AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ICC New Plan: இனி ஒருநாள் போட்டிகள் 18 மாதங்கள் மட்டுமே.. ஐசிசியின் புதிய எதிர்கால திட்டம்!

Cricket Future Plan: 4 ஆண்டு காலப்பகுதியில், வெறும் 18 மாதங்களில் ஒருநாள் போட்டிகளை நடத்தும் ஒரு வடிவத்தை ஐசிசி பரிசீலித்து வருகிறது. உலகக் கோப்பைக்கு முந்தைய 18 மாதங்கள் ஒருநாள் போட்டிகளுக்காகவும், மீதமுள்ள காலம் டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களுக்காகவும் ஒதுக்கப்படலாம்.

ICC New Plan: இனி ஒருநாள் போட்டிகள் 18 மாதங்கள் மட்டுமே.. ஐசிசியின் புதிய எதிர்கால திட்டம்!
ஐசிசியின் எதிர்கால கிரிக்கெட் திட்டம்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 06 Jul 2026 18:32 PM IST

ஐசிசி (ICC) கிரிக்கெட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பல்வேறு அப்டேட்களை கொண்டு வர தயாராகி வருகிறது. அதன்படி, ஒருநாள் போட்டிகள் முதல் டி20 வடிவங்கள் வரை, கண்ட அளவிலான போட்டிகளும் எதிர்பார்க்கப்படுகின்றன. கண்ட அளவிலான போட்டிகள் என்பது உதாரணத்திற்கு ஆசிய கண்டமும், ஆப்பிரிக்க கண்டமும் எதிர் எதிர் முனையில் விளையாடும். ஆசிய கண்டத்தில் இந்தியா (Indian Cricket Team), இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் ஒன்றாக இணைந்து ஒரே அணியாக கிரிக்கெட் விளையாடுவார்கள். ஃபிரான்சைஸ் கிரிக்கெட்டின் வளர்ந்து வரும் செல்வாக்கு மற்றும் விளையாட்டின் எதிர்காலம் குறித்து விவாதிக்க, ஐசிசி விரைவில் ஒரு கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளது. 2026 ஜூலை 8 முதல் 2026 ஜூலை 11 வரை நடைபெறும் இந்தக் கூட்டத்தில், முழு உறுப்பினர்களாக உள்ள 12 நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்துகொள்வார்கள்.

ALSO READ: வரலாற்றிலேயே முதல் முறை.. மோசமான சாதனையை சுமக்கும் ஷ்ரேயாஸ் ஐயர்!

தி கார்டியன் பத்திரிகையின் அறிக்கையின்படி, வரவிருக்கும் கூட்டத்தில் ஒருநாள் கிரிக்கெட், டி20 கிளப் சாம்பியன்ஷிப் போட்டிகள் மற்றும் பல இதர தலைப்புகள் குறித்து 12 நாடுகளுக்கும் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவாதங்கள் இன்னும் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும், ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்கு அனைத்து வாரியங்களும் பங்களிக்க வேண்டும் என ஐசிசி ஊக்குவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஐசிசியின் எதிர்கால சுற்றுப்பயணத் திட்டம்:

ஐசிசியின் எதிர்கால சுற்றுப்பயணத் திட்டம் 2027 ஆம் ஆண்டு வரை இறுதி செய்யப்பட்டுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, ஆண்கள் மற்றும் பெண்கள் டி20 உலகக் கோப்பைகள், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் பங்கேற்கும் பல முக்கியத் தொடர்களுக்கான அட்டவணை 2031 ஆம் ஆண்டு வரை இறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒருநாள் போட்டிகள் 18 மாதங்களுக்கு மட்டுமே..

4 ஆண்டு காலப்பகுதியில், வெறும் 18 மாதங்களில் ஒருநாள் போட்டிகளை நடத்தும் ஒரு வடிவத்தை ஐசிசி பரிசீலித்து வருகிறது. உலகக் கோப்பைக்கு முந்தைய 18 மாதங்கள் ஒருநாள் போட்டிகளுக்காகவும், மீதமுள்ள காலம் டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களுக்காகவும் ஒதுக்கப்படலாம். ஒவ்வொரு வடிவத்திற்கும் முக்கியத்துவம் அளிப்பதும், ஃபிரான்சைஸ் கிரிக்கெட்டுடன் தொடர்புடைய அட்டவணைச் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதும் இதன் நோக்கமாகும்.

ALSO READ: தூங்கும்போது தொடங்கும் இந்தியா – இங்கிலாந்து 3வது டி20.. எத்தனை மணிக்கு முதல் பந்து வீசப்படும்?

டி20 சாம்பியன்ஷிப் மற்றும் கான்டினென்டல் போட்டித்தொடர்
உலகெங்கிலுமிருந்து வரும் அணிகள் பங்கேற்கும் ஒரு உலகக் கிளப் சாம்பியன்ஷிப்பையும் நடத்த வாய்ப்புள்ளது. ஆசியக் கோப்பையைப் போலவே, வெவ்வேறு கண்டங்களைச் சேர்ந்த அணிகளுக்கிடையே கண்ட அளவிலான போட்டிகளும் நடத்தப்படலாம்.

Follow Us