AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஜன நாயகன் படத்தின் சென்சார் அப்டேட் என்ன? வைரலாகும் தகவல்

Jana Nayagan team has submitted the cuts suggested by the CBFC | தமிழ் சினிமாவில் தற்போது அதிக பரபரப்பை ஏற்படுத்தி வரும் ஜன நாயகன் படத்தின் சென்சார் தொடர்பான தகவல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

ஜன நாயகன் படத்தின் சென்சார் அப்டேட் என்ன? வைரலாகும் தகவல்
ஜன நாயகன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 08 Jul 2026 13:44 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நடிகர் தளபதி விஜய் நடிப்பில் இறுதியாக உருவான படம் ஜன நாயகன். இவர் தற்போது தமிழ் நாட்டின் முதலமைச்சராக உள்ள நிலையில் முன்பு அரசியலில் தீவிர ஈடுபட உள்ள நிலையில் படங்களில் நடிப்பதில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு கடந்த 2025-ம் ஆண்டே வெளியான நிலையில் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் ஆழ்ந்தனர். ஆனால் அவரது நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படமாக ஜன நாயகன் உள்ளது என்பது ரசிகர்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் விசயமாக இருந்தது. இயக்குநர் எச்.வினோத் எழுதி இயக்கிய இந்தப் படத்தின் பணிகள் கடந்த ஆண்டே முடிவடைந்தது. மேலும் ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டது.

ஆனால் சென்சார் சான்றிதழ் உரிய நேரத்தில் கிடைக்காத காரணத்தால் படத்தின் வெளியீடு ரத்து செய்யப்பட்டது. சுமார் 6 மாதங்கள் முடிவடைந்த நிலையில் தற்போது ஜன நாயகன் படத்தின் சென்சார் தொடர்பான பிரச்சனைகள் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. மேலும் படம் இந்த ஜூலை மாதம் 2026-ம் ஆண்டில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் சென்சார் குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாகி இனையத்தில் வைரலாகி வருகின்றது.

ஜன நாயகன் படத்தின் சென்சார் அப்டேட் என்ன?

ஜன நாயகன் படக்குழு, மத்திய நிதி ஆணையம் (CBFC) பரிந்துரைத்த காட்சிகளைத் திருத்தி சமர்ப்பித்துள்ளது, மேலும் தணிக்கைப் பணிகளும் தற்போது நிறைவடைந்துள்ளன. தணிக்கைச் சான்றிதழ் வெள்ளிக்கிழமை அன்றோ அல்லது அதற்கு முன்னரோ வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சான்றிதழ் கிடைத்தவுடன், படக்குழுவினர் படத்தின் வெளியீட்டுத் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு பெரிய புதிய தகவல் விரைவில் வருகிறது என்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Also Read… சிவகார்த்திகேயனின் மாவீரன் 2 படம் உருவாகிறதா? வைரலாகும் தகவல்

இணையத்தில் வைரலகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Samantha: ரூ 100 கோடி வசூலை நெருங்கும் சமந்தாவின் மா இன்டி பங்காரம்.. படக்குழு வெளியிட்ட வசூல் விவரம்!

Follow Us