Varanasi: பிரியங்கா சோப்ரா பர்த்டே.. வாரணாசி பட ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட எஸ்.எஸ்.ராஜமௌலி!
Priyanka Chopras 44th Birthday: உலகளவில் பிரபலமான நடிகையாக இருந்துவருபவர் பிரியங்கா சோப்ரா. இவரின் நடிப்பில் தற்போது பான் இந்திய அளவில் உருவாகியுள்ள புது படம்தான் வாரணாசி. இன்று 2026 ஜூலை 18ல் பிரியங்கா சோப்ரா தனது பிறந்தநாளை கொண்டாடிவரும் நிலையில், எஸ்.எஸ்.ராஜமௌலி வாரணாசி பட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா (Priyanka Chopra). இதற்கு பின் முழுவதுமாக பாலிவுட் மற்றும் தெலுங்கு போன்ற மொழி திரைப்படங்களில் நாயகியாக நடித்துவந்தார். இதையடுத்து ஹாலிவுட் சினிமா பக்கம் சென்ற இவருக்கு, அங்கு சிறப்பான வரவேற்பு கிடைக்கவே, தொடர்ந்து ஹாலிவுட் சினிமாவில் நாயகியாக நடித்துவருகிறார். அதிரடி ஆக்ஷன் மற்றும் காதல் படங்களில் நடித்து ஹிட் கொடுத்திருக்கிறார். கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு பிறகு இவர் இந்திய சினிமாவில் நடித்துவரும் படம்தான் வாரணாசி (Varanasi). இதை இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி (S.S. Rajamouli) இயக்க, நடிகர் மகேஷ் பாபு (Mahesh Babu) நாயகனாக நடித்துவருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2024ம் ஆண்டு இறுதியிலிருந்த தொடங்கிய நிலையில், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இன்று (17/07/20276) நடிகை பிரியங்கா சோப்ரா, தனது 44வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிவருகிடுறார். இந்நிலையில் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி, பிரியங்கா சோப்ரா நடித்துவரும் மந்தாகினியின் கதாபாத்திரம் தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க: சிக்மா படத்திற்கு பின் அடுத்த பிளான் இதுதான் – ஜேசன் சஞ்சய் பேச்சு!
பிரியங்கா சோப்ராவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக எஸ்.எஸ்.ராஜமௌலி பகிர்ந்த புகைப்படங்கள்:
Grace when she smiles.
Fire when she doesn’t.Mandakini… @PriyankaChopra in #Varanasi pic.twitter.com/4lYerYbm4Q
— rajamouli ss (@ssrajamouli) July 18, 2026
வாரணாசி படத்தில் பிரியங்கா சோப்ரா:
கோலிவுட் சினிமாவில் கடந்த 2002ம் ஆண்டில் வெளியான தமிழன் என்ற படத்தின் மூலம் நடிகையானவர் பிரியங்கா சோப்ரா. இப்படத்துகில் முதல்வர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தியிலும் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து, இந்தி, மராத்தி மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் படங்களை நடித்து ஹிட் கொடுத்திருந்தார். இவர் 2020ம் ஆண்டுக்கு பிறகு இந்திய மொழியில் எந்த படங்களும் நடிக்கவில்லை. முழுவதும் ஹாலிவுட் படங்களில் நடித்துவந்தார்.
இதையும் படிங்க: தனுஷ் 56 படத்தின் டைட்டில் இதுவா? இணையத்தில் வைரலாகும் தகவல்!
வாரணாசி படத்தின் ரிலீஸ் எப்போது:
பிரியங்கா சோப்ரா நடிப்பில் இந்திய மொழியில் உருவாகிவரும் படம்தான் வாரணாசி. இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமான மற்றும் அறிவியல் புனைகதைகள் போன்ற படமாக உருவாகிவருகிறது. இப்படத்தில் பிரியங்கா சோப்ரா நடித்திருக்கும் மந்தாகினி கதாபாத்திரம் அதிரடி ஆக்ஷன், நெகடிவ் போன்ற கதாபாத்திரமாக இருக்கும் என கூறப்படுகிறது. ஆறு மாநாடுகளுக்கு பின் இந்திய சினிமாவில் அவர் என்ட்ரி கொடுத்திருக்கும் நிலையில், அவரை இப்படத்தின் மீது ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், வரும் 2027ம் ஆண்டு மார்ச் 27ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது