AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND vs ZIM: கேப்டனாக தொடரும் ஷ்ரேயாஸ்.. சாம்சன் நீக்கம்.. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இந்திய டி20 அணி அறிவிப்பு!

IND vs ZIM T20 Series: சஞ்சு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இந்த முடிவைக் கேள்விக்குள்ளாக்கினர். டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றிய சஞ்சு, தொடர் நாயகன் விருதையும் வென்றார். ஆனால், தற்போது அவர் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

IND vs ZIM: கேப்டனாக தொடரும் ஷ்ரேயாஸ்.. சாம்சன் நீக்கம்.. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இந்திய டி20 அணி அறிவிப்பு!
சஞ்சு சாம்சன் - ஷ்ரேயாஸ் ஐயர்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 06 Jul 2026 20:20 PM IST

இந்தியா – இங்கிலாந்து டி20 தொடருக்கு இடையில் ஜிம்பாப்வேக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை (Indian Cricket Team) இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) இன்று அதாவது 2026 ஜூலை 6ம் தேதி அறிவித்தது. இந்தத் தொடரானது வருகின்ற 2026 ஜூலை 23ம் தேதி முதல் தொடங்குகிறது. விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் அணியில் இடம்பெறாத நிலையில், வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், இதுவரை இந்திய அணிக்காக அறிமுக வீரர்களாக இல்லாத பல ஐபிஎல் வீரர்களும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ALSO READ: தூங்கும்போது தொடங்கும் இந்தியா – இங்கிலாந்து 3வது டி20.. எத்தனை மணிக்கு முதல் பந்து வீசப்படும்?

ஜிம்பாப்வே டி20 தொடருக்கான இந்திய அணி

ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), வைபவ் சூர்யவன்ஷி , அபிஷேக் சர்மா, திலக் வர்மா (துணை கேப்டன்), இஷான் கிஷன், சிவம் துபே, சூர்யன்ஷ் ஷெட்ஜ், ரின்கு சிங், ஹர்ஷ் துபே, வருண் சக்ரவர்த்தி, பிரின்ஸ் யாதவ், யாஷ் தாக்கூர், அசோக் சர்மா, மயங்க் யாதவ் மற்றும் பிரப்சிம்ரன் சிங்.

சஞ்சு சாம்சன் நீக்கம்:


இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சனும் ஆடும் லெவனில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக வைபவ் சூர்யவன்ஷிக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டது. சஞ்சு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இந்த முடிவைக் கேள்விக்குள்ளாக்கினர். டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றிய சஞ்சு, தொடர் நாயகன் விருதையும் வென்றார். ஆனால், தற்போது அவர் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு:

ஐபிஎல் தொடரில் சிறப்பாகச் செயல்பட்ட விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் பிரப்சிம்ரன் சிங் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். வலது கை தொடக்க ஆட்டக்காரரான பிரப்சிம்ரன் சிங், 14 போட்டிகளில் 510 ரன்கள் எடுத்ததோடு, சுமார் 170 என்ற எகானமி ரேட்டையும் வைத்துள்ளார். ஐபிஎல் 2026-ல் அறிமுகமான வேகப்பந்து வீச்சாளர் அசோக் ஷர்மாவும் இந்திய அணிக்காக அறிமுகமாகி, தனது வேகத்தால் அனைவரையும் கவர்ந்தார். அசோக் ஷர்மா மணிக்கு 154.2 கி.மீ வேகத்தில் பந்து வீசினார். இவருடன் ஆல்-ரவுண்டர் ஹர்ஷ் துபேவும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 2024-ல் அறிமுகமான மயங்க் யாதவ், இந்திய அணிக்காக இதுவரை 3 போட்டிகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ALSO READ: நெருங்கும் ஒருநாள் தொடர்.. இங்கிலாந்தில் காலடி வைத்த ரோஹித்.. வைரலாகும் தீவிர பயிற்சி வீடியோ!

இந்தியா-ஜிம்பாப்வே டி20 தொடர்

  • டி20 தொடரின் முதல் போட்டி 2026 ஜூலை 23 அன்று ஹராரேவில் நடைபெறும்.
  • 2வது டி20 போட்டி 2026 ஜூலை 25 ஆம் தேதி ஹராரேவில் நடைபெறும்.
  • 3வது டி20 போட்டி 2026 ஜூலை 26 ஆம் தேதி ஹராரேவில் நடைபெறும்.

Follow Us