AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரிலீஸ் தேதியுடன் வெளியாகும் ஜன நாயகன் படத்தின் நியூ ட்ரெய்லர் – வைரலாகும் தகவல்

Jana Nayagan movie new trailer release update | தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் உள்ள படம் ஜன நாயகன். இந்தப் படத்தின் புது ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

ரிலீஸ் தேதியுடன் வெளியாகும் ஜன நாயகன் படத்தின் நியூ ட்ரெய்லர் – வைரலாகும் தகவல்
ஜன நாயகன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 14 Jul 2026 11:10 AM IST

தமிழ் சினிமாவில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் ஜன நாயகன். தற்போது தமிழக முதலமைச்சராக உள்ள தளபதி விஜய் தான் அரசியலில் தீவிரமாக ஈடுபட உள்ளதாக தெரிவித்து இனி படங்களில் நடிக்க மாட்டேன் இதுதான் கடைசிப் படம் என்று தெரிவித்த படம் தான் ஜன நாயகன். ஒரு பக்கம் அவர் இனி படங்களில் நடிக்கப் போவதில்லை என்று கூறியது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தாலும் அவரது இறுதிப் படமான ஜன நாயகன் படம் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த ஜன நாயக படம் தளபதி விஜய் நடிப்பில் உருவான 69-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தினை இயக்குநர் எச்.வினோத் எழுதி இயக்கி உள்ளார்.

இந்த ஜன நாயகன் படத்தில் நடிகர் தளபதி விஜய் உடன் இணைந்து ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் கடந்த ஜனவரி மாதமே வெளியாக வேண்டிய நிலையில் படத்தின் ட்ரெய்லர் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு தொடர்ந்து 6 மாத போராட்டத்திற்கு பிறது தற்போது ஜன நாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைத்துள்ளது. அதன்படி இந்த ஜன நாயகன் படத்திற்கு தற்போது ஏ சான்றிதழை தணிக்கை குழு வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

ரிலீஸ் தேதியுடன் வெளியாகும் ஜன நாயகன் படத்தின் நியூ ட்ரெய்லர்:

ஜன நாயகன் படத்தின் புதிய டிரெய்லர் மற்றும் வெளியீட்டுத் தேதி விரைவில் வெளியாகவுள்ளது. மேலும் இப்படம் ஜூலை 24-ஆம் தேதி திரைக்கு வர வாய்ப்பு உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வைரலாகி வருகின்றது. முழுப் படமும் இணையத்தில் கசிந்திருந்தாலும் மற்றும் வெளியீட்டில் 7 மாதங்கள் தாமதம் ஏற்பட்டிருந்தாலும், தளபதி விஜய்யின் நட்சத்திர அந்தஸ்து இப்படத்திற்குப் பிரம்மாண்டமான தொடக்கத்தை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தளபதியின் இந்தப் படத்தில் அதிரடி, நகைச்சுவை, உணர்வுபூர்வமான காட்சிகள், அறிவியல் புனைகதை (Sci-fi) மற்றும் அரசியல் என அனைத்தையும் இயக்குநர் ஹெச். வினோத் சிறப்பாக ஒருங்கிணைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Also Read… சந்தானத்தின் லவ் பைட் படத்தின் தற்போதைய நிலை என்ன? வைரலாகும் தகவல்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… அரசன் பட ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரபல நடிகர்… வைரலாகும் வீடியோ!

Follow Us