AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Chiyaan Vikram: பிரச்சனைகள் ஓவர்.. விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா?

Dhruva Natchathiram Movie: இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் சியான் விக்ரமின் கூட்டணியில் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகியிருந்த படம்தான் துருவ நட்சத்திரம். இப்படமானது பல ஆண்டுகளாக வெளியீட்டிற்கு காத்திருந்த நிலையில், ஒருவழியாக படத்தின் ரிலீஸ் குறித்து குட் நியூஸ் கிடைத்துள்ளது.

Chiyaan Vikram: பிரச்சனைகள் ஓவர்.. விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா?
துருவ நட்சத்திரம் திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 30 Apr 2026 15:49 PM IST

நடிகர் சியான் விக்ரமின் (Chiyaan Vikram) நடிப்பில் மிகவும் பிரம்மண்டமாக தயாராகியுள்ள படம்தான் துருவ நட்சத்திரம் (Dhruva Natchathiram). இதை இயக்குநரும், தற்போது நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன் (Gautham Vasudev Menon) இயக்கியிருந்தார். இந்த படமானது மிகவும் பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சிகளில் படமாக்கப்பட்டிருக்கும் நிலையில், இதில் விக்ரம் லீட் கதாநாயகனாக நடித்துள்ளார். ஆரம்பத்தில் இதில் சூர்யா (Suriya) நடிப்பதாக கூறப்பட்டிருந்த நிலையில், பின் அவர் இதிலிருந்து விலகிவிட்டார். அந்த விதத்தில் விக்ரம் லீட் நாயகனாக நடிக்க, அவருடன் ரிது வர்மா (Ritu Varma), ஐஸ்வர்யா ராஜேஷ் (Aishwarya Rajesh), சிம்ரன், தேவதர்ஷினி என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படமானது கடந்த 2017ம் ஆண்டில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் தயாரிப்பு நிறுவனத்தின் நிதி பிரச்சனையின் காரணமாக படம் ரிலீஸ் செய்யப்படாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இப்படத்தின் விவகாரம் உயர் நீதிமன்றம் வரையில் நடைபெற்றிருந்த நிலையில், கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கு நடைபெற்றுவந்தது. அந்த விதத்தில் தற்போது இப்படத்தின் ரிலீஸில் ஹேப்பி நியூ ஒன்று கிடைத்துள்ளது.

இதையும் படிங்க: கீர்த்தி சுரேஷின் புதுப் படத்தின் டைட்டில் இதுதான்… வெளியானது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் குறித்து உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு:

நடிகர் விக்ரமின் நடிப்பில் ஒரு ஸ்பை திரில்லர் கதைக்களத்தில், இந்த துருவ நட்சத்திரம் படமானது தயாராகியிருந்தது. இப்படத்தில் விக்ரமுடன் பல்வேறு நடிகர்கள் நடைத்துள்ளனர். இப்படத்தின் ரிலீஸ் பிரச்சனை வழக்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றிருந்தது. அந்த விதத்தில், இன்று (30/04/2026) நடைபெற இறுதி வழக்கில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து உத்தரவு வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: தனுஷின் கர படத்திற்கு முதல் விமர்சனம் கொடுத்த இயக்குநர் மாரி செல்வராஜ் – என்ன சொல்லி இருக்கார் தெரியுமா?

இந்த துருவ நட்சத்திரம் படத்தை ஜூன் 15ம் தேதியில் அல்லது அதற்கு முன்பே வெளியிட நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. அந்த வகையில் விக்ரமின் நடிப்பில் 2026ம் ஆண்டில் படம் வெளியாகவுள்ளது என்பது உறுதியாகியுள்ளது. அந்த வகையில் சூர்யாவின் கருப்பு படமானது, 2026 மே 14ம் தேதியில் வெளியாகின்ற நிலையில், இப்படத்தை படக்குழு 2026 மே 22ம் தேதியில் வெளியிட திட்டமிட்டுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

துருவ நட்சத்திரம் படம் ரிலீஸ் குறித்து இணையத்தில் வைரலாகும் பதிவு:

இந்த துருவ நட்சத்திரம் படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள நிலையில், இதுவரை மொத்தம் 2 பாடல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, பின்னர் படத்தின் அப்டேட்டுகள் ஒவ்வொன்றாக வெளியாகும் என கூறப்படுகிறது.

Follow Us