Dhanush: மீண்டும் தெலுங்கு இயக்குநரின் இயக்கத்தில் நடிக்கிறாரா தனுஷ்?
Dhanush New Movie: தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் தனுஷ். இவர் தற்போது இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் ஓம் படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் இவர் தெலுங்கு இயக்குநரின் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் இணைவதாக தகவல்கள் வெளியாகிவருகிறது. இது குறித்து விவரமாக பார்க்கலாம்.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் நாயகனாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகிவருபவர் தனுஷ் (Dhanush). இவரின் இயக்கம் மற்றும் நடிப்பில் தொடர்ந்து பிரம்மாண்டமான படங்கள் வெளியாகிவருகிறது. இவர் தற்போது சினிமாவில் படத்தை இயக்குவதை குறைத்துக்கொண்டு, படங்களில் ஹீரோவாக நடிப்பதில் ஆர்வம் காட்டிவருகிறார். இவர் தற்போது அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் (Rajkumar Periasamy) இயக்கத்தில் ஓம் (Om) என்ற படத்தில் நாயகனாக நடித்துவருகிறார். இந்த படமானது செம்மர கடத்தல் தொடர்பான ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகிவருகியது. இந்த படத்தை தனுஷ் தயாரிக்க, சாய் அபயங்கர் (Sai Abhyankkar) இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பணிகளும் சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில், படமானது 2026ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது.
இந்நிலையில் இப்படத்தின் பணிகள் ஒருபுறம் நடக்க, டி56 (D56) படத்தில் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடிக்கிறார். இந்நிலையில் இதன் பிறகு, தெலுங்கு இயக்குநர் (Telugu Director) இயக்கத்தில் புது படத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகிவருகிறது.




இதையும் படிங்க: தனது ரெட்டை குழந்தைகளுக்கு பெயர் வைத்த பிக் பாஸ் கவின்.. அவரே வெளியிட்ட பதிவு!
தெலுங்கு இயக்குநருடன் மீண்டும் இணையும் தனுஷ்:
நடிகர் தனுஷ், ஏற்கனவே இயக்குநர் வெங்கி அட்லூரி , சேகர் கமுல்லா போன்ற இயக்குநர்களுடன் பணியாற்றியுள்ளார். சமீபத்தில் ஹிட்டான இருமுடி படத்தை இயக்கிய இயக்குநர் சிவா நிர்வானா, தனுஷுடன் ஒரு புதிய படத்திற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. தனுஷ் ஏற்கனவே தெலுங்கு இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றியதில் வெற்றி கண்டுள்ளார். இது மற்றொரு சுவாரஸ்யமான தமிழ்-தெலுங்கு கூட்டணியாக அமையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: லெஜண்ட் சரவணனின் அடுத்த படத்தை இயக்கும் சிவகார்த்திகேயன் பட இயக்குநர்? வைரலாகும் தகவல்
தனுஷ் இணையும் புதிய தெலுங்கு இயக்குநர் குறித்து வைரலாகும் எக்ஸ் பதிவு:
– Director #ShivaNirvana, who recently delivered the Blockbuster #Irumudi, is reportedly in talks with #Dhanush for a new film.
– Dhanush has already found success working with Telugu directors through #Vaathi and #Kubera both turning out to be major successes for him. If this… pic.twitter.com/OFkeHfG8mM
— Movie Tamil (@_MovieTamil) September 3, 2026
தனுஷ் ஓம் படத்தின் ஷூட்டிங்கை முடித்ததும் இயக்குநர், தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் , டி56 படத்தில் இணைகிறார். இதை தனுஷின் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைப்பதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் நடிகையாக ப்ரீத்தி முகுந்தன் நடிக்கிறாராம் என கூறப்படுகிறது. இப்படத்திற்கு பின், தெலுங்கு இயக்குநரின் இயக்கத்தில் புது படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது