தனுஷ் நடிப்பில் ரோம்-காம் பாணியில் வெளியான திருடா திருடி படம் 23 ஆண்டுகளை நிறைவு செய்தது – இயக்குநர் வெளியிட்ட பதிவு!
23 Years Of Thiruda Thirudi Movie | நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் திருடா திருடி. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 23 ஆண்டுகளைக் கடந்த நிலையில் இயக்குநர் வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் கடந்த 2003-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 05-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் திருடா திருடி. இந்தப் படத்தினை இயக்குநர் சுப்ரமணிய சிவா எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படத்தின் மூலமாகதான் இவர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து இயக்குநர் சுபரமணிய சிவா இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியான பெரும்பான்மையான படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் ரொமாண்டிக் காமெடி பாணியில் உருவான இந்த திருடா திருடி படத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடித்து இருந்தார். அவருக்கு ஜோடியாக நடிகை சாயா சிங் நடித்து இருந்த நிலையில் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் கருணாஸ், மாணிக்க விநாயகம், கம்பர் ஜெயராமன், டெல்லி கணேஷ், கத்தரிக்கோல் மனோகர், முத்துகாளை, கிருஷ்ணா, கூல் சுரேஷ், சுகி, எஸ்.வி.தங்கராஜ் மற்றும் கௌசல்யா செந்தாமரை என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.




தனுஷின் திருடா திருடி படம் 23 ஆண்டுகளை நிறைவு செய்தது:
இந்தப் படத்தில் பெற்றோர்களுக்கு இரண்டாவது மகனாக இருக்கும் தனுஷ் வீட்டில் எந்த விசயத்திற்கும் பொருப்பாக இல்லாமல் தொடர்ந்து ஜாலியாக சுற்றுத்திரியும் இளைஞராக இருக்கிறார் தனுஷ். ஒரு கட்டத்தில் குடும்பத்தில் இருந்து விலகி சென்னையில் வேலைக்கு செல்கிறார். அங்கு அவர் எதிர்பார்க்காத பல நிகழ்வுகள் நடைபெறும். அவை அனைத்தும் மிகவும் ஜாலியாக மக்களிடையே வரவேற்பைப் பெறும் காமெடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 23 ஆண்டுகளை நிறைவு செய்து உள்ள நிலையில் இயக்குநர் சுப்ரமணிய சிவா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… Dhanush: மீண்டும் தெலுங்கு இயக்குநரின் இயக்கத்தில் நடிக்கிறாரா தனுஷ்?
இயக்குநர் சுப்ரமணிய சிவா வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
23 Years Of Thiruda Thirudi 🙏❤️ @dhanushkraja pic.twitter.com/DzvevHMuk6
— Subramaniam Shiva (@DirectorS_Shiva) September 5, 2026
Also Read… மோட்டோர் ஸ்போர்ட்ஸ் நகரம் – முதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன நடிகர் அஜித்