AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தமிழ் சினிமாவில் நான் நடித்த முதல் படம் ட்ராகன் இல்லை… கயாடு லோஹர் ஓபன் டாக்

Actress Kayadu Lohar Recent Interview | தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கயாடு லோஹர். இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் தமிழ் சினிமாவில் நடித்த முதல் படம் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் நான் நடித்த முதல் படம் ட்ராகன் இல்லை… கயாடு லோஹர் ஓபன் டாக்
கயாடு லோஹர்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 05 Sep 2026 21:52 PM IST

தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை கயாடு லோஹர். இவரது நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் மட்டும் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் இதுவரை 5 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அதில் தமிழ் சினிமாவில் மட்டும் இதுவரை இதயம் முரளி மற்றும் இம்மார்டல் ஆகியப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இதில் இதயம் முரளி படத்தில் இரண்டு நாயகிகளில் ஒரு நாயகியாக நடிகை கயாடு லோஹர் நடித்து இருந்த நிலையில் இம்மார்டல் படத்தில் அவர்தான் நாயகியாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி  தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை கயாடு லோஹர் சமீபத்தில் அளித்தப் பேட்டி தொடர்ந்து ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது. அந்தப் பேட்டியில் அவரது நடிப்பில் முன்னதாக வெளியான படங்கள் மற்றும் அடுத்ததாக உருவாகி வரும் படங்கள் குறித்த தகவல்களை தெரிவித்து வருகிறார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் நான் நடித்த முதல் படம் ட்ராகன் இல்லை:

அதன்படி நடிகை கயாடு லோஹர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் பேசியதாவது, உண்மையில், தமிழ் சினிமாவில் ‘இதயம் முரளி’தான் எனது முதல் படம். இம்மார்ட்டல் இரண்டாவது படம், டிராகன் மூன்றாவது படம். ஆனால், இந்த மூன்று படங்களின் படப்பிடிப்புகளும் ஒரே நேரத்தில் நடைபெற்றன. இவற்றில் டிராகன் படம் தான் முதலில் தமிழ் சினிமாவில் வெளியானது. இதனால் அது தமிழ் மொழியில் அறிமுகப் படமாக உள்ளது என்று நடிகை கயாடு லோஹர் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… Kayadu Lohar: இம்மார்ட்டல் பட புரொமோஷனில் பங்கேற்காத சர்ச்சை.. உண்மையை உடைத்த கயாடு லோஹர்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… இரும்புத்திரை படத்தின் முதல் சாய்ஸ் விஷால் இல்லை… இயக்குநர் பி.எஸ்.மித்திரன்

Follow Us