசிகா, இந்திரன்ஸ், அனகா மாயா ரவி, நாட்டி நடராஜ் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். இப்படமானது முழுக்க அநியாயத்திற்கு, நல்ல சக்திக்கும் நடக்கும் ஒரு கதையை அடிப்படியாக கொண்டுள்ளது. இதில் ஆர்.ஜே.பாலாஜியும் ஒரு நெகடிவ் வேடத்தில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: அஜித் குமார் பர்த்டே ஸ்பெஷல்… தமிழ் சினிமாவில் ரீ ரிலீஸான படங்களின் லிஸ்ட் இதோ

இப்படத்திலிருந்து இதுவரை மொத்தமாக 4 பாடல்கள் வெளியாகியுள்ளது. முழுக்க ஆக்ஷ்ன் மற்றும் அதிரடி படமாக உருவாகியுள்ள நிலையில், இதில் தெய்வீகம் கலந்த பாடல்களாக வெளியாகியுள்ளது. அந்த விதத்தில் வெளியாகியிருந்த “கருப்பா கூட வா” பாடல் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றவருகிறது. சாய் அபயங்கருக்கு இது முதல் பிக் பட்ஜெட் படம் என்ற நிலையில், இதனால் இவருக்கு இன்னும் அதிகம் படங்களில் வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது.

Follow Us