AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

RJ Balaji: அதற்காக சூர்யாவின் ரசிகர்கள் என்னை மிரட்டுகிறார்கள் – ஆர்.ஜே.பாலாஜி கலகல பேச்சு!

RJ Balaji About Suriya Fans: இயக்குநராகவும், நடிகராகவும் மக்கள் மத்தியில் பிரபலம்,அனைவர் ஆர்.ஜே.பாலாஜி. இவர் சமீபத்தில் 29 படத்தின் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அதில், சூர்யா சாரின் ரசிகர்கள், ஒரு டைட்டிலுக்காக என்னை மிரட்டுகிறார்கள் என கூறியுள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

RJ Balaji: அதற்காக சூர்யாவின் ரசிகர்கள் என்னை மிரட்டுகிறார்கள் – ஆர்.ஜே.பாலாஜி கலகல பேச்சு!
ஆர்ஜே பாலாஜிImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 30 Apr 2026 18:04 PM IST

கோலிவுட் சினிமாவில் கடந்த 2020ம் ஆண்டில் வெளியான மூக்குத்தி அம்மன் (Mookuthi Amman) என்ற படத்தின் மூலம் இயக்குநராக அதிமுகமானவர் ஆர்.ஜே.பாலாஜி (RJ Balaji). இவர் இந்த படத்திற்கு முன்னே தமிழில் படங்களில் நடிகராக படங்களில் நடித்துவந்தார்.ஆரம்பத்தில் சினிமாவை துணை நடிகர் மற்றும் அங்கீகரிக்கப்படாத வேடத்தில் நடித்துவந்த இவர், எல்கேஜி (LKG) என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். இதையடுத்து தற்போதுவரையிலும் படங்களில் கதாநாயகனாகவும், இயக்குநராகவும் பணியாற்றிவருகிறார். அந்த விதத்தில் இவரின் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமான திரைப்படமாக தயாராகியிருப்பதுதான் கருப்பு (Karuppu). இதில் சூர்யா (Suriya) லீட் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) நடித்துள்ளார். இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு மே 14ம் தேதியில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

ஆனாலும் இப்படத்தின் ரிலீஸ் தேதியில் இன்னும் குழப்பங்கள் இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் கார்த்திக் சுப்புராஜின் (Karthik Subburaj) தயாரிப்பில் வெளியாக காத்திருக்கும், 29 தி பிலிம் (29 The Film) பட விழாவில் ஆர்.ஜே.பாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது அதில் பேசிய அவர், சூர்யாவின் ரசிகர்கள் அவரை மிரட்டுவதுக் குறித்து கலகலப்பாக பேசியுள்ளார்.

இதையும் படிங்க: 23 ஆண்டுகளாகத் தொடர்ந்து உச்சத்தில் நீடிப்பது ஒரு நம்பமுடியாத சாதனை – த்ரிஷா குறித்து புகழ்ந்து பேசிய ஆர்.ஜே.பாலாஜி

சூர்யாவின் ரசிகர்கள் மிரட்டுவதற்கான கரணம் குறித்து பகிர்ந்த ஆர்.ஜே.பாலாஜி:

29 பட விழாவின்போது மேடையில் பேசிய ஆர்.ஜே.பாலாஜி, “இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் எனக்கு நல்ல நண்பர். எதையும் அலட்டிக் கொள்ளமாட்டார். சூரிய சாருக்கு ரெட்ரோ என்ற படத்தை கொடுத்து, “தி ஒன்” (The One) என்ற அடையாளத்தையும், அவர் கொடுத்துள்ளார். ரெட்ரோ மத்தியில் சரியா சார் படம் தரணும் என அவரின் ரசிகர்கள் என்னை மிரட்டுகிறார்கள். அது அன்பான மிரட்டல். அட்டஹனால் சூரிய சாருக்கு, “தி ஒன்” என்ற டைட்டிலை கருப்பு படத்தில் நாங்களும் போடுகிறோம்” என அதில் அவர் பேசியுள்ளார். தற்போது இதுகுறித்த தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: ரசிகர்களே தயாரா? ஸ்பாட்டிற்கு சென்று ஆய்வு செய்யும் அஜித் குமார் – வைரலாகும் வீடியோ!

சூர்யாவின் கருப்பு திரைப்படம் குறித்து ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்ட எக்ஸ் பதிவு:

சூர்யாவின் கருப்பு படத்தின் இசைவெளியீட்டு விழா, கடந்த 2026ம் ஏப்ரல் 26ம் தேதியில், மதுரையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றிருந்தது. இந்த விழாவில் ஒட்டுமொத்த படக்குழுவும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர். இந்த இசை வெளியீட்டு விழாவில், படத்தின் அனைத்து பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது. அந்த விடத்த்தில் இப்படமானது வரும் 2026 மே 14ம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சமீபகாலமாக படக்குழு வெளியிடும் போஸ்டர்களில் ரிலீஸ் தேதி குறிப்பிடவில்லை. இதனால் ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறது என ரசிகர்கள் மத்தியில் சந்தேகங்கள் எழுந்தவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us