அஜித் குமாரின் அந்தப் படத்தில் முதல் தேர்வு தளபதி விஜய் தான் – இயக்குநர் ராஜ் கபூர்
Director Raj Kapoor Recent Interview | தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் நடிகராகவும் பிரபலமானவராக வலம் வந்தவர் ராஜ் கபூர். இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் அஜித் குமார் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படம் ஒன்றில் விஜய் நடிக்க வேண்டியது என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் கடந்த 1999-ம் ஆண்டு மே மாதம் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ஆனந்த பூங்காற்றே. இந்தப் படத்தை இயக்குநர் ராஜ் கபூர் எழுதி இயக்கி இருந்தார். மேலும் நடிகர் அஜித் குமார் இந்தப் படத்தில் நாயகனாக நடித்து இருந்த நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் மீனா, மாளவிகா, மணிவண்ணன்,
வடிவேலு, சாப்ளின் பாலு, விஜயகுமார், ராஜ் கபூர், ராஜன் பி. தேவ், கோவை சரளா, சி.ஆர்.சரஸ்வதி, கிரேன் மனோகர், பாலா சிங், மனோபாலா, மதன் பாப், மயில்சாமி, அம்பிகா, கார்த்திக், பானுப்ரியா, ராஜு சுந்தரம், பாரி வெங்கட் மற்றும் ஜப்பான் குமார் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தப் படம் ரொமாண்டிக் ட்ராமா பாணியில் உருவாகி இருந்தாலும் இந்த படத்தின் கதை ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் படத்தின் இயக்குநர் ராஜ் கபூர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் இந்தப் படத்தில் நடிகர் அஜித் குமாருக்கு முன்பு தளபதி விஜய் நடிக்க இருந்ததாக தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




அஜித் குமாரின் அந்தப் படத்தில் முதல் தேர்வு தளபதி விஜய் தான்:
அஜித் குமார் மற்றும் கார்த்திக் நடிப்பில் நான் இயக்கிய ஆனந்த பூங்காற்றே திரைப்படம், முதலில் தளபதி விஜய் மற்றும் கே. பாக்யராஜ் ஆகியோரை முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வைக்க திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், அப்படம் உருவாவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, பின்னர் அஜித் மற்றும் கார்த்திக் நடிப்பில் அது உருவாக்கப்பட்டது.
சுவாரஸ்யமாக, ஆனந்த பூங்காற்றே படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அஜித் மற்றும் விஜய் ஆகியோர் படப்பிடிப்புத் தளத்தில் தற்செயலாகச் சந்தித்துக்கொண்டனர். அப்போது விஜய் அஜித்திடம், உண்மையில் இந்தப் படத்தில் முதலில் நான் நடித்திருக்க வேண்டியதுதான், என்று கூறினார் என்று ராஜ் கபூர் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… ரவி மோகன் இயக்கும் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார் கெனிஷா
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Director Raj Kapoor in a recent interview:
“Anantha Poongatre, which I eventually directed with #AjithKumar and Karthik, was initially planned with #ThalapathyVijay and K. Bhagyaraj in the lead roles. However, due to delays in the project, the film was later made with Ajith and… pic.twitter.com/pKEMybGuhT
— FilmyBowl Tamil (@FilmyBowlTamil) September 6, 2026
Also Read… மம்முட்டியின் பர்த்டே ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்டது ஓம் படக்குழு