AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

முதலமைச்சர் விஜய் உடன் கலந்தாலோசித்து முடிவு செய்தோம் – ஜன நாயகன் ரிலீஸ் குறித்து தயாரிப்பாளர் விளக்கம்!

Jana Nayagan movie Producer Venkat Narayanan | தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்து இருந்த ஜன நாயகன் படம் இன்னும் சில நாட்களில் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படம் குறித்து தயாரிப்பாளர் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

முதலமைச்சர் விஜய் உடன் கலந்தாலோசித்து முடிவு செய்தோம் – ஜன நாயகன் ரிலீஸ் குறித்து தயாரிப்பாளர் விளக்கம்!
ஜன நாயகன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 17 Jul 2026 09:30 AM IST

தமிழ் சினிமா மட்டும் இன்றி பான் இந்திய அளவில் தளபதி விஜயின் ரசிகர்கள் இந்த 2026-ம் ஆண்டு அதிகம் எதிர்பர்த்து காத்து இருந்த படம் ஜன நாயகன். தளபதி விஜயின் நடிப்பில் 69-வது படமாக உருவாகி உள்ள இந்தப் படம் தான் அவரது நடிப்பில் இறுதிப் படம் என்று படத்தின் அறிவிப்பு வெளியான போதே அறிவிக்கப்பட்டது அவரது ரசிகர்களிடையே மிகப் பெரிய சோகத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஜன நாயகன் படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னதாகவே படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரடெக்‌ஷன்ஸ் தளபதி விஜய்க்கு ஃபேர்ஃபல் கொடுக்கும் விதமாக அவரது படங்களை வைத்து ட்ரிபியூட் வீடியோ வெளியிட்டது. அந்த வீடியோவைப் பார்த்த தளபதி ரசிகர்கள் கண்ணீர்விட்ட காட்சிகளும் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

ஒரு பக்கம் இனி தளபதி விஜய் படங்களில் நடிக்க போவதில்லை என்ற செய்தி அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருந்தாலும் மற்றொரு பக்கம் ஜன நாயகன் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உடன் காத்து இருந்தனர். இந்த நிலையில் ஜன நாயகன் படம் பல தடைகளைத் தாண்டி வருகின்ற 23-ம் தேதி ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணன் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

முதலமைச்சர் விஜய் உடன் கலந்தாலோசித்து முடிவு செய்தோம்:

தயாரிப்பாளர் வெங்கட் நாராயணன் பேசியதாவது, திரைப்படம் என்பது ஒரு கூட்டு அனுபவம் என்பதால், ஜன நாயகன் வெளியாகும் போது ரசிகர்கள் நிச்சயம் இதை ஏற்றுக்கொண்டு கொண்டாடுவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். சொல்லப்போனால், இது விஜய் அவர்களின் கடைசிப் படம் என்பதால், திரையரங்குகளில் ரசிகர்கள் தங்களுக்குள் நீடித்த நினைவுகளையும் அனுபவங்களையும் உருவாக்கிக்கொள்வார்கள்.

வெளியீட்டுத் தேதி மற்றும் அது தொடர்பான திட்டங்கள் குறித்து நான் முதலமைச்சர் விஜய் அவர்களுடன் கலந்துரையாடியுள்ளேன். அவரும் ஒட்டுமொத்தக் குழுவினரும் இந்தப் படத்திற்காக மிகுந்த உழைப்பையும் உணர்வையும் அர்ப்பணித்துள்ளனர். அவர்கள் மேற்கொண்ட அந்த உழைப்பை மக்கள் நிச்சயம் காண்பார்கள் என்று தயாரிப்பாளர் வெங்கட் நாராயணன் தெரிவித்துள்ளார்.

Also Read… முதலமைச்சர் விஜயின் வீடியோவை முதல்வன் பட காட்சியுடன் ஒப்பிட்ட ரசிகர்கள்… வைரலாகும் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… என் நண்பன் ஒரு பைத்தியம்… தயன் ஸ்ரீனிவாசன் பேச்சிற்காக முதலமைச்சர் விஜயிடம் மன்னிப்பு கோரிய அஜு வர்கீஸ்

Follow Us