தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்ட விவகாரம்: யார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கு முதல் இடம் – த.வெ.க விளக்கம்.
தமிழக வெற்றிக் கழகம் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "நமது மனசாட்சி உள்ள மக்களாட்சியில் யார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கு முதலிடமே இருக்கும். எம் தாய்மொழியை மூன்றாம் இடத்திற்குத் தள்ளுவதை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம். அதற்குக் காரணமாக ஒன்றிய பா.ஜ.க. அரசாக இருந்தாலும் சரி, ஆளுநராக இருந்தாலும் சரி, கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்கிறோம் என தெரிவித்துள்ளது.
ஜூலை 28, 2026: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். விழாவின் போது முதலில் ‘வந்தே மாதரம்’, பின்னர் தேசிய கீதம், அதன்பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
3வதாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து:
ஏற்கனவே முதலமைச்சர் பதவியேற்பு விழாவிலும் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டிருந்தது. அப்போது அது மத்திய அரசின் நிகழ்ச்சி என்பதால் அவ்வாறு நடைபெற்றதாகவும், இனி தமிழகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படும் என்றும் தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: காவிரி விவகாரத்தில் மத்திய அரசு பின்வாங்கியது கர்நாடக தேர்தல் அரசியலுக்காகவா – அண்ணாமலை கேள்வி..
தாய்த் தமிழுக்கு முதலிடமே இருக்கும் – த.வெ.க:
நமது மனசாட்சி உள்ள மக்களாட்சியில் யார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கு முதலிடமே இருக்கும். எம் தாய்மொழியை மூன்றாம் இடத்திற்குத் தள்ளுவதை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம்.அதற்குக் காரணமாக ஒன்றிய பா.ஜ.க. அரசாக இருந்தாலும் சரி அல்லது ஆளுநராக இருந்தாலும் சரி கடுமையான கண்டனங்களைப் பதிவு…
— TVK Party HQ (@TVKPartyHQ) July 28, 2026
இந்த சூழலில், தமிழக வெற்றிக் கழகம் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “நமது மனசாட்சி உள்ள மக்களாட்சியில் யார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கு முதலிடமே இருக்கும். எம் தாய்மொழியை மூன்றாம் இடத்திற்குத் தள்ளுவதை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம். அதற்குக் காரணமாக ஒன்றிய பா.ஜ.க. அரசாக இருந்தாலும் சரி, ஆளுநராக இருந்தாலும் சரி, கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்கிறோம்.
மேலும் படிக்க: மொட்டை அடித்துக்கொண்டால் ரூ.45 ஆயிரம் ஊக்கத்தொகை.. சேலத்தில் நடந்த நூதன சம்பவம்.. பெண்களுக்கு காத்திருந்த ஷாக்..
எங்கள் நிலத்தில் எங்கள் மொழிக்கே முன்னுரிமை. இதை உறுதியாக நாம் நிலைநாட்டுவோம். சட்ட முன்னெடுப்புத் தேவை எனில், அதற்கும் தயாராகவே இருக்கிறோம்” என தெரிவித்துள்ளது.