AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மதுரை மக்களே ரெடியா இருக்கீங்களா? – வைரலாகும் ஆர்.ஜே.பாலாஜி எக்ஸ் பதிவு

Director RJ Balaji X Post : தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் நாயகனாகவும் மக்களிடையே கவனத்தை ஈர்த்தவர் ஆர்.ஜே.பாலாஜி. இவரது இயக்கத்தில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் கருப்பு. இந்தப் படம் குறித்த அப்டேட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மதுரை மக்களே ரெடியா இருக்கீங்களா? – வைரலாகும் ஆர்.ஜே.பாலாஜி எக்ஸ் பதிவு
கருப்புImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 24 Apr 2026 13:39 PM IST

தமிழ் சினிமாவில் மக்கள் தற்போது மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்து இருக்கும் படம் கருப்பு. நடிகர் சூர்யா நாயகனாக நடித்து உள்ள இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா நாயகியாக நடித்து உள்ளார். மேலும் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார். முன்னதாக இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது போல இந்தப் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும் இந்தப் படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து உள்ளது. படத்தின் வெளியீடு தொடந்து ஒத்தி வைக்கபப்ட்டுக் கொண்டே இருந்த நிலையில் இறுதியாக மே மாதம் வெளியீட்டை உறுதி செய்தது படக்குழு.

இந்த நிலையில் படம் வருகின்ற மே மாதம் 14-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் முன்னதாக படத்தில் இருந்து டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

மதுரையில் நடைபெறும் கருப்பு படத்தின் இசை வெளியீட்டு விழா:

இந்த நிலையில் கருப்பு படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து முன்னதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வந்தது. அதன்படி மதுரையில் வருகின்ற 26-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது படத்தின் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி மதுரை மக்களே ரெடியா என்று ஒரு எக்ஸ் தள பதிவை வெளியிட்டுள்ளார். இதன் காரணமாக அந்த தகவல் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையில் இதுவரை 3 பாடல்கள் கருப்பு படத்தில் இருந்து வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… ஓட்டு போட சென்ற நடிகைக்கு காத்திருந்த அதிர்ச்சி… வாக்குச்சாவடியில் நடந்தது என்ன

ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Mamitha Baiju: கர படத்தில் எனது செல்லி வேடம் இப்படிதான் இருக்கும் – மமிதா பைஜூ பேச்சு!

Follow Us