AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மே மாத ரிலீஸை குறிவைக்கும் நடிகர் விக்ரமின் துருவ நட்சத்திரம் படம்

Actor Vikrams Dhruva Natchathiram Movie Release Update: நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி 10 ஆண்டுகளாக திரையரங்குகளில் வெளியாகாமல் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்து படக்குழு தற்போது வெளியீட்டிற்கான பணிகளை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மே மாத ரிலீஸை குறிவைக்கும் நடிகர் விக்ரமின் துருவ நட்சத்திரம் படம்
துருவ நட்சத்திரம் படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 25 Apr 2026 15:50 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விக்ரம். இவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் நடிகர் விக்ரம் நடிப்பில் 10 ஆண்டுகளுக்கு முன்பே உருவான படம் தான் துருவ நட்சத்திரம். இந்தப் படத்தை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்திற்கு திரைக்கதையை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் தீபக் வெங்கடேசன் இருவரும் இணைந்து எழுதி இருந்தனர். மேலும் இந்தப் படத்தினை தயாரிப்பு நிறுவனமான ஒன்ட்ராகா என்டர்டைன்மென்ட் மற்றும்  ஒருஊரிலேயோரு ஃபிலிம் ஹவுஸ் என இரண்டு நிறுவனங்கள் சார்பாக கௌதம் வாசுதேவ் மேனனே தயாரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் உடன் இணைந்து நடிகர்கள் ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன், ராதிகா சரத்குமார், ஆர்.பார்த்திபன், விநாயகன், கௌதம் வாசுதேவ் மேனன், திவ்யதர்ஷினி, அர்ஜுன் தாஸ், வி.பி.தனஞ்செயன், வம்சி கிருஷ்ணா, முன்னா சைமன், சதீஷ் கிருஷ்ணன், மாயா எஸ்.கிருஷ்ணன், சலீம் பெய்க், அபிராமி வெங்கடாசலம் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.

துருவ நட்சத்திரம் படத்தின் நிலை என்ன?

துருவ நட்சத்திரம் படம் தொடர்பான வழக்கில் முதலீட்டாளர்களான கே. புண்ணியமூர்த்தி மற்றும் கே. பிரேம்குமார் ஆகியோரின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஸ்ரீநாத் ஸ்ரீதேவன், அப்படத்தின் வருவாயை ஒரு ‘எஸ்க்ரோ’ (escrow) கணக்கில் வைப்புத்தொகையாகச் செலுத்தும் நிபந்தனையின் பேரில், அப்படத்தை வெளியிடலாம் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இப்படம் வெற்றியடைந்தால், இதில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினருக்கும் அவர்களுக்குரிய பங்குத் தொகை கிடைப்பதை இந்த ஏற்பாடு உறுதி செய்யும். இந்த முன்மொழிவு குறித்து, இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் வழக்கறிஞரிடம் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி விளக்கம் கோரியுள்ளார். இதனால் படம் மே மாதத்தில் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

Also Read… விஷ்ணு விஷால் – மமிதா பைஜூவின் இரண்டு வானம் பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? – படக்குழு வெளியிட்ட புரோமோ வீடியோ!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Mandaadi: சூரியின் மண்டாடி படத்தின் ஷூட்டிங் நிறைவு.. படப்பிடிப்பு வீடியோவை பகிர்ந்த படக்குழு!

Follow Us