மணிரத்தினம் இயக்கத்தில்.. விஜய் சேதுபதி – சாய் பல்லவியின் படத்தின் டைட்டில் இதுவா?
Vijay Sethupathi And Sai Pallavis Film: இயக்குநர் மணிரத்தினம் இயக்கத்தில், விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி இருவருமே புதிய திரைப்படத்தில் இணைந்துள்ளனர். இதை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுவரும் நிலையில், படத்தின் டைட்டிலை படக்குழு அறிவித்துள்ளது.
தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi). இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தலைவன் தலைவி (Thalaivan Thalaivii). கடந்த 2025ம் ஆண்டில் வெளியான இப்படமானது இவருக்கு ஓரளவு நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது. இந்த படத்திற்கு பின் தெலுங்கு இயக்குநர் இயக்கத்தில் ஸ்லம்டாக் மற்றும் தமிழில் பத்தா (Maththaa)போன்ற திரைப்படங்களில் நாயகனாக நடித்துவருகிறார். மேலும் தற்போது இயக்குநர் மணிரத்தினத்தின் (Mani Ratnam) இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் இணைந்துள்ளார். இதில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி (Sai Pallavi) நடித்துவருகிறார்.
இந்த படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே மும்பையில் தொடங்கிய நிலையில், சிறப்பாக நடைபெற்றுவருகிறது. சிறப்பான காதல் கதையில் உருவாகியுள்ள நிலையில், இதன் டைட்டிலை படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்திற்கு படக்குழு “இஞ்சி வெல்லம்” (Inji Vellam) என டைட்டில் வைத்துள்ளது.




இதையும் படிங்க: அஜித் குமாரின் அந்தப் படத்தில் முதல் தேர்வு தளபதி விஜய் தான் – இயக்குநர் ராஜ் கபூர்
சாய் பல்லவி மற்றும் விஜய் சேதுபதி கூட்டணி படத்தின் டைட்டில் குறித்து படக்குழு வெளியிட எக்ஸ் பதிவு:
#InjiVellam #ManiRatnam @arrahman #Subaskaran @MadrasTalkies_ @LycaProductions @VijaySethuOffl @Sai_Pallavi92 @sreekar_prasad #AvikMukhopadhayay @ekalakhani #SharmishtaRoy @BrindhaGopal1 @dhilipaction @AmbadyRanjith @bagapath @gkmtamilkumaran @sonymusicsouth @NetflixIndia… pic.twitter.com/MxqAkeBO6c
— Lyca Productions (@LycaProductions) September 7, 2026
சாய் பல்லவி மற்றும் விஜய் சேதுபதியின் படத்தின் கதைக்களம்:
மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படமானது சிறப்பான கதையில் உருவாகிவருகிறது. இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துவருகிறார். இந்த படமானது அதிரடி காதல் கதைக்களத்தில் உருவாகிவருகிறதாம். இந்த படம் கிட்டத்தட்ட ஓகே கண்மணி படத்தை போலவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனாவின் ரணபாலி பட டீசர் ரிலீஸ் தேதி எப்போது? வெளியான அறிவிப்பு இதோ!
மேலும் இப்படமானது மும்பையில் படப்பிடிக்கப்பட்டுவரும் நிலையில், இப்படத்தின் கதையும் மும்பையில் நடக்கும் காதல் கதையில் இருக்கும் என கூறப்படுகிறது. இதன் ஷூட்டிங் சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில், 2026ம் ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் என கூறப்படுகிறது. இப்படத்திற்கு படக்குழு இஞ்சி வெல்லம் என டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், 2027ம் ஆண்டில் தொடக்கத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த 2026ம் ஆண்டில் விஜய் சேதுபதியின் நடிப்பில் ஸ்லம்டாக் திரைப்படமும், பத்தா திரைப்படமும் வெளியாகிறது. இதில் இயக்குநர் அட்லீ தயாரிப்பிலும், இயக்குநர் பாலாஜி தரணீதரன் இயக்கத்திலும் இது உருவாகியுள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி அதிரடி கேங்ஸ்டராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.