AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தனுஷ் 56 படத்தின் டைட்டில் இதுவா? இணையத்தில் வைரலாகும் தகவல்!

Dhanush 56 Movie Title Name Viral On Social Media | தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள 56-வது படத்தின் தலைப்பு குறித்து தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தனுஷ் 56 படத்தின் டைட்டில் இதுவா? இணையத்தில் வைரலாகும் தகவல்!
தனுஷ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 18 Jul 2026 10:22 AM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் தமிழ் சினிமா மட்டும் இன்றி தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தொடர்ந்து படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் நடிகர் தனுஷ் நடிப்பில் தமிழ் சினிமாவில் இறுதியாக வெளியான படம் கர. ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவான இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் ஒரு திருடனாக நடித்து இருப்பார். திருட்டு தொழிலை விட்டு வாழ்ந்த தனுஷ் இறுதியில் தனது தந்தைக்காக மீண்டும் திருட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார். இறுதியில் ஒட்டுமொத்த ஊரும் கொண்டாடும் நபராக தனுஷ் எப்படி மாறுகிறார் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்றது போல ஓடிடியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது நடிகர் தனுஷ் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் ஓம் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி வரும் நிலையில் அடுத்தடுத்தப் படங்கள் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் வெற்றி மாறன் உடன் தமிழ் முருகன் என்ற படத்திற்காக கூட்டணி வைத்துள்ளார். அதற்கு முன்னதாக இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

தனுஷ் 56 படத்தின் டைட்டில் இதுவா?

இப்படத்திற்கு ‘நரம்பன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் தனுஷ் ஒரு பூசாரி (கோயில் பூசாரி) கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் தலைப்பே மற்றொரு முக்கிய விவாதப் பொருளாக அமைந்துள்ளது. தனது திரைப்பயணத்தின் தொடக்கத்திலிருந்தே, தனுஷ் தனது மெலிந்த உடல்வாகு காரணமாகப் பலமுறை கேலிக்குள்ளாக்கப்பட்டு வந்துள்ளார். நீண்ட காலமாக முன்வைக்கப்படும் அத்தகைய விமர்சனங்களுக்கு, ‘நரம்பன்’ என்ற தலைப்பு ஒரு பொருத்தமான மற்றும் உறுதியான பதிலாக அமையும் என்று தனுஷ் கருதுகிறார் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வைரலாகி வருகின்றது.

Also Read… Sivakarthikeyan: ஹீரோயினுக்கு 4 மணிநேரம் இன்டெர்வியூ வெச்சாரு நெல்சன் – சிவகார்த்திகேயன் பகிர்ந்த கலகலப்பு சம்பவம்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… முதலமைச்சர் விஜய் உடன் கலந்தாலோசித்து முடிவு செய்தோம் – ஜன நாயகன் ரிலீஸ் குறித்து தயாரிப்பாளர் விளக்கம்!

Follow Us