AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Samantha: ரூ 100 கோடி வசூலை நெருங்கும் சமந்தாவின் மா இன்டி பங்காரம்.. படக்குழு வெளியிட்ட வசூல் விவரம்!

Engal Thangam Box Office: சவுத் இந்திய குயின் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டுவருபவர் நடிகை சமந்தா ரூத் பிரபு. இவர் நடிப்பில் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான மாஸ் படம்தான் மா இன்டி பங்காரம் (எங்கள் தங்கம்). இப்படமானது வெளியாகி 3வது வாரத்தை கடந்திருக்கும் நிலையில், இதன் வசூல் குறித்து படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Samantha: ரூ 100 கோடி வசூலை நெருங்கும் சமந்தாவின் மா இன்டி பங்காரம்.. படக்குழு வெளியிட்ட வசூல் விவரம்!
மா இன்டி பங்காரம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 07 Jul 2026 17:02 PM IST

நடிகை சமந்தாவின் (Samantha) மாஸ் கம்பேக் படமாக வெளியாகி, இன்றுவரையிலும் திரையரங்குகளில் வெளியாகி மாஸ் காட்டிவரும் படம்தான் மா இன்டி பங்காரம் (Maa Inti Bangaaram). இப்படத்திற்கு முன் சமந்தாவின் நடிப்பில், 2023 ஆண்டில் குஷி என்ற படமானது வெளியானது. இந்த் படத்தின் வரவேற்பிற்கு பின் கிட்டத்தட்ட 3 ஆண்டுக்கு பின் சமந்தாவின் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான படம்தான் மா இன்டி பங்காரம். இப்படமானது தமிழில் எங்கள் தங்கம் (Engal Thangam) என்ற டைட்டிலில் வெளியாகியிருந்தது. இதில் நடிகை சமந்தா அதிரடி ஆக்ஷன் நாயகியாக நடிக்க, அவருடன் நடிகை கௌதமி உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்திருந்தனர். இப்படமானது 2026ம் ஆண்டு ஜூன் 19ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது.

இப்படத்திற்கு தமிழ் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் (Santhosh Narayanan) இசையமைக்க, படத்தின் பாடல்கள் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படமானது வெளியாகி கிட்டத்தட்ட 3 வாரங்களை கடந்த நிலையில், இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: மஞ்சணத்தி படத்திற்காக மிகவும் உற்சாகமாக இருக்கிறேன் – கயாடு லோஹர்!

மா இன்டி பங்காரம் படத்தின் வசூல் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:

சமந்தாவின் மா இன்டி பங்காரம் படமானது வெளியாகி 3 வாரத்தை கடந்திருக்கும் நிலையில், இதுவரை திரையரங்குகளில் கிட்டத்தட்ட ரூ 96.5 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளதாம். விரைவில் இப்படத்தின் வசூல் ரூ 100 கோடையை தொடும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது. தற்போது வெளியான இந்த அறிவிப்பு ரசிகர்களின் மத்தியில் வைரலாகிவருகிறது.

சமந்தாவின் மா இன்டி பங்காரம் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது:

மா இன்டி பங்காரம் படத்தை இயக்குனர் நந்தினி ரெட்டி இயக்க, சமந்தாவின் ட்ராலலா மூவிங் பிக்ச்சர்ஸ் என்ற நிறுவனமானது தயாரித்திருந்தது. இதில் காந்தாரா படத்தின் நடித்திருந்த நடிகர் குல்ஷன் தேவ்வையா முக்கிய வில்லனாக இதில் நடித்திருந்தார்.

இதையும் படிங்க: உங்கள் அனைவரிடமும் மண்டியிட்டு மன்னிப்பு கோருகிறேன் – எமோஷ்னலாக பேசிய ரவி மோகன்

இப்படம் தற்போதுவரையிலும் திரையரங்குகளில் சிறப்பான வரவேற்பை பெற்றுவரும் நிலையில், ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளதாம். அதன்படி வரும் 2026ம் ஆண்டு ஜூலை இறுதியில் அல்லது, ஆகஸ்ட் தொடக்கத்தில் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us