AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஓட்டு போட சென்ற நடிகைக்கு காத்திருந்த அதிர்ச்சி… வாக்குச்சாவடியில் நடந்தது என்ன

Actress Akshaya Hariharan : தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வரும் நடிகையாக வலம் வருபவர் நடிகை அக்‌ஷயா ஹரிஹரன். இவர் இன்று சட்டமன்ற தேர்தலில் வாக்கு செலுத்துவதற்காக சென்ற போது அவரது வாக்கை யாரோ முன்பே போட்டுவிட்டதாக கூறியதால் அதிர்ச்சி அடைந்தார்.

ஓட்டு போட சென்ற நடிகைக்கு காத்திருந்த அதிர்ச்சி… வாக்குச்சாவடியில் நடந்தது என்ன
அக்‌ஷயா ஹரிஹரன்Image Source: instagram
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 23 Apr 2026 18:02 PM IST

தமிழ் நாட்டில் இன்று 2026-ம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தல் காலை முதலே விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த சட்டமன்ற தேர்தலில் பொதுமக்களும் திரையுலக பிரபலங்களும் தொடர்ந்து தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று அதிகாலை முதல் நடிகர்கள் அஜித் குமார், விஜய், டி.ராஜேந்திரன், த்ரிஷா கிருஷ்ணன், சிவகார்த்தியேன், கமல் ஹாசன், ரஜினிகாந்த், கார்த்தி, சூர்யா, ஜோதிகா, பிரசன்னா, சினேகா, சிபி சத்யராஜ், ஜெய், அர்ஜுன், சிலம்பரசன், விஷால், சிம்ரன், கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான், ஜெயராம், காளிதாஸ் ஜெயராம், பாக்யராஜ், சாந்தனு பாக்யராஜ், சூரி, சந்தானம், யோகி பாபு,  விஷ்ணு விஷால், சாய் பல்லவி, ரவி மோகன் மற்றும் பிரஷாந்த் உட்பட நடிகர்கள் பலர் வாக்குகளை செலுத்தி உள்ளனர்.

இந்த நிலையில் சாதாரண மக்களின் வாக்குகளை மற்றவர்கள் யாரோ போட்டுவிட்டதாக காலையில் இருந்து ஆங்காங்கே புகார்கள் எழுந்து வந்தது. இந்த நிலையில் சென்னை அடையாரில் உள்ள வாக்கு சாவடிக்கு வாக்கு செலுத்த வந்த நடிகை அக்‌ஷ்யா ஹரிஹரனின் வாக்கை முன்னதாகவே யாரோ போட்டுவிட்டதாக செய்தி வந்ததை கேட்டு நடிகை அதிர்ச்சியடைந்தது குறிப்பிடத்தக்கது.

சிறப்புத் தீவிரத் திருப்புதல் (SIR) பிறகும் கள்ள ஓட்டு – நடிகை அதிர்ச்சி:

தமிழகம் மட்டும் இன்றி ஒட்டுமொத்த இந்தியாவிலும் கள்ள ஓட்டு முறையை ஒழிப்பதற்காக தேர்தல் ஆணையம் சிறப்புத் தீவிரத் திருப்புதல் (SIR) என்ற முறையை தேர்தலுக்கு முன்பாக செய்தது. இதன் காரணமாக கள்ள ஓட்டுகளை ஒழிக்க முடியும் என்று தெரிவித்து இருந்தனர். இத்தனை நடைமுறைகளைக் கடந்து இன்று தமிழ் நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைப்பெற்றது. அதில் காலையில் இருந்து ஆங்காங்கே தங்களது ஓட்டை யாரோ போட்டுவிட்டார்கள் என்ற புகார்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ் சினிமாவில் ப்ளடி பெக்கர் மற்றும் சபா நாயகன் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை அக்‌ஷயா ஹரிஹரனின் ஓட்டும் வேறு யாரோ போட்டுவிட்டதாக புகார் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து தேவையான அனைத்துச் சரியான அடையாள அட்டைகளும் கையில் இருந்தபோதிலும், ஒரு ‘Tendered Vote’ (சவால் வாக்கு) அளிப்பதற்காக அவர் ஒரு மணி நேரம் போராட வேண்டியிருந்தது. வாக்குச்சாவடியில் நடைபெற்ற சரிபார்ப்பு நடைமுறையில் இது ஒரு மிகப்பெரிய தோல்வி என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read… ஒரு ஓட்டு..ஒரு விரல்..ஒரு புரட்சி.. ஒரே ஒரு நாள்… சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு புதிய போஸ்டரை வெளியிட்ட நூறு சாமி படக்குழு

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Actor Ajithkumar: வெள்ளை நிற கோட் சூட்.. முதல் ஆளாக ஓட்டு போட வந்த நடிகர் அஜித்!

Follow Us