AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Actor Ajithkumar: வெள்ளை நிற கோட் சூட்.. முதல் ஆளாக ஓட்டு போட வந்த நடிகர் அஜித்!

காலை 7 மணிக்கு தான் வாக்குப்பதிவு தொடங்க உள்ள நிலையில், அவர் வாக்குச்சாவடிக்கு 6.45 மணியளவில் வருகை தந்துள்ளார். இதற்காக வெள்ளை நிற இன்னோவா காரில், வெள்ளை நிற கோட் சூட் அணிந்தபடி அவர் வருகை தந்தார். அவரை வரவேற்கும் விதமாக ஏராளமான ரசிகர்கள் அங்கு திரண்டுள்ளனர்.

Actor Ajithkumar: வெள்ளை நிற கோட் சூட்.. முதல் ஆளாக ஓட்டு போட வந்த நடிகர் அஜித்!
அஜித்குமார்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 23 Apr 2026 07:41 AM IST

Tamilnadu Polls 2026: ஜனநாயக கடமையை ஆற்ற தமிழ்நாடு முழுவதும் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்குச்சாவடி முன் வரிசையில் காத்திருக்கின்றனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க உள்ள நிலையில், 6.30 மணியளவில் இருந்தே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். குறிப்பாக வெயிலுக்கு முன்பே தங்களது வாக்குகளை செலுத்த முனைப்பு காட்டி வருகின்றனர்.

இதையும் படிக்க: கள்ள ஓட்டு போடப்பட்டால் கவலை வேண்டாம்: மீண்டும் வாக்களிக்க சட்டத்தில் இடமுண்டு!

வாக்குச் செலுத்த வந்த அஜித்குமார்:

அந்தவகையில், சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குச் செலுத்தவதற்காக நடிகர் அஜித்குமார் காலையிலேயே முதல் ஆளாக வருகை தந்துள்ளார். காலை 7 மணிக்கு தான் வாக்குப்பதிவு தொடங்க உள்ள நிலையில், அவர் வாக்குச்சாவடிக்கு 6.45 மணியளவில் வருகை தந்துள்ளார். இதற்காக வெள்ளை நிற இன்னோவா காரில், வெள்ளை நிற கோட் சூட் அணிந்தபடி அவர் வருகை தந்துள்ளார். அவரை வரவேற்கும் விதமாக ஏராளமான ரசிகர்கள் அங்கு திரண்டுள்ளனர்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு:

தொடர்ந்து, அவரது ரசிகர்கள் கூட்டத்தில் அவர் சிக்கிக்கொள்ளாமல் இருக்க, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவரை நேரடியாக வாக்குச்சாவடிக்குள் அழைத்துச்சென்றனர். ஒவ்வொரு தேர்தலின் போதும், நடிகர் அஜித்குமார் தனது ஜனநாயக கடமையை தவறாமல் ஆற்றி வருகிறார். அவ்வாறு, இந்த தேர்தலுக்கும் அனைவருக்கும் முன்மாதிரியாக அவர் தனது வாக்கினை செலுத்த காலையிலேயே வாக்குச்சாவடி வருகை தந்தார்.

முதல் ஆளாக வாக்குசெலுத்தினார்:

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருவான்மியூர் வாக்குச்சாவடியில் அஜித்குமார் முதல்ஆளாக தனது வாக்கினை செலுத்தினார். தொடர்ந்து, அங்கிருந்த ஊடகங்களுக்கு தான் வாக்குச்செலுத்தியாதை காண்பிக்கும் வகையில், தனது விரலில் மை வைக்கப்பட்டதை அவர் உயர்த்தி காட்டினார்.

இதையும் படிக்க: வாக்குச்சாவடிக்குள் போட்டோ, வீடியோ எடுக்ககூடாது.. மீறினால் சிறை தண்டனை..

கூட்டத்தை தவிர்க்க முனைப்பு:

தன்னை பார்க்க அதிக அளவில் கூட்டம் வந்து விடும் என்பதால், அதனை தவிர்க்க வேண்டும் என்பதற்காக வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாகவே வாக்குச்சாவடி மையத்திற்கு வந்து முதல் ஆளாக வாக்கு செலுத்தி விட்டு அவர் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Follow Us