AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நோ சொன்ன ருக்மிணி வசந்த்.. தனுஷின் டி56 படத்தில் இணையும் இளம் நடிகை .. யார் தெரியுமா?

D56 Movie Heroine: நடிகர் தனுஷ் தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நாயகனாக இருந்துவருகிறார். இவர் தற்போது ஓம் படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் நிலையில், இதையடுத்து இயக்குநர் லப்பர் பந்து தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் டி56 படத்தில் இணைகிறார். இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிக்கும் இளம் நடிகை யார் என விவரமாக பார்க்கலாம்.

நோ சொன்ன ருக்மிணி வசந்த்.. தனுஷின் டி56 படத்தில் இணையும் இளம் நடிகை .. யார் தெரியுமா?
பிரீத்தி முகுந்தன் மற்றும் தனுஷ்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 18 Jul 2026 17:00 PM IST

கோலிவுட் சினிமாவில் வெறும் நடிகராக மட்டுமல்லாமல், பல்வேறு பணிகளை சிறப்பாக செய்துவருபவர்தான் நடிகர் தனுஷ் (Dhanush). இவர் தயாரிப்பாளராகவும் தொடர்ந்து தனது இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகிவரும் படங்களைத் தயாரித்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் கர (Kara). இயக்குநர் விக்னேஷ் ராஜாவின் (Vignesh Raja) இயக்கத்தில் கடந்த 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இப்படமானது வெளியாகியிருந்தது. இதில், தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை மமிதா பைஜூ நடித்திருந்தார். இப்படத்திற்கு பின் அமரன் பட இயக்குநருடன் ஓம் (Om Movie) படத்தில் இணைந்திருந்தார். இதை தனுஷின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துவரும் நிலையில், ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

தனது அடுத்தப்படத்திற்காக பணிகளில் தனுஷ் இறங்கியுள்ளார். இவர் லப்பர் பந்து பட இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துவின் (Tamizharasan Pachamuthu) இயக்கத்தில் டி56 (D56) என்ற படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தில் தனுஷ் சிறப்பான ஆக்ஷன் வேடத்தில் நடிக்கவுள்ளாராம். அந்த வகையில் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக இளம் நடிகை ஒருவர் ஒப்பந்தமாகியுள்ளாராம்.

இதையும் படிங்க: பிரியங்கா சோப்ரா பர்த்டே.. வாரணாசி பட ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட எஸ்.எஸ்.ராஜமௌலி!

டி56 படத்தில் தனுஷிற்கு ஜோடியாகும் இளம் நடிகை:

இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துவின் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள படம்தான் டி56. இந்த படத்தின் ப்ரீ புரொடக்ஷன்ஸ் பணிகள் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் நடிகர் விஜய் குமாரும் முக்கிய பணியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்காக நடிகை ருக்மிணி வசந்த் நாயகியாக ஆரம்பத்தில் பேசப்பட்டுவந்தார். அவரிடம் அதிக நாட்கள் கேட்கப்பட்டிருந்ததாம்.

இதையும் படிங்க: அந்த ஒரு பாட்டு உண்மையிலே கலங்கிவிட்டேன்.. அப்பாவுக்கு செய்த மரியாதை இதயம் முரளி படம் – அதர்வா!

தன்னால் அதிக நாட்கள் கால்ஷீட் கொடுக்கமுடியாது என்ற நிலையில், ருக்மிணி வசந்த் இப்படத்திலிருந்து விலகிவிட்டாராம். அதன் காரணமாக தற்போது இளம் நடிகை பிரீத்தி முகுந்தனை இப்படத்தில் நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறதாம்.

நடிகை பிரீத்தி முகுந்தன் டி56 படத்தில் இணைவது குறித்து வைரலாகும் பதிவு:

நடிகை பிரீத்தி முகுந்தன் இறுதியாக தமிழில் இதயம் முரளி என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார். ஆச கூட என்ற ஆல்பம் பாடலின் மூலம் பிரபலமான இவர், தற்போது தொடர்ந்து புது படங்களில் நாயகியாக நடித்துவருகிறார். இவர் தெலுங்கில் எமோ எமோ இடி, தமிழில் தஷமாக்கன் மற்றும் இந்தியில் கார்த்திக் ஆர்யனின் நாகசில்லா என்ற படத்திலும் நடித்துவருகிறார். மேலும் தற்போது தனுஷின் டி56 படத்திற்காக பேசப்பட்டுபவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us