சென்னையின் 2வது விமான நிலையம் எங்கே அமைகிறது? அரசு தீவிர ஆலோசனை
Chennai’s Second Airport: பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்ட நிலையில், சென்னைக்கான 2வது விமான நிலையம் அமைப்பதற்கான தேவையைக் கருத்தில் கொண்டு புதிய இடத்தை தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்காக தற்போது 2 இடங்கள் பரிசீலனையில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை, செப்டம்பர் 17 : பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்ட நிலையில், சென்னைக்கான 2வது விமான நிலையம் அமைப்பதற்கான தேவையைக் கருத்தில் கொண்டு புதிய இடத்தை தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அல்லது கும்மிடிப்பூண்டி அருகே மணலூர் ஆகிய 2 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அது குறித்து தீவிர விவாதங்கள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
சென்னையின் 2வது விமான நிலையம் எங்கே அமைகிறது?
செய்யூர் சென்னையிலிருந்து சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அங்கு மின் திட்டத்துக்காக ஏற்கனவ 623 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டதாகவும், மேலும் 300 ஏக்கர் புறம்போக்கு நிலமும் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் விமான நிலையம் அமைப்பதற்கான இடமாக செய்யூர் முதன்மையாக தேர்வு செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க : தோனிக்கு நீதிமன்றம் நோட்டீஸ் – ரூ.100 கோடி மான நஷ்டஈடு வழக்கில் திருப்பம்




அதே போல திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள மணலூர் பகுதியும் அரசின் தேர்வில் முக்கிய அங்கம் வகிக்கிறது. ஆனால், இந்த பகுதி பழவேற்காடு அருகே அமைந்துள்ளதால், சுற்றுச்சூழல் தொடர்பான சிக்கல்கள் எழும் என கூறப்படுகிறது. இதுகுறித்து இந்திய விமான நிலையங்கள் ஆணையம் மேற்கொள்ளும் சாத்தியக்கூறு ஆய்வு மற்றும் அதன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே, இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான இடம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே மேற்சொன்ன 2 இடங்களுமே கடந்த ஆட்சிகளில் தேர்வு செய்யப்பட்டு, பல்வேறு சூழலியல் மற்றும் பாதுகாப்பு காரணங்களால் நீக்கிவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த பகுதிகளை தேர்வு செய்வதில் தமிழக அரசுக்கு தயக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் மேற்சொன்ன இரண்டு இடங்களில் செய்யூர் தான் முதல் சாய்ஸாக இருக்கிறது என்று அரசு அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. ஏனெனில் கும்மிடிப்பூண்டியை காட்டிலும் குறைந்த தொலைவில் அமைந்துள்ளது.
இதையும் படிக்க : டாஸ்மாக் பார்களில் இனி உணவகங்கள் – அமைச்சர் விக்னேஷ் முக்கிய அறிவிப்பு
கும்மிடிப்பூண்டியை எடுத்துக் கொண்டால் பழவேற்காடு ஏரி இருப்பதால் சுற்றுச்சூழல் பிரச்னைகள் எழ வாய்ப்பிருக்கிறது. இதற்கு சூழலியல் அனுமதி கிடைக்க வாய்ப்பில்லை என்ற பார்வை முன்வைக்கப்படுகிறது. செய்யூரில் புதிய விமான நிலையத்திற்கு பரிந்துரை செய்யப்பட்ட இடத்தில் இருந்து வடக்கில் தாம்பரம் ராணுவ விமான படைத்தளம் அமைந்துள்ளது. எனவே அருகில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ராணுவ தளத்தை மறுகட்டமைப்பு செய்தால் மட்டுமே செய்யூரில் அனுமதி கிடைக்க வாய்ப்புள்ளது.