AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

18 நாடுகளில் பரவும் புதிய கொரோனா வைரஸ்! WHO தீவிர கண்காணிப்பு!

WHO Monitors: PJ.2.1 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் இதுவரை 18 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதில் ஸ்பைக் புரதத்தில் 24 மரபணு மாற்றங்கள் இருப்பதால் உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. தற்போதைய ஆய்வுகளின்படி, இதனால் ஏற்படும் கூடுதல் சுகாதார ஆபத்து குறைவாக இருந்தாலும், அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.

18 நாடுகளில் பரவும் புதிய கொரோனா வைரஸ்!  WHO தீவிர கண்காணிப்பு!
கொரோனா வைரஸ்Image Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 23 Nov 2026 11:26 AM IST

உலக நாடுகளில் மீண்டும் கொரோனா வைரஸ் குறித்த கவனம் அதிகரித்துள்ளது. இதற்குக் காரணமாக PJ.2.1 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் உருவெடுத்துள்ளது. SARS-CoV-2 வைரஸின் JN.1 மரபணு குடும்பத்தைச் சேர்ந்த இந்தப் புதிய வகை, இதுவரை 18 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதன் பரவல் அதிகரித்து வருவதால், உலக சுகாதார அமைப்பு (WHO) தொடர்ந்து கண்காணித்து வருகிறது. குறிப்பாக, இந்த வைரஸில் ஸ்பைக் புரதத்தில் மட்டும் 24 மரபணு மாற்றங்கள் இருப்பது விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. உடல்நலக்குறைவு இருக்கும்போது மற்றவர்களிடம் நெருங்கிப் பழகுவதைத் தவிர்ப்பதும், பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசிகளைப் புதுப்பித்துக் கொள்வதும் பாதுகாப்பான நடைமுறைகளாகும்.

Also Read: இரவில் மட்டும் உள்ளங்கால்கள் தீயாய் எரிகிறதா? அலட்சியம் வேண்டாம்…

எப்படி பரவுகிறது?

கனடாவின் ஒன்டாரியோ பகுதியில் கடந்த 2026 மே மாதத்தில் PJ.2.1 வைரஸின் முதல் மாதிரி கண்டறியப்பட்டது. அதன்பிறகு அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இதன் பாதிப்பு பதிவாகியுள்ளது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் கனடாவில் இதன் பரவல் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸில் ஏற்பட்டுள்ள மரபணு மாற்றங்கள், மனித உடல் செல்களுடன் வைரஸ் இணையும் திறனை அதிகரிக்கக்கூடும் என ஆய்வகப் பரிசோதனைகள் சுட்டிக்காட்டுகின்றன. இருப்பினும், இதனால் மனிதர்களிடையே வேகமாகப் பரவும் என்று உறுதியாகக் கூறுவதற்கு இன்னும் போதிய ஆதாரங்கள் இல்லை.

தடுப்பூசிகளின் செயல்திறன் எப்படி?

புதிய வகை கொரோனா வைரஸ் என்பதால், ஏற்கெனவே செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் பாதுகாப்புத் திறன் குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆரம்பகட்ட ஆய்வுகளின்படி, PJ.2.1 வைரஸுக்கு எதிராக தடுப்பூசி மூலம் உருவாகும் நோய் எதிர்ப்பு ஆன்டிபாடிகள் செயல்படுவது தெரியவந்துள்ளது. எனவே, ஏற்கெனவே உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை இந்த வைரஸ் முழுமையாகத் தவிர்க்கும் என்பதற்கான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை. அதேசமயம், இதன் உண்மையான பாதிப்புகளை அறிய கூடுதல் ஆய்வுகள் தேவைப்படுகின்றன.

Also Read: இரவில் மட்டும் உள்ளங்கால்கள் தீயாய் எரிகிறதா? அலட்சியம் வேண்டாம்…

அச்சப்பட வேண்டுமா?

தற்போதைய ஆய்வுகளின்படி, PJ.2.1 வைரஸ் முந்தைய வகைகளைவிட அதிக தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை. உலக சுகாதார அமைப்பின் மதிப்பீட்டின்படி, இதனால் ஏற்படக்கூடிய கூடுதல் பொது சுகாதார ஆபத்து உலகளவில் குறைவாக உள்ளது. இருப்பினும், காய்ச்சல், இருமல், தொண்டை வலி, சுவாசப் பிரச்சினைகள் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் அலட்சியம் செய்யாமல் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். உடல்நலக்குறைவு இருக்கும்போது மற்றவர்களிடம் நெருங்கிப் பழகுவதைத் தவிர்ப்பதும், பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசிகளைப் புதுப்பித்துக் கொள்வதும் பாதுகாப்பான நடைமுறைகளாகும்.

Follow Us