AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அதர்வா நடித்த அந்தப் படத்தில் நான் தான் முதலில் நடிக்க வேண்டியது – நடிகர் அருள் நிதி ஓபன் டாக்

Arulnithi recent interview viral on social media | தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் அருள் நிதி. இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் அருள்வான். இந்தப் படத்தின் புரமோஷன் பணிகளில் பிசியாக உள்ள அவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அதர்வா நடித்த அந்தப் படத்தில் நான் தான் முதலில் நடிக்க வேண்டியது – நடிகர் அருள் நிதி ஓபன் டாக்
அருள்நிதிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 15 Jul 2026 19:08 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் அருள்நிதி. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. தொடர்ந்து பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் அருள்நிதி நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் அருள்வான். இந்தப் படத்தினை இயக்குநர் கணேஷ் விநாயகன் எழுதி இயக்கி உள்ளார். மலைக்கிராம மக்களின் வாழ்க்கையையும், பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த குழந்தைகளின் கல்வி உரிமையையும் மையமாகக் கொண்டு உருவாகி உள்ளது இந்தப் படம். இந்தப் படத்தில் அருள் நிதி உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படம் வருகின்ற 17-ம் தேதி ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. அந்த வகையில் நடிகர் அருள்நிதி அளித்து வரும் பேட்டிகள் தொடர்ந்து ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அந்த வகையில் அருள்நிதி நடிக்காமல் விட்ட படம் குறித்து அவர் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அதர்வா நடித்த அந்தப் படத்தில் நான் தான் முதலில் நடிக்க வேண்டியது:

அதர்வா நடித்த ‘ஈட்டி’ திரைப்படம் உண்மையில் முதலில் எனக்குத்தான் வழங்கப்பட்டது. அந்தப் படத்திற்காக அதர்வா மிகக் கடுமையாக உழைத்தார். அந்த கதாபாத்திரத்திற்காக சிக்ஸ்-பேக் (six-pack) உடலமைப்பைக் கூட அவர் உருவாக்கிக்கொண்டார். உண்மையைச் சொல்லப்போனால், அவரால் முடிந்தது போல என்னால் ‘சிக்ஸ்-பேக்’ உடலமைப்பைப் பெற்றிருக்க முடியுமா என்று தெரியவில்லை. நாங்கள் இருவரும் ஒரே உடற்பயிற்சிப் பயிற்சியாளரிடம்தான் பயிற்சி பெற்றோம். ஆனாலும், தனது உடலமைப்பை மாற்றியமைக்க அவர் மேற்கொண்ட முயற்சி மிகவும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும், ஈட்டி நான் நடித்திருக்க வேண்டிய ஒரு படம் என்று நான் கருதுகிறேன் என்று அருள்நிதி தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… உங்களுக்கு நல்ல ஸ்கிரிப்ட் சென்ஸ் இருக்கு… நல்ல படங்கள குடுங்க – விஷ்ணு விஷாலை புகழ்ந்து பேசிய நடிகர் ரஜினிகாந்த்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Mandaadi: சூரியின் மண்டாடி படத்தின் புரோமோ பாடல் ரிலீஸ் எப்போது தெரியுமா?

Follow Us