AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

உங்கள் அனைவரிடமும் மண்டியிட்டு மன்னிப்பு கோருகிறேன் – எமோஷ்னலாக பேசிய ரவி மோகன்

Ravi Mohan emotional speech viral on social media | தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் ரவி மோகன். இவர் சமீபத்தில் விழா ஒன்றில் கலந்துகொண்ட போது மிகவும் எமோஷ்னலாக பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

உங்கள் அனைவரிடமும் மண்டியிட்டு மன்னிப்பு கோருகிறேன் – எமோஷ்னலாக பேசிய ரவி மோகன்
ரவி மோகன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 07 Jul 2026 16:11 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் நடிகர் ரவி மோகன். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்து வந்த நடிகர் ரவி மோகனின் படங்கள் தொடர்பான செய்திகள் வெளியாகி கவனத்தை ஈர்த்து வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அவரது சொந்த வாழ்க்கை தொடர்பான செய்திகள் இணையத்தில் வைரலாகி வந்தது குறிப்பிடத்தக்கது. அதன்படி தனது மனைவி ஆர்த்தி ரவியை விவாகரத்து செய்வதாக நடிகர் ரவி மோகன் அறிவித்த பிறகு கணவன் மற்றும் மனைவி இருவரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை அடுக்கி வைத்துக்கொண்டே இருந்தனர்.

ஒருகட்டத்தில் சமூக வலைதளத்தில் வழக்கு குறித்து பேசக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு அவர்கள் பேசுவது குறைந்தது. அதனைத் தொடர்ந்து ரவி மோகன் தோழி மற்றும் அவர் குறித்த செய்திகளும் இணையத்தில் வைரலாகி வந்தது. அதன்படி கடந்த இரண்டு ஆண்டுகளாக படங்களின் அப்டேட்களைவிட அந்த செய்திகள் தான் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் சமீபத்தில் விழா ஒன்றில் ரவி மோகன் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

உங்கள் அனைவரிடமும் மண்டியிட்டு மன்னிப்பு கோருகிறேன்:

என் வாழ்க்கையின் பாதியை நான் சினிமாவில் கழித்துள்ளேன். எனது தனிப்பட்ட முடிவால் அனைவருக்கும் மனவருத்தம் ஏற்படுத்தியதே என் ஒரே வருத்தம். உங்கள் அனைவர் முன்னாலும் மண்டியிட்டு மன்னிப்பு கோருகிறேன்; இனி ஒருபோதும் நான் துரோகம் இழைக்கமாட்டேன். உங்கள் சந்தோஷ், குமரன், துருவன், தனி ஒருவன், பொன்னியின் செல்வன் மற்றும் கராத்தே பாபுவாக இன்னும் வலிமையுடன் நான் மீண்டும் வருவேன். இப்போது மகிழ்ச்சியுடன் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறேன் என்று நடிகர் ரவி மோகன் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… Naga Vamsi: காட் ஆப் வார் படம் குறித்து எதுவும் தெரியாது – தயாரிப்பாளர் நாக வம்சி ஓபன் டாக்!

இணையத்தில் வைரலாகும் ரவி மோகன் பேச்சு:

Also Read… சூர்யா 47 படம் எப்படி இருக்கும்? இணையத்தில் வைரலாகும் தகவல்

Follow Us