AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

3வது அணியை உருவாக்க முயற்சி – மம்தா பானர்ஜி மற்றும் உத்தவ் தாக்கரேவை சந்தித்த கனிமொழி

Kanimozhi Meets Mamata : திமுக எம்பி கனிமொழி மும்பையில் சிவசேனாவை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவை சந்தித்து பேசியுள்ளார். அதனைத் தொடர்ந்து கொல்கத்தாவில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜியையும் அவர் சந்தித்து பேசியுள்ளதால் திமுக 3வது அணியை உருவாக்க முயற்சிக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

3வது அணியை உருவாக்க முயற்சி – மம்தா பானர்ஜி மற்றும் உத்தவ் தாக்கரேவை சந்தித்த கனிமொழி
மமதா பானர்ஜி - கனிமொழி - உத்தவ் தாக்கரே
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 17 Sep 2026 19:55 PM IST

சென்னை, செப்டம்பர் 17 : திமுக எம்பி கனிமொழி மும்பையில் சிவசேனாவை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவை சந்தித்து பேசியுள்ளார். அதனைத் தொடர்ந்து கொல்கத்தாவில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜியையும் அவர் சந்தித்து பேசியுள்ளார். இதனையடுத்து தேசிய அளவில் 3வது அணியை உருவாக்கும் முயற்சியில் திமுக ஈடுபட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மம்தா பானர்ஜி மற்றும் உத்தவ் தாக்கரேவை சந்தித்த கனிமொழி

முன்னதாக தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் தவெக வென்ற நிலையில் அக்கட்சி ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்தது. திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 5 தொகுதிகளில் வென்றது. இதனையடுத்து தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. இதனையடுத்து திமுக – காங்கிரஸ் கூட்டணி முடிவுக்கு வந்தது. இதனையடுத்து தேசிய அளவில் நடைபெற்ற இந்தியா கூட்டணியிலும் திமுக பங்கேற்கவில்லை.

இதையும் படிக்க : டாஸ்மாக் பார்களில் இனி உணவகங்கள் – அமைச்சர் விக்னேஷ் முக்கிய அறிவிப்பு

இந்த நிலையில் திமுக எம்பி கனிமொழி தேசிய அளவில் முக்கிய தலைவர்களை சந்தித்து வருவது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. இதனையடுத்து தேசிய அளவில் காங்கிரஸ் அல்லாத 3வது அணியை உருவாக்கும் முயற்சியில் திமுக இறங்கியுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இது குறித்து திமுக தரப்பல் உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

அந்த வகையில் மும்பையில் சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவை கனிமொழி சந்தித்து பேசியிருந்தார். இந்த சந்திப்பு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நடைபெற்றதாகவும், தொகுதி மறுவரையறை மசோதா, இந்தியா கூட்டணியின் எதிர்காலம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாகவும் சிவசேனா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, டெல்லியில் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் தலைவர் சரத் பவார் மற்றும் அவரது மகள் சுப்ரியா சுலே ஆகியோருடனும் கனிமொழி தனித்தனியாக ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியானது.

இதையும் படிக்க : நவோதயா பள்ளிகளுக்கு முட்டுக்கட்டை?.. “3 மாசம் தான் டைம்!”.. தமிழக அரசுக்கு கெடு விதித்த உச்சநீதிமன்றம்!!

இந்த நிலையில் கொல்கத்தாவில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜியை கனிமொழி சந்தித்து பேசியுள்ளார். இந்த தொடர்ச்சியான சந்திப்புகள் காரணமாக 3வது அணி உருவாக அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே , தற்போது வரை இது ஒரு உறுதியான புதிய கூட்டணி என அறிவிக்கப்படவில்லை. மம்தா பானர்ஜி மற்றும் உத்தவ் தாக்கரேவை கனிமொழி சந்தித்ததற்கான காரணம் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  மு.க.ஸ்டாலின் தலைமையில் பாஜக, காங்கிரஸ் அல்லாத 3வது அணியை உருவாக்க திமுக முயற்சி என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Follow Us