AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தனுஷ் ரசிகர் மன்ற கொடி விவகாரம் – விளக்கம் அளித்த சுப்ரமணிய சிவா

Dhanush fans club flag issue | தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி ஹாலிவுட் வரை தொடர்ந்து படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

தனுஷ் ரசிகர் மன்ற கொடி விவகாரம் – விளக்கம் அளித்த சுப்ரமணிய சிவா
தனுஷ் ரசிகர் மன்ற கொடி Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 09 Jul 2026 10:58 AM IST

தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய அளவில் சினிமாவில் உள்ள பிரபலங்கள் தொடர்ந்து அரசியல் ஆர்வம் காரணமாக அரசியலில் களம் இறங்குவது காலம் காலமாக நடைப்பெற்று வருகின்றது. இப்படி இருக்கும் நிலையில் தான் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்து தற்போது தமிழ் நாட்டின் முதலமைச்சராக மாறியுள்ளார் தளபதி விஜய். அதன்படி தளபதி விஜய் அவர்கள் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் பெரும் உச்ச நாயகனாக வலம் வந்த நிலையில் தனது மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசியலில் ஒரு கட்சியை தொடங்கி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார். போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே அதிக இடங்களில் வெற்றிப் பெற்று தமிழ் நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்றார். இந்த நிகழ்வு ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் நடிகர் தனுஷ் தமிழக அரசியலில் களம் இறங்க உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல்கள் வெளியானது. இந்த செய்தி தமிழ் சினிமா வட்டாரங்களில் மட்டும் இன்றி மக்களிடையேயும் அதிக அளவில் கவனத்தை ஈர்த்தது. மேலும் அவரது கட்சி கொடி என்று ஒரு கொடியும் இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.

அரசியல் கட்சி தொடங்குகிறாரா தனுஷ்?

இந்த நிலையில் சமீபத்தில் யோகி பாபு நடிப்பில் உருவாகி உள்ள அர்ஜுனன் பேர் பத்து என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய இயக்குநரும் நடிகருமான சுப்ரமணிய சிவா தனுஷ் அரசியல் கட்சி தொடங்குவதாக வெளியான செய்தி குறித்து வெளிப்படையாக பேசினார். அதில் அவர் கூறியதாவது, இந்த தனுஷின் ரசிகர் மன்ற கொடி எங்களிடம் 15 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது.

Also Read… Kayadu Lohar: நான் எப்போது STR சாருடன் படத்தில் நடிக்க ஒப்பந்தமானாலும்.. கவலையாக பேசிய கயாடு லோஹர்!

ஒவ்வொரு வருடமும் தனுஷ் ரசிகர்கள் மன்ற மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும். அப்படி சமீபத்தில் நடைப்பெற்ற கூட்டத்தில் சில ரசிகர்கள் கொடியை காரில் வைப்பது போன்று தயார் செய்து எடுத்து வந்தார்கள். அந்த கொடியை நாங்க மாட்டியது இணையத்தில் புதிய கொடி அறிமுகம், கட்சி ஆரம்பிக்கிறார் என்று செய்தி வெளியாகிவிட்டது என்று சுப்ரமணிய சிவா விளக்கம் அளித்துள்ளார்.

Also Read… விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் கதை இதுதான் – தயாரிப்பாளர் ஓபன் டாக்

Follow Us