Dhanush: இயக்குநராக எனது முதல் தேசிய விருது.. இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி – தனுஷ்!
Dhanushs Historic Win: கோலிவுட் சினிமாவில் உச்ச நடிகராகவும், இயக்குநராகவும் இருந்துவருபவர்தான் தனுஷ். இவருக்கு சமீபத்தில் 72வது திரைப்பட விருது அறிவிப்பில், மொத்தம் மூன்று விருதுகள் அறிவிக்கப்பட்டது. அதற்கு தனது ரசிகர்கள் மற்றும் தேசிய விருது கமிட்டிக்கு நன்றி தெரிவித்து தனுஷ் எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார்.
தென்னிந்திய மொழி சினிமாவில் சிறந்த நடிகராகலாவும், இயக்குநராகவும் அனைவராலும் அறியப்பட்டுவருப்பவர் தனுஷ் (Dhanush). இவர் இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர் மற்றும் எழுத்தாளர் என பல்வேறு பணிகளை சினிமாவில் சிறப்பாக செய்துவருகிறார். இவரின் இயக்கத்திலும், நடிப்பிலும் தொடர்ந்து பிரம்மாண்டமான படங்கள் வெளியாகிவருகிறது. அந்த விதத்தில், இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியாகியிருந்த படம் இட்லி கடை (Idli Kadai). கடந்த 2025ம் ஆண்டில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது. கர படத்திற்கு பின் தற்போது இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் (Rajkumar Periasamy) இயக்கத்தில் ஓம் (Om) படத்திலும் நாயகனாக நடித்துவருகிறார்.
நேற்று 2026ம் ஆண்டு ஜூலை 18ம் தேதியில், 72வது தேசிய திரைப்பட விருதுகள் (72nd National Film Awards) வென்றவர்கள் யார் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் தனுஷ் மட்டும் கிட்டத்தட்ட 3 தேசிய விருதுகளை வென்றுள்ளார். அதற்காக தனது ரசிகர்களுக்கும், தேசிய விருது கமிட்டிக்கு நன்றி தெரிவித்து எக்ஸ் பக்கத்தில் பதிவை வெளியிட்டுள்ளார்.




இதையும் படிங்க: அமரன் முதல் ராயன் வரை.. 72வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு லிஸ்ட்!
தேசிய விருது கிடைத்ததற்கு நன்றி சொன்ன தனுஷ்:
தனுஷ் அந்த பதிவில், “ராயன் படத்திற்காக சிறந்த பிராந்திய திரைப்பட தேசிய விருது மற்றும் கேப்டன் மில்லர் படத்திற்காக சிறந்த நடிகர் விருத்திய பெற்றதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். மதிற்பிற்குரிய திரைப்பட விருதுவழங்கும் குழுவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள். எனது தொழில் வாழ்க்கையில், எனக்கு உறுதுணையாக இருந்த, பத்திரிக்கை, ஊடகங்கள் மற்றும் அனைவருக்கும் நன்றி.
இதையும் படிங்க: மண்டாடியும் வருவான்.. சூரியின் மண்டாடி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!
இது ஒரு நடிகராக நான் பெறும் மூன்றாவது தேசிய விருதும், ஒரு இயக்குநராக நான் பெறும் முதல் தேசிய விருதும் ஆகும். எனது பலத்தின் தூண்களான என் ரசிகர்கள் இல்லாமல் இவை எதுவும் சாத்தியமாகியிருக்காது. என் இதயத்தின் ஆழத்திலிருந்து உங்களுக்கு நன்றி. மேலும் கேப்டன் மில்லர் படத்திற்கான இந்த அங்கீகாரம் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது என அதில் தனுஷ் தெரிவித்துள்ளார்.
தேசிய விருதுகள் வென்றததற்கு நன்றி தெரிவித்து தனுஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவு:
OM NAMASHIVAAYA 🙏😇❤️ pic.twitter.com/3wkQYHER25
— Dhanush (@dhanushkraja) July 18, 2026
தனுஷ் வென்ற தேசிய விருதுகள்:
2024ம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் அறிவிப்பில் தனுஷ், சிறந்த படம் என்ற அறிவிப்பில் ராயன் படத்திற்கு பெற்றுள்ளார். சிறந்த நடிகர் (ஸ்பெஷல் மென்ஸன்) கேப்டன் மில்லர் படத்திற்காக பெற்றுள்ளார். மேலும் சிறந்த திரைப்படம் என்ற விருது கேப்டன் மில்லர் படத்திற்காக கிடைத்துள்ளது. இதற்கு முன் தனுஷ் ஏற்கனவே இரு தேசிய விருதுகளை பெற்றிருந்த நிலையில், தற்போது மொத்தம் 5 தேசிய விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.