விசில் சத்தம் வலுவாக ஒலிக்கட்டும் – தல தோனிக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து
MS Dhoni : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது பதிவில், உங்களுக்கான அந்த விசில் சத்தங்கள் மேலும் மேலும் வலுவாக ஒலிக்கட்டும் என குறிப்பிட்டுள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை ஜூலை 7: இந்தியாவின் அனைத்து ஃபார்மட்களிலும் சிறந்த கேப்டன் என பெயர் பெற்றவர் மகேந்திர சிங் தோனி. குறிப்பாக அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தலைமை ஏற்ற பிறகு அவர் தமிழ் மக்களுடன் மிகுந்த நெருக்கமானார். அவரை ரசிகர்கள் தல என அழைக்கின்றனர். குறிப்பாக முக்கிய கட்டங்களில் அவர் எடுக்கும் முடிவுகளும் மிகுந்த பதட்டமான சூழ்நிலைகளில் அவர் நிதானத்துடன் செயல்பட்டு அணிக்கு வெற்றி தேடித் தருவதன் காரணமாக அவர் கேப்டன் கூல் என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தல தோனிக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து
இது குறித்து முதல்வர் விஜய் வெளியிட்ட எக்ஸ் பதிவில், உங்கள் பெயரை முழக்கமிடும் ஒவ்வொரு ஆரவாரமான விசில் சத்தம் முதல், நீங்கள் ஊக்கமளித்த எண்ணற்ற இதயங்கள் வரை உங்கள் பயணம் தமிழ்நாட்டின் விளையாட்டு உணர்வில் ஒரு பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டது!




இதையும் படிக்க : MS Dhoni Birthday: காலடி வைத்த இடமெல்லாம் புகழ்.. எம்.எஸ்.தோனியின் முறியடிக்க முடியாத சாதனை!
நமது ‘கேப்டன் கூல்’ மகேந்திர சிங் தோனிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! உங்களின் சிறப்பான கிரிக்கெட் சாதனைகள், நிதானமான தலைமைத்துவம் மற்றும் எளிமையான குணம் ஆகியவை தலைமுறைகளைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகின்றன. உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் இன்னும் பல ஆண்டுகள் வெற்றி கிடைக்க வாழ்த்துகிறோம். உங்களுக்கான அந்த விசில் சத்தங்கள் மேலும் மேலும் வலுவாக ஒலிக்கட்டும் என குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் விஜய்யின் பதிவு
From every resounding whistle that echoes your name to the countless hearts you’ve inspired, your journey has become a cherished part of Tamil Nadu’s sporting emotion!
Happy Birthday to our ‘Captain Cool’ Mahendra Singh Dhoni! Your extraordinary cricketing legacy, calm… pic.twitter.com/lFdQsQn3ee
— CMOTamilNadu (@CMOTamilnadu) July 7, 2026
கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் துவங்கப்பட்டபோது சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு அப்போதைய நடிகர் விஜய் தொடர்ந்து 2 ஆண்டுகள் விளம்பர தூதராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பீஸ்ட் படப்பிடிப்பின் போது விளம்பரப்படத்த்தின் படப்பிடிப்புக்காக சென்னை வந்த தோனி, பீஸ்ட் பட செட்டில் நடிகர் விஜய்யை சந்தித்தார். தோனியின் மேனேஜரிடம் விஜய்யின் ‘பீஸ்ட்’ பட ஷூட்டிங் இங்கேதான் நடக்கிறது என்கிற தகவலை ‘பீஸ்ட்’ படக்குழுவில் இருந்தவர் தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிக்க : IND vs ZIM: கேப்டனாக தொடரும் ஷ்ரேயாஸ்.. சாம்சன் நீக்கம்.. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இந்திய டி20 அணி அறிவிப்பு!
விஜய்க்கும் தோனியின் ஷூட்டிங் குறித்து சொல்லப்பட்டிருக்கிறது. அப்போது விஜய், தோனியை மீட் பண்ணமுடியுமா என கேட்டிருக்கிறார். இதுகுறித்து கேள்விப்பட்ட தோனி உடனடியாக பீஸ்ட் பட ஷூட்டிங் ஸ்பாட் சென்று கேரவனில் விஜய்யை சந்தித்திருக்கிறார். கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு பிறகு தோனியும் விஜய்யும் நசந்தித்து கொண்டனர். அப்போது இயக்குநர் நெல்சனும் உடன் இருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதலங்களில் வைரலானது.