தியேட்டரில் 50 நாட்களைக் கடந்தது பிளாஸ்ட் படம் – மகிழ்ச்சியில் படக்குழு!
Blast movie completes 50-day run in theaters | தமிழ் சினிமாவில் கடந்த மே மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி தற்போது வரை ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வரும் படம் பிளாஸ்ட். இந்தப் படம் திரையரங்குகளில் 50 நாட்களைக் கடந்துள்ளது படக்குழு கொண்டாடி வருகின்றது.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல இளம் இயக்குநர்கள் அறிமுகம் ஆகி தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகின்றனர். அந்த வரிசையில் இயக்குநர் சுபாஷ் கே ராஜ் எழுதி இயக்கி தமிழ் சினிமாவில் கடந்த மே மாதம் 28-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் படம் பிளாஸ்ட். இந்த பிளாஸ்ட் படத்தின் மூலமாக இயக்குநர் சுபாஷ் கே ராஜ் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிளாஸ்ட் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து உள்ளது. பல இளம் தலைமுறையினருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை கொடுத்து வரும் இந்த ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தமிழ் சினிமாவில் பல சிறந்த கலைஞர்களை கொடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இந்த ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக தயாரிக்கப்படும் பலப் படங்கள் ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகினறது. இந்த நிலையில் இறுதியாக இந்த ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக தயாரிக்கப்பட்ட படம் தான் இந்த பிளாஸ்ட் படம். படம் திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.




தியேட்டரில் 50 நாட்களைக் கடந்தது பிளாஸ்ட் படம்:
நடிகர்கள் ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரீத்தி முகுந்தன் மற்றும் அபிராமி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ள இந்த பிளாஸ்ட் படம் ஓடிடியில் வெளியான பிறகும் திரையரங்குகளில் தொடர்ந்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் இந்த பிளாஸ்ட் படம் தற்போது திரையரங்குகளில் 50 நாட்களைக் கடந்துள்ளதாக படக்குழு தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் போஸ்டர் வெளியிட்டு மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர். அந்தப் பதிவு இணையத்தில் வரைலாகி வருகின்றது.\
Also Read… திரையரங்குகளில் வெற்றிநடை போடும் இதயம் முரளி படம் – கொண்டாட்டத்தில் படக்குழு
பிளாஸ்ட் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Blastbuster 50 Days 🔥
Thank you for showering us with so much love ❤️#MegaBlockbusterBlast#KalpathiSAghoram #KalpathiSGanesh #KalpathiSSuresh @archanakalpathi @aishkalpathi @venkat_manickam @sivakumarpks @Ags_production@akarjunofficial @PreityMukundan @abhiramiact… pic.twitter.com/Rch8gvN4Me
— AGS Entertainment (@Ags_production) July 16, 2026
Also Read… Fauzi: பிரபாஸின் ஃபௌஸி படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா? அட இந்த தேதியிலா?