Tamil Nadu Election 2026 Highlights : தமிழ்நாட்டின் தேர்தல் திருவிழா.. வாக்குப்பதிவு நிறைவு
Tamil Nadu Assembly Election 2026 Highlights : தமிழ்நாட்டில் தற்போது திமுக ஆட்சி இருக்கும் நிலையில் அடுத்த ஆட்சியை யார் பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. 4 முனை போட்டி நிலவும் நிலையில் ஆட்சி அதிகாரத்தை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. வழக்கத்தை விட வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு
தமிழ்நாட்டின் அடுத்த ஆட்சியை தீர்மானிக்கப்போகும், 2026 சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று ஏப்ரல் 23 காலை 7 மணிக்கு சிறப்பாக தொடங்குகிறது. இதில், தமிழகத்தில் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி ஆட்சியின் பதவிக் காலம் வருகிற மே 7- ஆம் தேதியுடன் ( வியாழக்கிழமை) நிறைவடைகிறது. இதனால், தமிழகத்தில் புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று ஜனநாயக திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என ஆண் வேட்பாளர்கள் 3,585 பேரும், பெண் வேட்பாளர்கள் 438 பேரும் என மொத்தம் 4,023 பேர் அவரவர் தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கு 2 கோடியே 80 லட்சத்து 30 ஆயிரத்து 658 ஆண் வேட்பாளர்கள், 2 கோடியே 93 லட்சத்து 04 ஆயிரத்து 905 பெண் வேட்பாளர்கள், 7 ஆயிரத்து 728 மூன்றாம் பாலினத்தவர்கள் என சுமார் 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இந்நிலையில் இன்றைய தேர்தல் செய்திகளை உடனுக்குடன் இங்கே பார்க்கலாம்.
LIVE NEWS & UPDATES
-
வாக்குச்சாவடியில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு
பாளையங்கோட்டை வாக்குசாவடியை ஆய்வு செய்ய சென்ற அதிமுகவின் முன்னாள் பகுதி செயலாளர் மகன் சங்கர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தலை மற்றும் கை உள்ளிட்ட இடங்களில் படுகாயத்துடன் நெல்லை மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். மது போதையில் வந்த மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டியதாக காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைப்பு
சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டது. வேட்பாளர்களின் பூத் ஏஜென்டுகளின் முன்னிலையில் மின்னணு வாக்கு இயந்திரங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
-
திமுக வேட்பாளரை தாக்க முயன்றதாக புகார்
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளரை தாக்க முயன்றதாக புகார் எழுந்துள்ளது. ஆயிரம் விளக்கு திமுக வேட்பாளர் எழிலனை அதிமுகவினர் தாக்க முயன்றதாக திமுகவினர் புகார் தெரிவித்துள்ளனர்.
-
தமிழ்நாட்டில் 84.29% வாக்குப்பதிவு
தமிழ்நாட்டில் மாலை 6 மணி நிலவரப்படி 84.29 % வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. மேலும் சில வாக்குச்சாவடிகளில் டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு தொடர்கிறது
-
Chennai Constituency Election: இரவு 8 மணி வரை வாக்களிக்கலாம்
சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்குள் வந்தவர்கள் அனைவரும் வாக்களிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர்கள் இரவு 8 மணி, 9 மணி ஆகிய நேரங்களிலும் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
-
இயந்திரங்களை பாதுகாப்பாக எடுத்துச்செல்ல நடவடிக்கை
சீல் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக எடுத்துச்செல்ல தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்துள்ளது. இவை அனைத்தும் பாதுகாப்பான இடத்தில்வைக்கப்பட்டு அறை சீல் வைக்கப்படும்
-
வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல்
தமிழ்நாடு முழுவதும் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது
-
Chennai Constituency Election : சென்னை துறைமுகம் தொகுதியில் பிரச்னை
சென்னை துறைமுகம் தொகுதியில் அமைச்சர் சேகர்பாபுவும், தவெக வேட்பாளர் சினோரா அசோக்கும் நேருக்கு நேர் மோதல்.
-
வாக்குச்சாவடிக்கு 6 மணிக்குள் வந்தவர்கள் வாக்களிக்கலாம்
வாக்குச்சாவடிக்கு 6 மணிக்குள் வந்தவர்கள் மட்டும் வாக்களித்துவிட்டு செல்ல அனுமதி
-
நிறைவடைந்தது வாக்குப்பதிவு
காலை 7 மணிக்கு தொடங்கியே தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு சரியாக 6 மணிக்கு நிறைவடைந்தது.
-
8 மணி வரை வாக்களிக்கலாம்
சென்னையில் மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்குள் வாக்காளர்கள் வந்தால் இரவு 8 மணி வரை வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களிக்க முன் வரும் மக்கள்
ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி அர்ச்சுனாபுரம் கிராமத்தில் நல்லதங்காள் கோயில் சிலை பிரதிஷ்டையில் எந்த முடிவும் எடுக்காததால் காலையில் தேர்தலை புறக்கணித்தவர்கள் தற்போது வாக்களிக்க வருகை நல்லதங்காள் கோயிலில் அடுத்த மாதம் குடமுழுக்கு நடத்தப்படும் என தேர்தல் நடத்தும் அலுவலர் உறுதியளித்ததால், கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பை கைவிட்டு தற்போது வாக்கை செலுத்தி வருகின்றனர்.
-
சட்டமன்ற தேர்தல் – மாலை 5 மணி நிலவரம்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாலை 5 மணி நிலவரப்படி 82.24 சதவகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மாலை 5 மணி நிலவரம்
சட்டமன்ற தேர்தல் – மாலை 5 மணி நிலவரம்#TamilnaduLegislativeAssemblyelection2026 pic.twitter.com/lLLd0Ytmn3
— TV9 Tamil (@TV9Tamil) April 23, 2026
-
அரசியலுக்கு வருவேன் – நடிகர் விஷால் உறுதி
தனது வாக்கினை செலுத்திய பிறகு நடிகர் விஷால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அனைவரும் வாக்களிக்க வேண்டும். அடுத்த 5 ஆண்டுகள் ஆளப்போகிறவர்களை நாம் சரியாக தேர்வு செய்ய வேண்டும். தற்போது உள்ள அரசியல்வாதிகள் சரியாக தங்களது பணிகளை செய்யாததால்தான் நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள். வரும் காலத்தில் அரசியலில் எனது பங்கு இருக்கும் என்று தெரிவித்தார்.
-
சென்னை சாலிகிராமத்தில் தனது வாக்கினை பதிவு செய்த வடிவேலு!
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நடிகர் வடிவேலு சென்னை சாலிகிராமத்தில் உள்ள காவேரி பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார்.
வாக்கு செலுத்திய நடிகர் வடிவேலு
சென்னை சாலிகிராமத்தில் தனது வாக்கினை பதிவு செய்த வடிவேலு!#TamilnaduLegislativeAssemblyelection2026 #Vadivelu pic.twitter.com/19PqSxpJXe
— TV9 Tamil (@TV9Tamil) April 23, 2026
-
தனது ஓட்டை வேறு ஒருவர் பதிவு செய்ததால் இளைஞர் அதிர்ச்சி
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஆலந்தூர் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் முதல் முறையாக வாக்களிக்க சென்ற இளைஞர், தனது வாக்கை வேறு யாரோ பதிவு செய்து விட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தேர்தல் அதிகாரிகளிடம் தனது புகாரை பதிவு செய்தார்.
-
சென்னை தி.நகரில் வாக்களித்த நடிகர் சிலம்பரசன்!
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னை தியாகராயநகரில் நடிகர் சிலம்பரசன் தனது வாக்கினை பதிவு செய்தார்.
வாக்கினை பதிவு செய்த சிம்பு
சென்னை தி.நகரில் வாக்களித்த நடிகர் சிலம்பரசன் !#TamilnaduLegislativeAssemblyelection2026 #SilambarasanTR pic.twitter.com/erjzZ9Mzjh
— TV9 Tamil (@TV9Tamil) April 23, 2026
-
என் ஓட்டை வேறு யாரோ போட்ருக்காங்க – நடிகை வேதனை
பிளடி பெக்கர், ஹே சினாமிகா, சபா நாயகன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை அக்ஷயா ஹரிஹரன் தனது ஓட்டை வேறு யாரோ செலுத்தியதாக புகார் தெரிவித்துள்ளார். வாக்குச்சாவடிக்கு சென்றபோது தனது வாக்கை வேறு யாரோ செலுத்திவிட்டதாக தேர்தல் அலுவலர்கள் தெரிவித்ததாக அதிர்ச்சி வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அக்ஷயா ஹரிஹரன் வேதனை
Shocking! Someone already cast a vote in actress Akshaya Hariharan’s name in Adyar. Despite having all the right IDs, she had to fight for an hour to cast a ‘Tendered Vote.’ This is a massive failure in verification at the booth. @ECISVEEP pic.twitter.com/NaxmuLsiUf
— George 🍿🎥 (@georgeviews) April 23, 2026
-
எனக்கு ஓட்டு இல்லை – பிரபல நடிகர் வருத்தம்
கயல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் சந்திரமௌலி தனக்கு ஓட்டு இல்லை என வருத்தம் தெரிவித்தார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்ட அவர், எஸ்ஐஆர் பணிகளின் போது விவரங்களை எல்லாம் சரியாக கொடுத்தோம். இருந்தும் எங்கள் வீட்டில் 2 பேருக்கு ஓட்டு இல்லை என்று தெரிவித்தார். ஞ
நடிகர் சந்திரமௌலியின் பதிவு
No vote 🙁 #TNElection pic.twitter.com/QwS3iWfDcI
— 𝘊𝘩𝘢𝘯𝘥𝘳𝘢𝘮𝘰𝘶𝘭𝘪.𝘗.𝘚 (@moulistic) April 23, 2026
-
வாக்கு இயந்திரம் சேதம் – 4 பேர் கைது
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்ததாக சுயேச்சை வேட்பாளர் வெங்கடேசன், அதிமுக பூத் ஏஜென்டுகள் பாலா, லோகநாதன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். பதிவான 208 வாக்குகள் கண்ட்ரோல் யூனிட்டில் இருந்து மீட்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக கடலாடி போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் – விஷால் பேட்டி
நடிகை விஷால் வாக்களித்து விட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நான் எனது வாக்கைச் செலுத்திவிட்டேன். இதுவரை வாக்களிக்காதவர்கள் அனைவரும் தயவுசெய்து தங்கள் வீடுகளிலிருந்து வெளியே வந்து வாக்களிக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்; ஏனெனில், ஒவ்வொரு வாக்கும் மிக முக்கியமானது. இதுவரை, 70 சதவீத வாக்குப்பதிவை நாம் எட்டியுள்ளோம். தற்போதைய சூழலில் மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புவதையே உணர்த்துகிறது என்றார்.
நடிகர் விஷால் பேட்டி
#WATCH | Tamil Nadu Assembly Elections: Actor Vishal Krishna Reddy says, “I have cast my vote. I urge those who have not yet voted to please step out of their homes and cast their ballots, because every vote counts. So far, we have reached a turnout of 70%, which is excellent. I… https://t.co/80IuPNMiQg pic.twitter.com/CVQwxLoUMc
— ANI (@ANI) April 23, 2026
-
எந்த பிரச்னையும் இல்லை
சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள பள்ளியில் வாக்கை செலுத்திவிட்டு டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், இதுவரை எந்த பிரச்னையும் இல்லாமல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது என்றார்.
-
வாக்குச்சாவடிக்குள் போலீசார் நுழையக் கூடாது
தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கான விதிமுறைகளை மிகவும் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள், மாநகரக் காவல் ஆணையர்கள், மண்டலத் தலைவர்கள் (IG) ஆகியோருக்கு தமிழக டிஜிபி உத்தரவுப் பிறப்பித்துள்ளார். அதன்படி தேர்தல் பணியில் உள்ள காவலர்கள் எக்காரணம் கொண்டும் வாக்குச்சாவடி மையங்களுக்குள் நுழையக்கூடாது. வாக்குச்சாவடி தலைமை அலுவலரின் அனுமதி இருந்தால் மட்டுமே உள்ளே செல்ல வேண்டும். காவலர்கள் அனைவரும் வாக்குச்சாவடியின் வெளிக்கதவு அருகிலேயே நின்று தங்களது கடமையை ஆற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
-
சட்டமன்ற தேர்தல் 2026 – மதியம் 3 மணி நிலவரம்!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 மதியம் 3 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் மொத்தம் 70 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2021 தேர்தலில் மதியம் 3 மணி நிலவரப்படி 53.35 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியிருந்தது.
மதியம் 3 மணி நிலவரம்!
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் – மதியம் 3 மணி நிலவரம்!#TamilnaduLegislativeAssemblyelection2026 pic.twitter.com/05JrTDPwnc
— TV9 Tamil (@TV9Tamil) April 23, 2026
-
தனது வாக்கினை பதிவு செய்த கீர்த்தி சுரேஷ்!
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நடிகை கீர்த்தி சுரேஷ் தனது வாக்கினை பதிவு செய்தார்.
வாக்கு செலுத்திய கீர்த்தி சுரேஷ்
தனது வாக்கினை பதிவு செய்த கீர்த்தி சுரேஷ்!#KeerthySuresh #TamilnaduLegislativeAssemblyelection2026 pic.twitter.com/6e2x4pQLTj
— TV9 Tamil (@TV9Tamil) April 23, 2026
-
தவெக வேட்பாளருடன் சீமான் சந்திப்பு
காரைக்குடியில் தனக்கு எதிராக போட்டியிடும் தவெக வேட்பாளர் பிரபுவை நேருக்கு நேர் சந்தித்த போது சீமான் கட்டியணைத்து அன்பை பகிர்ந்தார்.
-
மேற்கு வங்கத்தில் அதிக வாக்குப்பதிவு
பகல் 1 மணி நிலவரப்படி தமிழ்நாடு தேர்தலை விட மேற்குவங்க முதற்கட்ட தேர்தலில் அதிகளவில் வாக்குப்பதிவு நடைபெற்றன. தமிழ்நாட்டில் 56.81 சதவிகிதமும், மேற்கு வங்கத்தில் 62.18 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.
-
மை சிறிது நேரத்திலேயே அழிவதாக குற்றச்சாட்டு
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தொகுதி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி 92-இல் வாக்காளர்கள் கைகளில் வைக்கப்படக் கூடிய மை சிறிது நேரத்தில் அழிவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தவெக வேட்பாளர் விஜய் வெங்கடேஷ் வாக்குச்சாவடி மையத்திற்குள் நுழைந்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
-
அம்மாவுடன் வாக்களிக்க வந்த திரிஷா!
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026ஐ முன்னிட்டு நடிகை திரிஷா தனது அம்மா உமா கிருஷ்ணனுடன் வந்து தனது வாக்கினை பதிவு செய்தார்.
அம்மாவுடன் வாக்களிக்க வந்த திரிஷா!
அம்மாவுடன் வாக்களிக்க வந்த திரிஷா!#TrishaKrishnan #TamilnaduLegislativeAssemblyelection2026 pic.twitter.com/wm16vk7Ol9
— TV9 Tamil (@TV9Tamil) April 23, 2026
-
குடும்பத்துடன் வாக்களித்த உதயநிதி ஸ்டாலின்!
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026ஐ முன்னிட்டு துணை முதல்வரும் தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், தனது மனைவி கிருத்திகா உதயநிதி மகன் இன்பன் உதயநிதி ஆகியோருடன் வந்து வாக்களித்தார்.
குடும்பத்துடன் வாக்களித்த உதயநிதி ஸ்டாலின்!
குடும்பத்துடன் வாக்களித்த உதயநிதி ஸ்டாலின்!#TamilnaduLegislativeAssemblyelection2026 #UdhayanidhiStalin pic.twitter.com/zRAlgy36bO
— TV9 Tamil (@TV9Tamil) April 23, 2026
-
சென்னை தி.நகரில் வாக்களித்த நடிகர் கார்த்தி!
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நடிகர் கார்த்தி தியாகராயநகரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் கார்த்தி நீண்ட வரிசையில் காத்திருந்து தனது வாக்கினை செலுத்தினார்.
சென்னை தி.நகரில் வாக்களித்த நடிகர் கார்த்தி!
சென்னை தி.நகரில் வாக்களித்த நடிகர் கார்த்தி!#TNAssemblyElection2026 #ActorKarthi pic.twitter.com/pTyQ4DqXHt
— TV9 Tamil (@TV9Tamil) April 23, 2026
-
நீண்ட வரிசையில் வந்து வாக்களித்த சூர்யா – ஜோதிகா
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 இன்று நடைபெற்று வரும் நிலையில் கோலிவுட்டின் நட்சத்திர ஜோடிகளான சூர்யா – ஜோதிகா நீண்ட வரிசையில் வந்து வாக்களித்தனர்.
நீண்ட வரிசையில் வந்து வாக்களித்த சூர்யா – ஜோதிகா
நீண்ட வரிசையில் வந்து வாக்களித்த சூர்யா – ஜோதிகா #TNAssemblyelection2026 #suriyajyothika pic.twitter.com/8AmiQE5XOB
— TV9 Tamil (@TV9Tamil) April 23, 2026
-
வாக்காளர்களுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்ற ரோபோ
கோயம்புத்தூர் அரசு கல்லூரி மாணவர்களால் உருவாக்கப்பட்ட ரோபோ, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்றது.
இனிப்புகள் வழங்கி வரவேற்ற ரோபோ
#WATCH | Tamil Nadu Elections 2026 | Coimbatore: At Government Arts College, a robot whose voice processing and RC control model was developed by a student of the same college, greets voters and offers them sweets. pic.twitter.com/pNb3oJPQjl
— ANI (@ANI) April 23, 2026
-
“விஜய்யுடன் கூட்டணிக்கு வாய்ப்பில்லை”
தேர்தலுக்குப்பின் விஜயுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு அதற்கு வாய்ப்பில்லை என தனியார் தொலைக்காட்சிக்கு பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் பிரத்யேக பதில் அளித்துள்ளார்.
-
Madurai Constituency Election: மதுரை கீழவாசல் பகுதியில் மோதல்
மதுரை கீழவாசல் பகுதியில் வாக்குசாவடி முகவர்கள் இடையே வாக்குவாதம், மோதல். திடீர் தகராறால் பரபரப்பான சூழல் காணப்பட்டது. பாதுகாப்பில் இருந்த போலீசார் இரு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை
-
Tirupur Election Poll Percentage: திருப்பூரில் அதிக வாக்குப்பதிவு
திருப்பூரில் அதிகபட்சமாக 1 மணி நிலவரப்படி 60% கடந்த வாக்குப்பதிவு
-
Tamil Nadu Election Poll Percentage : 1 மணி நிலவரப்படி 56.81 சதவீதம் வாக்கு பதிவு
தமிழ்நாட்டில் மதியம் 1 மணி நிலவரப்படி 56.81 சதவீதம் வாக்குப்பதிவு. கடந்த முறை தேர்தலை விட இது அதிகம் என தேர்தல் ஆணையம் தகவல்
-
chennai Polling: வாக்களிக்க பொதுமக்கள் ஆர்வம்
மதிய வெயிலையும் பொருட்படுத்தாமல் சென்னையில் வரிசையில் காத்திருந்து வாக்களித்து வரும் வாக்காளர்கள்
-
தவெக ஆதரவாளர் கைது
திருப்பத்தூரில் வாக்களித்துவிட்டு வீடியோ எடுத்து அதனை ரீல்ஸாக பதிவிட்ட தவெக ஆதரவாளர் கைது
-
Nellai Constituency Election : தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பெரும்பத்து என்ற கிராமத்தைச் சேர்ந்த மக்கள் சட்டமன்றத் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.
-
கல்யாணமான கையோடு வந்து ஓட்டு
காஞ்சிபுரத்தில் கல்யாணமான கையோடு வந்து ஓட்டு பதிவிட்ட புதுமண தம்பதி
வீடியோ
#WATCH | Kanchipuram, Tamil Nadu: A groom in Kanchipuram cast his vote along with his bride immediately after their wedding ceremony. pic.twitter.com/SCqklwCttl
— ANI (@ANI) April 23, 2026
-
Tamil Nadu Election Voting: விறுவிறுவென நடக்கும் வாக்குப்பதிவு
விறுவிறுப்பாக நடக்கும் தமிழ்நாடு தேர்தல்.. இதுவரை நடந்தது என்ன?
வீடியோ
-
T Nagar Constituency Election: நடிகர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா வாக்குப்பதிவு
சென்னை தி நகரில் உள்ள வாக்கு மையத்தில் நடிகர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா வருகை தந்து தங்களுடைய வாக்கினை பதிவு செய்ய வரிசையில் காத்திருந்தனர்.
-
Vijay sethupathi Voting: நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள்
அனைவரும் வந்து வாக்களிக்க வேண்டுமென நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதான் நம்முடைய தலையாய கடமை என அவர் கருத்து
வீடியோ
#WATCH | Chennai, Tamil Nadu: Actor Vijay Sethupathi said, "Everyone come and vote, this is our most important responsibility… Best wishes to all the youth." https://t.co/TK18cVlXAx pic.twitter.com/TXEqn2vcHZ
— ANI (@ANI) April 23, 2026
-
Thiruvannamalai Constituency Election : வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்த நபர்
திருவண்ணாமலை – கலசப்பாக்கம் பகுதியில் வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்த சுயேட்சை வேட்பாளரின் ஏஜெண்டு
-
35% தாண்டிய வாக்குப்பதிவு
காலை 11 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் 35% தாண்டிய வாக்குப்பதிவு. அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 41% வாக்குகள் பதிவு
-
பிரத்யேக ரோபோ பணி
கோவை அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடியில், வாக்காளர்களை வரவேற்க ‘டீனா’ (Tina) என்று பெயரிடப்பட்ட பிரத்யேக ரோபோ பணி அமர்த்தப்பட்டுள்ளது. இந்த ரோபோ, வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்களுக்குத் தட்டில் வைத்து சாக்லேட் மற்றும் பூக்களை வழங்கி இன்முகத்துடன் வரவேற்கிறது
-
amil Nadu Elections Poll Percentage: 11 மணி நிலவரம் – 37.56%
காலை 11 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் மொத்தமாக 37.56% வாக்குகள் பதிவாகியுள்ளன
11 Am Vote Percentage
-
நயினார் நாகேந்திரன் வாக்குப்பதிவு
சாத்தூர் தொகுதி வாக்கு மையத்தில் தன்னுடைய வாக்கை பதிவு செய்தார் நயினார் நாகேந்திரன்
வீடியோ
#WATCH | Tamil Nadu Elections 2026 | State BJP President and Sattur Assembly constituency, Nainar Nagenthran casts his vote at a polling station in Tirunelveli. pic.twitter.com/IO4EZ773z4
— ANI (@ANI) April 23, 2026
-
Erode Constituency Election: கள்ள ஓட்டு என புகார்
ஈரோடு மாவட்டம் குமலன்குட்டை வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
-
அனைவரும் வாக்களிக்க வேண்டும் – த்ரிஷா
அனைவரும் சென்று இன்று வாக்களிக்க வேண்டுமென நடிகரி த்ரிஷா வேண்டுகோள்
-
Vijay letter to EC: விஜய் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்
தமிழகத்தில் நிலவும் கடும் போக்குவரத்து தட்டுப்பாட்டினால் வாக்காளர்கள் தங்கள் ஊர்களுக்குச் செல்ல முடியாமல் தவிப்பதாகக் குறிப்பிட்டு, வாக்குப்பதிவு நேரத்தை மாலை 6 மணியிலிருந்து இரவு 8 மணி வரை நீட்டிக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
-
Trisha : த்ரிஷா வாக்குப்பதிவு
நடிகை த்ரிஷா சென்னை ஆழ்வார்பேட்டை வாக்கு மையத்தில் வாக்களிக்க வருகை தந்தார்.
-
Madurai Constituency Election: வாக்கு இயந்திரத்தில் கோளாறு
மதுரை அலங்காநல்லூர் பகுதி வாக்கு மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு. நீண்ட நேரம் காத்திருப்பதாக வாக்காளர்கள் வாக்குவாதம்
-
நடிகர் டி ராஜேந்தர் குற்றச்சாட்டு
முதிய வாக்காளர்களுக்கு உரிய வசதி செய்து தரவில்லை என நடிகர் டி ராஜேந்தர் குற்றச்சாட்டு. வயதானவர்கள் வரிசையில் காத்திருப்பதாக குற்றச்சாட்டு
-
Alwarpet Constituency Election : ஆழ்வார்பேட்டை பகுதியில் பதற்றம்
சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் தொடர்பில்லாத நபர் நுழைந்துவிட்டதாக புகார். வாக்குசாவடிக்குள் இருந்த சந்தேக நபரை துணை ராணுவம் வெளியேற்றியது
-
Pradeep Ranganathan : பிரதீர் ரங்கநாதன் வாக்களித்தார்
சென்னை மடிப்பாக்கத்தில் நடிகர் பிரதீர் ரங்கநாதன் வரிசையில் நின்று வாக்களித்தார்.
-
திமுக, தவெக இடையே தள்ளுமுள்ளு
வாணியம்பாடி பகுதியில் திமுக, தவெக இடையே தள்ளுமுள்ளு. இதனால் வாக்குபதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது
-
தமிழிசை குற்றச்சாட்டு
வாக்களிக்க காத்திருக்கும் வாக்காளர்களிடம், திமுகவினர் வாக்களிக்க வேண்டுமென கூறுவதாக தமிழிசை குற்றச்சாட்டு
-
kanimozhi Voting: சென்னை ஆழ்வார்பேட்டையில் வாக்களித்தார் கனிமொழி
சென்னை ஆழ்வார்பேட்டையில் எம்பி கனிமொழி தனது வாக்கினை பதிவு செய்தார்
-
Voting Percentage : 2 மணி நேரத்தில் 20% வாக்குப்பதிவு
12 தொகுதிகளில் சுமார் 2 மணி நேரத்தில் 20% வாக்குப்பதிவு. இதனால் இந்த முறை வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு
-
SIR பணிகள் நேர்மையாக நடைபெற்றது – அண்ணாமலை
தமிழ்நாட்டில் SIR பணிகள் நேர்மையாக நடைபெற்றது. தேர்தல் ஆணையம் அந்த வேலையை சரியாக செய்தது. ஆனால் பேருந்து வசதி உள்ளிட்ட விஷயங்களை அவர்கள் கையில் எடுத்திருக்க வேண்டும் – அண்ணாமலை
-
பேருந்து வசதிகள் இல்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு
சென்னையில் இருந்து வாக்களிக்க செல்வோருக்கு பேருந்து வசதி சரியாக செய்து தரப்படவில்லை என அண்ணாமலை குற்றச்சாட்டு
-
Tamil Nadu Elections Poll Percentage: 2026 வாக்குப்பதிவு அதிகம்
கடந்த 2021 தேர்தலில் 9 மணி நிலவரப்படி 13.80% வாக்குகள் பதிவான நிலையில் இந்த முறை 17.69% வாக்குகள் பதிவாகியுள்ளது
-
Tirupur Poll Percentage: 20.38% வாக்குகள் பதிவு
திருப்பூரில் அதிகபட்சமாக 2 மணி நேரத்தில் 20.38% வாக்குகள் பதிவாகியுள்ளன
-
Tamil Nadu Elections Poll Percentage: 9 மணி நிலவரம் -17.69% வாக்குகள்
காலை 9 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 17.69% வாக்குகள் பதிவாகியுள்ளன.
விவரம்
தமிழகம் முழுவதும் காலை 9 மணி நிலவரப்படி 17.69% வாக்குகள் பதிவு#election #ElectionDay #TNElection #turnout pic.twitter.com/hbSjvaCxv9
— TV9 Tamil (@TV9Tamil) April 23, 2026
-
Voting Percentage : 15% தாண்டிய வாக்குப்பதிவு
காலை 9 மணி நிலவரப்படி பெரும்பாலான மாவட்டங்களில் 15% தாண்டிய வாக்குப்பதிவு. அதனால் இந்த முறை வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு
-
TTV Dhinakaran Voting : டிடிவி தினகரன் வாக்குப்பதிவு
அமமுக தலைவர் டிடிவி தினகரன் தன்னுடைய வாக்கினை பதிவு செய்தார். பின்னர் பேசிய அவர், அனைவரும் வாக்களிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்
-
Nagappattinam Voting Percentage: நாகை மாவட்டத்தில் 17.51% வாக்குப்பதிவு
காலை 9 மணி நிலவரப்படி நாகை மாவட்டத்தில் 17.51% வாக்குப்பதிவு நிறைவடைந்திருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் 14.84% வாக்குப்பதிவு
-
Sivakarthikeyan Voting: வாக்கினை பதிவு செய்தார் சிவகார்த்திகேயன்
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வாக்கு மையத்தில் தன்னுடைய வாக்கினை பதிவு செய்தார் நடிகர் சிவகார்த்திகேயன். தன்னுடைய மனைவியுடன் வந்து வாக்கினை பதிவு செய்தார்.
-
Sivakumar Voting: வாக்கினை பதிவு செய்தார் நடிகர் சிவக்குமார்
சென்னை டிநகரில் தன்னுடைய வாக்கினை பதிவு செய்தார் நடிகர் சிவக்குமார். யார் ஆட்சிக்கு வந்தாலும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டுமென சிவக்குமார் வேண்டுகோள்
-
அன்புமணி ராமதாஸ் வாக்களித்தார்
சென்னை தியாகராய நகரில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தன்னுடைய மகள்களோடு வந்து வாக்களித்தார்.
-
தமிழ்நாடு வெல்லும் – முக ஸ்டாலின்
நான் வந்து ஜனநாயக கடமையை ஆற்றியதுபோல அனைவரும் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாடு வெல்லும் – முக ஸ்டாலின்
-
MK Stalin Voting : முதலமைச்சர் முக ஸ்டாலின் வாக்கினை பதிவு செய்தார்
குடும்பத்துடன் வருகை தந்து தங்களுடைய வாக்கினை பதிவு செய்தார் முதல்வர் முக ஸ்டாலின்
வீடியோ
#WATCH | Tamil Nadu Elections 2026 | Tamil Nadu CM and DMK candidate from Kolathur, MK Stalin casts his vote and shows his inked finger, at a polling station in Chennai. pic.twitter.com/L8QJwihdNB
— ANI (@ANI) April 23, 2026
-
Chennai Constituency Election: ஸ்டாலின் வருகை
சென்னை தேனாம்பேட்டை வாக்கு மையத்தில் வாக்களிக்க குடும்பத்துடன் வருகை தந்த முதலமைச்சர் முக ஸ்டாலின்
#WATCH | Tamik Nadu Elections 2026 | Tamil Nadu CM and DMK candidate from Kolathur, MK Stalin arrives at a polling station in Chennai to cast his vote.
His family, including his son and Deputy CM Udhayanidhi Stalin, is also with him. pic.twitter.com/NrywmnKo5a
— ANI (@ANI) April 23, 2026
-
அனைவரும் வாக்களிக்க வேண்டும் – ரஜினிகாந்த்
வாக்காளர்கள் அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டுமென ரஜினிகாந்த வேண்டுகோள்
-
Rajinikanth Voting : வாக்கினை பதிவு செய்தார் ரஜினிகாந்த்
மகள் சவுந்தர்யாவுடன் வந்து தன்னுடைய வாக்கினை பதிவு செய்தார் ரஜினிகாந்த்
வீடியோ
#WATCH | Tamil Nadu Elections 2026 | Superstar Rajinikanth casts his vote at Stella Maris School, in Chennai. pic.twitter.com/ILfnpfdMRb
— ANI (@ANI) April 23, 2026
-
Rajinikanth : கோபாலபுரம் வந்த ரஜினிகாந்த்
சென்னை கோபாலபுரத்தில் உள்ள வாக்கு மையத்தில் வாக்களிக்க வந்த நடிகர் ரஜினிகாந்த்
-
Vijay Voting : வாக்களித்தார் தவெக தலைவர் விஜய்
சென்னை நீலாங்கரை பள்ளியில் தன்னுடைய வாக்கினை பதிவு செய்தார் தவெக தலைவர் விஜய்
-
Vijay : வாக்களிக்க புறப்பட்டுச் சென்ற விஜய்
வாக்களிப்பதற்காக நீலாங்கரை இல்லத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற தவெக தலைவர் விஜய்
-
வரிசையில் காத்திருந்து வாக்களித்த கமல்ஹாசன்
#WATCH | Tamil Nadu Assembly Elections | Chennai, Tamil Nadu: MNM chief and actor Kamal Haasan, along with his daughter Shruti Haasan, cast their votes at Alwarpet School in Chennai. pic.twitter.com/A13oRmeuyV
— ANI (@ANI) April 23, 2026
மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் இன்று காலை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில், தனது மகள் ஸ்ருதிஹாசனுடன் வருகை தந்து நீண்ட வரிசையில் காத்திருந்து தனது ஜனநாயக கடமையாற்றினார்.
-
வெளியே வாங்க.. வாக்களியுங்க.. குஷ்பு வேண்டுகோள்
வீட்டை விட்டு வெளியே வந்து, உங்களது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வாக்களியுங்கள் என்று பாஜக நிர்வாகி குஷ்பு வேண்டுகோள் விடுத்துள்ளார். நமது மாநிலத்தின் நலன் முக்கியம் அதனை மனதில் வைத்து வாக்களியுங்கள். இன்று வேறு எந்த வேலையும் வைத்துக்கொள்ள வேண்டாம், மாலை 6 மணி வரை அவகாசம் உள்ளது தவறாமல் வாக்களியுங்கள் என்று அவர் கூறியுள்ளார்.
-
தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்
இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://voters.eci.gov.in/ என்ற இணைய பக்கத்துக்கு சென்று தங்கள் வாக்குச்சாவடி விவரங்களை தெரிந்துகொள்ள முடியும்.
-
ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் – எடப்பாடி பழனிசாமி
வாக்காளர்கள் அனைவரும் நம்பிக்கையுடன் 100% வாக்களிக்க வேண்டும், தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் – எடப்பாடி பழனிசாமி
-
வாக்குச்சாவடி விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறவுள்ள நிலையில் வாக்களார்கள் தங்கள் வாக்குச்சாவடி விவரங்களை முன் கூட்டியே தெரிந்துகொள்வது அவசியம்
-
Salem Constituency Election: ஈபிஎஸ் குடும்பத்துடன் வாக்களித்தார்
சேலம் சிலுவம்பாளையத்தில் மகன், மனைவி ஆகியோருடன் வந்து வாக்களித்தார் எடப்பாடி பழனிசாமி
-
Neelankarai Constituency Election : அனைவரும் வாக்களிக்க வேண்டும் – சீமான்
வாக்கு செலுத்தாமல் இருப்பதுதான் குற்றம் தான். அனைவரும் ஆர்வத்துடன் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் – சீமான்
-
PM Modi : அனைவரும் வாக்களிக்க பிரதமர் மோடி வேண்டுகோள்
தமிழ்நாட்டில் அனைத்து வாக்காளர்களும் மிகுந்த உற்சாகத்துடன் வாக்களிக்க வேண்டும் – பிரதமர் மோடி
பதிவு
As Tamil Nadu votes in the Assembly elections, I call upon all voters to take part enthusiastically in this sacred duty of democracy. I urge the youth and the women of Tamil Nadu in particular to come out and vote in record numbers.
— Narendra Modi (@narendramodi) April 23, 2026
-
தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வாக்குச்சாவடிக்குள் புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டனை விதிக்கப்படும் என கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
-
போட்டோ வீடியோ எடுப்பது குற்றம்
வாக்குச்சாவடி மையத்திற்குள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் (EVM) வாக்களிக்கும் போது, அதை புகைப்படம் எடுப்பதோ அல்லது வீடியோ பதிவு செய்வதோ சட்டப்படி குற்றமாகும்
-
Tamil Nadu Election Voting: 7 மணிக்கே ஆர்வம் காட்டும் மக்கள்
காலை 7 மணிக்கே வரிசையில் காத்திருந்து வாக்களிக்க ஆர்வம் காட்டும் மக்கள்.
-
Tamil Nadu Election Voting: 7 மணிக்கு சரியாக வாக்குப்பதிவு தொடக்கம்
தமிழ்நாட்டின் அடுத்த ஆட்சியை தீர்மானிப்பதற்கான வாக்குப்பதிவு தமிழ்நாடு முழுவதும் தொடங்கியது. காலை 7 மணிக்கு சரியாக வாக்குப்பதிவு தொடங்கியது. முன்னதாக மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரம் சோதனை செய்யப்பட்டது.
-
TVK – NTK : மற்ற கட்சிகளின் விவரம்
நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம், சசிகலா தலைமையிலான அனைத்திந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவை 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது.
-
Ajithkumar : 15 நிமிடம் முன்னதாக வந்த அஜித்
திருவான்மியூர் பகுதிக்கு காலை 6.45 மணிக்கே வருகை தந்து வாக்களிக்க காத்திருந்த நடிகர் அஜித்குமார்.
-
ADMK : அதிமுக கூட்டணி விவரம்
அதிமுக 169 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதமுள்ள 65 தொகுதிகளை கூட்டணி கட்சிகளான பாரதீய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி ( அன்புமணி தரப்பு), அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகளுக்கு பங்கீடு செய்து கொடுத்துள்ளது
-
DMK : திமுக கூட்டணி கட்சிகள்
திராவிட முன்னேற்ற கழகம் 164 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதமுள்ள 70 தொகுதிகளை காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், தேசிய முற்போக்கு திராவிட கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு பங்கீடு செய்து கொடுத்துள்ளது.
-
Tamil Nadu Election Voting: காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு
அரசியல் கட்சிகளின் முகவர்களின் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கி நடைபெறுகிறது. இதன் பிறகு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும்
வீடியோ
#WATCH | Tamil Nadu Elections 2026 | Mock polling underway at a polling station in Tiruchirappalli. Voting will begin at 7 am. pic.twitter.com/JW7PBokniL
— ANI (@ANI) April 23, 2026
-
Tamil Nadu Polling: 4 முனை போட்டி நிலவுகிறது
தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசியல் களத்தில் திராவிட முன்னேற்ற கழக கூட்டணி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவி வருகிறது.
-
Tamil Nadu Election Voting: தமிழகத்தில் ஜனநாயக திருவிழா
தமிழகத்தில் ஜனநாயக திருவிழா இன்று காலை 7 மணிக்கு சிறப்பாக தொடங்குகிறது. தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்கின்றன
Published On - Apr 23,2026 6:00 AM