அரசன் பட ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரபல நடிகர்… வைரலாகும் வீடியோ!
Actor Yogi Babu at the shooting spot of the movie Arasan | தமிழ் சினிமாவில் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெறும் அரசன் படத்தில் பல முக்கிய நடிகர்கள் நடித்து வரும் நிலையில் புதிதாக ஒரு நடிகரும் இணைந்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் படம் அரசன். இயக்குநர் வெற்றி மாறன் எழுதி இயக்கி உள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பூஜையுடன் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி உள்ள இந்த படத்தில் நடிகர் சிலம்பரசன் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். மேலும் இந்தப் படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் முன்னதாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற வட சென்னை என்ற படத்தின் கிளையாக உள்ளது என்று சினிமா வட்டாரங்களில் வைரலாகி வருகின்றது.
அதன்படி இந்தப் படத்தில் வட சென்னை படத்தில் நடித்த நடிகர்கள் பலர் இணைந்துள்ளனர். மேலும் வட சென்னை படத்தின் நாயகன் தனுஷ் நடிப்பாரா இல்லையா என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவு வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படம் இந்த 2026-ம் ஆண்டின் இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அரசன் பட ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரபல நடிகர் யோகி பாபு:
தொடர்ந்து இந்த அரசன் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. மேலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோவும் அவ்வபோது வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் தற்போது அரசன் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் யோகி பாபு இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்தப் படம் பிரபலங்களின் பட்டாளம் நிறைந்த படமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் தற்போது காத்திருக்கின்றனர்.
Also Read… அதர்வாவின் இதயம் முரளி படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றதா? மக்களின் விமர்சனம் இதோ
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Thalaivan @SilambarasanTR_ in Black dress🤩
Yogi babu from the set of #Arasan🗡️
Marana waiting 🥶#Arasan👑 pic.twitter.com/UCOnoxKLgU— ARASAN 👑 (@Sharan_atman) July 10, 2026
Also Read… ப்ரீ ரிலீஸ் வசூலில் கெத்து காட்டும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் – வைரலாகும் தகவல்



