AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“ஆணவப் படுகொலையைத் தடுக்க தனிச்சட்டம்”.. முதல்வர் விஜய்யுடன் விரிவான ஆலோசனை.. அமைச்சர் வன்னியரசு அதிரடி!

சுடுகாட்டுப் பிரச்சினைகள் மற்றும் நிலமற்ற ஏழை எளிய மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்குதல் ஆகிய இரண்டு முக்கிய அம்சங்களில் இந்த அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்த ஐந்து ஆண்டு கால ஆட்சிக்குள், மனைப்பட்டா இல்லாத அடித்தட்டு மக்கள் அனைவருக்கும் வீட்டு மனைப்பட்டா முழுமையாகக் கிடைப்பதற்கான தீவிர முன்முயற்சிகளை இந்த அரசு எடுத்து வருகிறது.

“ஆணவப் படுகொலையைத் தடுக்க தனிச்சட்டம்”.. முதல்வர் விஜய்யுடன் விரிவான ஆலோசனை.. அமைச்சர் வன்னியரசு அதிரடி!
முதல்வர் விஜய், அமைச்சர் வன்னியரசு
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 06 Jul 2026 13:20 PM IST

சென்னை, ஜூலை 06: தமிழ்நாட்டில் சாதியக் காரணங்களால் நிகழும் ஆணவப் படுகொலைகளை முற்றிலும் தடுத்து நிறுத்துவதற்குத் தனிச்சட்டம் கொண்டு வரப்படும் என்றும், இது குறித்து முதலமைச்சர் விஜயுடன் விரிவாக விவாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தமிழக சமூக நலத்துறை அமைச்சர் வன்னியரசு தெரிவித்துள்ளார். நடப்புச் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே இதற்கான சட்ட மசோதாவைக் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அரசு ஆலோசித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க : வாய்ப்பு தேடி ஓடும் ஓடுகாலி ஆதவ் அர்ஜுனா.. சட்ட நடவடிக்கை பாயும்.. கே.பி.முனுசாமி அதிரடி எச்சரிக்கை!

ஆணவப் படுகொலைக்கு தனிச்சட்டம்:

ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டத்தின் அவசியம் குறித்துப் பேசியதாவது, “ஆணவப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்தத் தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பதை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்த புதிய அரசு அமைந்த பிறகு, நான் சட்டமன்றத்தில் ஆற்றிய எனது முதல் உரையிலேயே இதற்கான கோரிக்கையை மிகத் தெளிவாகப் பதிவு செய்திருந்தேன்.

இது தொடர்பாக மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களிடம் நான் தனியாகப் பேசி, விரிவான கோரிக்கை மனு ஒன்றையும் அளித்துள்ளேன். கடந்த காலங்களில் ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக நாங்கள் பல்வேறு பெரிய போராட்டங்களை முன்னெடுத்தோம். அந்தப் போராட்டங்களின் விளைவாகவே, முன்னாள் நீதியரசர் கே.என். பாஷா தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. தற்போது அக்குழுவின் அறிக்கை மற்றும் பரிந்துரைகளைப் பெற்றுக்கொண்டு, இந்த நடப்புச் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே இது குறித்து அரசுத் தரப்பில் ஆலோசித்து, விவாதிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.”

44 தனித்தொகுதிகளின் மேம்பாடு:

தமிழ்நாட்டில் உள்ள 44 தனித்தொகுதிகள் (பட்டியலின மக்களுக்கான தொகுதிகள்) மற்றும் ஏற்காடு, சேர்ந்தமங்கலம் உள்ளிட்ட பழங்குடியின மக்களுக்கான தொகுதிகளின் வளர்ச்சி, பொதுத் தொகுதிகளை விடக் குறைவாகவே இருந்து வருகிறது என்ற விமர்சனம் குறித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், கூடுதல் நிதி ஒதுக்கீடு: இந்த மாத இறுதியில் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில், சமூக நலத்துறை சார்பில் எளிய மற்றும் அடித்தட்டு மக்களுக்கான திட்டங்களுக்குக் கடந்த காலங்களை விடக் கூடுதல் கவனம் செலுத்தப்படும். இதற்காக பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.

அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு:

எளிய மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளாக இருக்கும் சுடுகாட்டுப் பிரச்சினைகள் மற்றும் நிலமற்ற ஏழை எளிய மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்குதல் ஆகிய இரண்டு முக்கிய அம்சங்களில் இந்த அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்த ஐந்து ஆண்டு கால ஆட்சிக்குள், தமிழ்நாட்டில் மனைப்பட்டா இல்லாத அடித்தட்டு மக்கள் அனைவருக்கும் வீட்டு மனைப்பட்டா முழுமையாகக் கிடைப்பதற்கான தீவிர முன்முயற்சிகளை இந்த அரசு எடுத்து வருகிறது.

இதையும் படிக்க: தவெகவில் இணைந்த திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த் – தமிழக அரசியலில் பரபரப்பு

அடித்தட்டு மக்களுக்கான அரசு:

“ஒடுக்கப்பட்ட மற்றும் எளிய மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் இடத்திலிருந்து, தற்போது சட்டம் இயற்றும் இடத்திற்கு நாங்கள் வந்துள்ளோம். எங்களது ஆட்சியில் அடித்தட்டு மக்களின் பிரச்சினைகளைக் கொண்டு செல்வதோடு மட்டுமன்றி, அவற்றுக்கு மிகச் சிறந்த முறையில் தீர்வு காணவும் தொடர்ந்து முயன்று வருகிறோம். இந்த பட்ஜெட் கூட்டத்தொடருக்குப் பிறகு, தமிழ்நாட்டில் உள்ள மிக முக்கியமான மற்றும் தீவிரமான சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான மிக முக்கிய மைல்கல்லாக இந்த அரசு விளங்கும்” என்று அமைச்சர் வன்னியரசு தனது பேட்டியில் ஆணித்தரமாகக் குறிப்பிட்டுள்ளார்.

Follow Us