AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“Not everything loud is true”.. சர்கஸ் கூடாரமாக மாறிய சட்டசபை – திமுக எம்.பி கனிமொழி சுளீர்

காவல்துறை மானியக் கோரிக்கைக்கு பதிலளிக்க வேண்டிய முதலமைச்சர், எழுதிக் கொடுத்ததைப் படிப்பதைத் தவிர, கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்க முடியாமல் நீண்ட சொற்பொழிவு நிகழ்த்தியதாகவும் கனிமொழி விமர்சித்துள்ளார். சட்டம்-ஒழுங்கு குறித்தும், குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்தும், பிற மக்கள் பிரச்சனைகள் குறித்தும் பேச வேண்டிய சபை இன்று சர்க்கஸ் கூடாரமாக மாறியிருக்கிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“Not everything loud is true”.. சர்கஸ் கூடாரமாக மாறிய சட்டசபை – திமுக எம்.பி கனிமொழி சுளீர்
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 07 Sep 2026 18:01 PM IST

செப்டம்பர் 7, 2026: தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பேசியதற்கு பதிலளிக்கும் வகையில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது சமூக வலைதளப் பக்கத்தில் கடுமையாக விமர்சனம் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் பதிலுரை வழங்கினார். அப்போது திமுக ஆட்சிக்காலம் மற்றும் அக்கட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து சுமார் 45 நிமிடங்கள் பேசினார். குறிப்பாக, அமலாக்கத்துறை தாக்கல் செய்ததாகக் கூறப்படும் ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு? அடுத்த முறை நன்றாகத் தயாராகி வர வேண்டும்” என விமர்சித்திருந்தார்.

மேலும் படிக்க: இரும்பு கம்பியில் சிக்கிய யானை.. இடது முன்னங்காலில் பலத்த காயம்.. இரவு, பகலாக பணியாற்றிய வனத்துறை!

முதலமைச்சர் விஜய்க்கு பதிலளித்த எம்.பி கனிமொழி:


இந்நிலையில், கனிமொழி வெளியிட்டுள்ள பதிவில், “வரலாறு பேச வேண்டுமென்றால் நீதிக்கட்சி காலத்திலிருந்து தொடங்க வேண்டும். இந்தத் தமிழ்ச் சமூகத்துக்காக நாங்கள் என்ன செய்தோம் என்பதிலிருந்து தொடங்க வேண்டும். ஆனால், தவெகவிற்கும் அதன் முதலமைச்சர்  ச. ஜோசப் விஜய்க்கும் அந்த வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “தலைவர் கலைஞரைப் பற்றியோ, திமுகவைப் பற்றியோ அவதூறாகப் பேசுவதையே அரசியல் தகுதியாக இன்னும் எத்தனை காலத்திற்கு நினைத்துக்கொள்ளப் போகிறார்கள் என்று தெரியவில்லை” என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: செல்வாக்கு மிகுந்த நபர்கள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிப்பதே சிரமமாக உள்ளது – எஸ்.பி வேலுமணி எதிரான வழக்கில் உயர்நீதிமன்றம் அதிருப்தி..

Not everything loud is true – கனிமொழி சுளீர்:

காவல்துறை மானியக் கோரிக்கைக்கு பதிலளிக்க வேண்டிய முதலமைச்சர், எழுதிக் கொடுத்ததைப் படிப்பதைத் தவிர, கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்க முடியாமல் நீண்ட சொற்பொழிவு நிகழ்த்தியதாகவும் கனிமொழி விமர்சித்துள்ளார்.

“சட்டம்-ஒழுங்கு குறித்தும், குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்தும், பிற மக்கள் பிரச்சனைகள் குறித்தும் பேச வேண்டிய சபை இன்று சர்க்கஸ் கூடாரமாக மாறியிருக்கிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார். இறுதியாக, “Not everything loud is true” என பதிவிட்டு கனிமொழி தனது விமர்சனத்தை நிறைவு செய்துள்ளார்.

Follow Us